இந்திய விமான போக்குவரத்து சேவையில் மாஸ்காட்டி வந்த ஸ்பைஸ்ஜெட் கொரோனா தொற்று பிரச்சனைக்குப் பின்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வரும் வேளையில் 2026 ஆம் ஆண்டுக்குள் 100 விமானங்களைக் கொண்ட பெரும் நிறுவனமாக மாறும் என அதன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அஜய் சிங் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடியில் மாட்டிக்கொண்டு இருக்கும் ஸ்பைஸ்ஜெட், ஊழியர்களுக்கான சம்பளம், விமான நிலையத்தில் நிலுவைத் தொகை, புதிய விமானங்களுக்கான குத்தகை தொகை ஆகியவற்றுக்கான நிதி ஆதாரத்தைத் திரட்ட நிறுவனத்தின் பங்குகள் விற்பனை மூலம் சுமார் ரூ.3000 கோடி நிதியைத் திரட்டியது, இதை தொடர்ந்து தான் அஜய் சிங் 100 விமானங்கள் கொண்ட நிறுவனமாக மாறும் என்ற அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

"ஸ்பைஸ்ஜெட் வலுவான அடித்தளம் கொண்ட விமானச் சேவை நிறுவனம். ஆனால் போயிங் 737 மேக்ஸ் விமானங்கள் உலகளாவிய ரீதியாகத் தடை செய்யப்பட்டதும், அதைத் தொடர்ந்து கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டதும் எங்களுடைய வளர்ச்சியைப் பாதித்தன," என்று அஜய் சிங் கூறினார்.
"ஆனால் 100 விமானங்களைக் கொண்ட பெரும் நிறுவனமாக மாற தேவையான அனைத்து உள்கட்டமைப்புகளும் எங்களிடம் தயாராக உள்ளன. விமான நிலையத்தில் பார்க்கிங் இடங்கள், சர்வதேச விமான போக்குவரத்து உரிமைகள், விமானிகள் மற்றும் கேபின் க்ரூ, விமான பராமரிப்பு உள்கட்டமைப்பு ஆகியவற்றை நாங்கள் கொண்டுள்ளோம்" என்றும் அஜய் சிங் மிகவும் நம்பிக்கை உடன் கூறினார்.
இவை அனைத்தையும் விட முக்கியமாக, இந்த சந்தையில் பயணிகளுக்கு விமான சேவை அளிக்க போதுமான விமானங்கள் இல்லாத போது, எங்களிடம் 30 விமானங்கள் தரையில் நிறுத்தப்பட்டுள்ளன என்றும் அஜய் சிங் ஸ்பைஸ்ஜெட் வலிமை குறித்துக் கூறினார்.
ஸ்பைஸ்ஜெட் சனிக்கிழமை தகுதிவாய்ந்த நிறுவனப் பங்கு முதலீட்டாளர்களுக்கு (QIP) வெற்றிகரமாக 3000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து நிதியை திரட்டியுள்ளது. இந்த முதலீட்டு சுற்றில் டாடா மியூச்சுவல் பண்ட், டிஸ்கவரி குளோபல் மற்றும் கோல்டுமேன் சாக்ஸ் போன்ற பல முதலீட்டு நிறுவனங்கள் பங்கேற்றன.
இந்த பங்கு விற்பனைக்கு பின்பும் அஜ்ய் சிங் ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தில் சுமார் 35% பங்குகளை வைத்துள்ளார். ஸ்பைஜெட்-ன் அதிரடி கம்பேக் இந்தியாவின் விமான போக்குவரத்துத் துறைக்கும் முக்கியமானது.
இந்திய விமான போக்குவரத்து சந்தையில் தற்போது இண்டிகோ மற்றும் ஏர் இந்தியா குரூப் ஆகிய 2 நிறுவனங்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த நிலையில் ஸ்பைஸ்ஜெட் தனது விமான எண்ணிக்கையை அதிகரிப்பது மூலம் கூடுதல் சந்தை பங்கீட்டை பெறும். ஆகஸ்ட் மாத இறுதியில், ஸ்பைஸ்ஜெட் இந்தியாவின் உள்நாட்டு விமான போக்குவரத்து சந்தையில் 2%க்கும் குறைவான பங்கை கொண்டிருந்தது. 2021 இல் இது 10.5% ஆக இருந்தது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications