போயிங் 737 MAX ரக விமானங்களை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த அமெரிக்க மத்திய விமானத்துறை நிர்வாகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
20 மாத மறுஆய்வுக்குப் பிறகு இந்த புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. 2018ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தோனேசியாவின் லயன் ஏர் விமானம் ஜாவா கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அதன் பிறகு சுமார் 5 மாதங்கள் கழித்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் விழுந்து நொறுங்கியது. அவை இரண்டும் போயிங் 737 Max ரக விமானங்கள் தான். அந்த இரு விபத்துகளினால் 346 பேர் பலியாகினர்.

அதனைத் தொடர்ந்து கடந்தாண்டு மார்ச் மாதம் அந்த ரக விமானங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டது. தற்போது, அந்த போயிங் நிறுவனத்திற்கு அந்த ரக விமானங்களுக்கான முக்கிய மென்பொருளையும், கணினிகளையும் மேம்படுத்த உத்தரவிட்டுள்ளது.
மேலும் மென்பொருள் பயிற்சி மற்றும் விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த இரு விதிமுறைகளும் பின்பற்றப்பட்டிருப்பது உறுதியான பின்னரே, அந்த ரக விமானங்களை மீண்டும் சேவையில் ஈடுபடுத்த முடியும். இது வணிக விமான வரலாற்றில் மிக நீண்ட ஒரு திட்டமாகும்.
ஆனால் விமானத்தின் கட்டமைப்பு ரீதியான பிரச்சினைகள் ஆராயப்படவேண்டும் என்று ஒரு தரப்பினர் கோரியுள்ளனர். இதற்கிடையே நிர்வாகத்தின் முடிவு குறித்து விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் வருத்தம் தெரிவித்துள்ளன. அந்த ரக விமானங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தற்போது எடுக்கப்பட்டிருக்கும் நடவடிக்கைகள் போதுமானவை அல்ல என்பது அவர்களின் வாதம்.
சரி இதற்கும் ஸ்பைஸ்ஜெட்டுக்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? ஸ்பைஸ்ஜெட் அதன் பட்டியலில் 13 விமானங்களை கொண்டுள்ளது. இது அமெரிக்காவின் தடைக்கு பிறகு 2019 முதல் தரையிறக்கப்பட்டன. இந்த நிலையில் புதன்கிழமையிலிருந்து இந்த பங்கு விகிதம் 28.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதற்கிடையில் நவம்பர் 17 தேதியிட்ட உலகளாவிய தரகு நிறுவனமான ஹெச்எஸ்பிசி, ஸ்பைஸ்ஜெட்டை குறைத்தல் என்பதில் இருந்து, வாங்க என்றும் மேம்படுத்தியுள்ளது. அதன் இலக்கு விலையை 26.50 ரூபாயில் இருந்து, 80 ரூபாயாக உயர்த்தியது. ஏனெனில் இந்த பட்ஜெட் விமானத்தின் நெருக்கடிகள் குறைந்துவிட்டது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆக அடுத்த நிதியாண்டின் முதல் காலாண்டிற்குள் இந்த நிறுவனத்தின் போயிங் ரக விமானம் செயல்பாட்டினை மீண்டும் தொடங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்த நிறுவன பங்கின் விலை ஏற்றம் கண்டுள்ளது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications