இந்தியாவின் மலிவு விலை விமான சேவை நிறுவனமான ஸ்பைஸ்ஜெட் கொரோனாவுக்கு பின் தனது விமான போக்குவரத்து சேவையை விரிவாக்கம் செய்யத் திட்டமிட்டு ஜூலை 10 முதல் 30ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 42 புதிய உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வழித்தடத்தில் விமான சேவையை அறிமுகம் செய்ய உள்ளது.
வியாழக்கிழமை ஸ்பைஸ்ஜெட் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி சூரத் - ஜபல்பூர் மற்றும் சூரத் - புனே வழித்தடத்தில் புதிதாக விமானச் சேவையை இயக்க உள்ளதாக அறிவித்துள்ளது.

இதன் மூலம் ஸ்பைஸ்ஜெட் சூரத்-ல் இருந்து ஜெய்ப்பூர், ஹைதராபாத், பெங்களூர், குவாலியர், அகமதாபாத், மும்பை, புனே ஆகிய நகரங்களைத் தனது விமானச் சேவை மூலம் இணைக்க உள்ளது.
இதோடு குவாலியர் - அகமதாபாத், குவாலியர் - மும்பை, குவாலியர் - புனே ஆகிய வழித்தடத்திலும் புதிதாகச் சேவை துவங்கியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று காரணமாக 2020ல் சுமார் 2 மாதம் மொத்த விமான சேவையையும் முடக்கிய நிலையில், மெல்ல மெல்ல வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வருகிறது ஸ்பைஸ்ஜெட்.
இன்னமும் இந்தியாவில் விமான சேவையில் பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்து வரும் நிலையில், தினமும் 1400 உள்நாட்டு விமான சேவைகளை இயக்கி வருகிறது இந்திய விமான சேவை நிறுவனங்கள்.


Click it and Unblock the Notifications