Go First திவால்: நேரம் பார்த்து காய்நகர்த்தும் ஸ்பைஸ்ஜெட்.. காணாமல் போன 27 இந்திய விமான நிறுவனங்கள்..!

இந்தியாவில் பிரபலமான விமான சேவை நிறுவனமான கோ பர்ஸ்ட் எண்ணெய் நிறுவனங்களுக்கு தான் வாங்கிய விமான எரிபொருளுக்கு பணத்தை திருப்பி செலுத்த முடியாத காரணத்தாலும், விமான இன்ஜின் கோளாறு காரணமாக பெரும் பகுதி விமானங்கள் தரையிறக்கப்பட்டு ஒட்டுமொத்த நிறுவனமும் முடங்கியது மட்டும் அல்லாமல் திவாலானதாக அறிவித்துள்ளது.

இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள முடிவு செய்த Go First நிறுவனத்தின் வர்த்தக இடத்தை நிரப்ப ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மத்திய அரசிடம் 400 கோடி ரூபாய் கடனை பெற்று இந்நிறுவனம் தரையிறக்கப்பட்ட 25 விமானங்களை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த 25 விமானங்கள் மூலம் கோ பர்ஸ்ட் இடத்தை கட்டாயம் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தால் நிரப்ப முடியும்.

Go First திவால்: நேரம் பார்த்து காய்நகர்த்தும் ஸ்பைஸ்ஜெட்.. காணாமல் போன 27 இந்திய விமான நிறுவனங்கள்!

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மத்திய அரசின் Emergency Credit Line Guarantee Scheme (ECLGS) வாயிலாக பெற உள்ளது. இந்த அறிவிப்பு வெளியான நிலையில் புதன்கிழமை வர்த்தகத்தில் ஸ்பைஸ்ஜெட் பங்குகள் 4.2 சதவீதம் வரையில் உயர்ந்தது. இன்றைய வர்த்தகத்தில் 1.63 சதவீதம் உயர்ந்து 32.245 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. இதேவேளையில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் 52 வார உயர்வான விலை 54.05 ரூபாய்.

இந்தியாவில் விமான சேவை பல வருடமாக இருந்தாலும், இதில் பெரிய அளவில் வெற்றிப்பெற்றது என்னவோ சில நிறுவனங்கள் மட்டுமே. ஆனால் இத்துறையில் இறங்க வேண்டும் என ஆர்வம் காட்டிய நிறுவனங்கள் ஏராளம். கடந்த 30 வருடத்தில் சுமார் 27 இந்திய விமான நிறுவனங்கள் மூடப்பட்டோ, இணைக்கப்பட்டோ, கைப்பற்றப்பட்டோ காணாமல் போய் உள்ளது.

காணாமல் போன இந்திய விமான நிறுவனங்கள் பட்டியலில் முதல் இடத்தை பெறுவது ஈஸ்ட் வெஸ்ட் டிராவல்ஸ் & டிரேட் லிங்க் லிமிடெட் இந்த நிறுவனம் துவங்கப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நவம்பர் 1996 இல் தனது ஆப்ரேஷன்ஸ்-ஐ நிறுத்தியது. அதே ஆண்டில் தான் ModiLuft லிமிடெட் என்ற நிறுவனமும் தனது வர்த்தகத்தை மொத்தமாக நிறுத்தியது.

Zexus Air Services நிறுவனம் Zoom Air என்ற பெயரில் இயங்கி வந்தது, டெக்கான் சார்ட்டர்ட் பிரைவேட் லிமிடெட் மற்றும் ஏர் ஒடிஷா ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட் ஆகிய 3 நிறுவனங்களும் 2020 இல் தனது வர்த்தகத்தை மூடியது. இதை தொடர்ந்து ஹெரிடேஜ் ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட் 2022இல் முடங்கியது.

Go First திவால்: நேரம் பார்த்து காய்நகர்த்தும் ஸ்பைஸ்ஜெட்.. காணாமல் போன 27 இந்திய விமான நிறுவனங்கள்!

ஜெட் ஏர்வேஸ் ஏப்ரல் 2019 இல் தனது செயல்பாடுகளை நிறுத்தியது,
ஜெட் லைட் இந்நிறுவனம் முன்பு சஹாரா ஏர்லைன்ஸ் என்ற பெயரில் இயங்கி வந்தது 2019 இதன் செயல்பாடுகளை நிறுத்தியது. 2012ல் கிங்பிஷர் ஏர்லைன்ஸ் முடங்கியது, இதோடு 2008 கிங்பிஷர் கைப்பற்றிய ஏர் டெக்கான் நிறுவனமும் இதனுடன் சேர்ந்து முடங்கியது.

1996ல் NEPC Micon, 1997ல் Skyline NEPC Ltd அல்லது Damania Airways, 2000ஆம் ஆண்டில் Lufthansa Cargo India ஆகியவை முடங்கியது. இதை தொடர்ந்து Air Carnival, Air Pegasus, Religare Aviation Ltd, Air Costa மற்றும் Quikjet Cargo Airlines ஆகிய 5 விமான நிறுவனங்கள் 2017ல் தனது சேவையை முடக்கியது. 2014ல் டெக்கான் கார்கோ & எக்ஸ்பிர்ஸ், 2011ல் ஆர்யன் எக்ஸ்பிரஸ், 2010ல் Paramount Airways, 2009ல் MDLR Airlines, 2008ல் Jagson Airlines, 2007ல் Indus Airways சேவையை முடக்கியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+