இந்தியாவை சேர்ந்த விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ் ஜெட், நிறுத்தி வைத்திருக்கும் 10 விமானங்களை மீண்டும் சேவைக்கு கொண்டு வருவதற்கான பணிகளை தீவிர படுத்தியுள்ளது. இதன்படி ஏப்ரல் மாதத்திற்குள் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் 10 விமானங்களை மீண்டும் சேவைக்கு கொண்டு வர இருக்கிறது.
2024 அக்டோபர் மாதத்தில் இருந்து ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தங்களுடைய விமான சேவையை விரிவாக்கம் செய்து வருகிறது. அந்த வகையில் கூடுதலாக 10 விமானங்களை அண்மையில் தான் தங்கள் சேவையில் இணைத்தது. இதில் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மூன்று விமானங்களோடு, புதிதாக ஏழு விமானங்களை குத்தகைக்கு எடுத்தது. ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அண்மையில் தான் அமெரிக்காவை சேர்ந்த என்ஜின் பராமரிப்பு நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டது.

தற்போது பயன்படுத்தாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் விமானங்களை சீரமைப்பு செய்து மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது என இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை தீவிர படுத்திருப்பதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்தின் மேலாண் இயக்குனர் அஜய் சிங் தெரிவித்துள்ளார். எக்கனாமிக் டைம்ஸ்க்கு பேட்டி அளித்துள்ள அவர் ஏப்ரல் மாத மத்தியில் மேலும் 10 விமானங்கள் சேவைக்கு கொண்டு வரப்படும் எனக் கூறியுள்ளார்.
ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மீண்டும் வந்து வளர்ச்சி பாதையை நோக்கி செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார். லட்சக்கணக்கான இந்திய மக்களுக்கு குறைந்த கட்டணத்தில் விமான சேவை வழங்க வேண்டும் என்ற பாதையை நோக்கி நாங்கள் பயணித்து வருகிறோம் என அஜய் சிங் கூறியுள்ளார். ஜனவரி 10ஆம் தேதி நிலவரப்படி ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மொத்தம் 62 விமானங்களை சொந்தமாக வைத்திருக்கிறது. இதில் 28 விமானங்கள் செயல்பாட்டில் இருக்கின்றன.
தற்போது பயன்பாட்டில் இருப்பதில் 20 விமானங்கள் Boeing B737 மாடல், 6 விமானங்கள் De Havilland Canada DHC-8 Dash 8, இரண்டு விமானங்கள் Airbus A320s ஆகும். மீதமுள்ள 34 இல் 16 விமானங்கள் Boeing B737 , 18 விமானங்கள் DHC-8 Dash 8 ஆகும். இந்த 34 விமானங்களும் பல்வேறு காரணங்களுக்காக அங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கூடிய விரைவில் தங்கள் நிறுவனம் பல்வேறு புதிய பாதைகளில் விமானத்தை இயக்கப் போகிறது என்று ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் கூறுகிறது.
ஸ்பைஸ் ஜெட் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான உள்நாட்டு பயணிகள் பயணம் செய்த ஆறாவது பெரிய விமான சேவை நிறுவனம் என்ற பெருமை கொண்டது. 73 பகுதிகளை இணைக்கும் வகையில் விமான சேவை வழங்கி வருகிறது.
இதில் இந்தியாவை சேர்ந்தவை 60 இடங்கள் வெளிநாடுகளில் 13 இடங்களுக்கு ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் விமான சேவை வழங்குகிறது. 2021 ஆம் ஆண்டு மிகப்பெரிய நஷ்டத்தை சந்தித்த இந்நிறுவனம் விமான சேவைகளை குறைத்து கொண்டது. இந்த நிறுவனம் படிப்படியாக மீண்டு வருகிறது.
Story written by: Devika
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications