Spotify-ஐயும் விட்டு வைக்காத 'ரெசிஷன்' வைரஸ்.. 600 ஊழியர்கள் பணிநீக்கம்..!

உலகின் முன்னணி மியூசிக் ஸ்ட்ரீமிங் நிறுவனமான Spotify Technology நிறுவனம் திங்கட்கிழமை தனது பணியாளர்களில் 6 சதவீத பேரை மொத்தமாகப் பணிநீக்கம் செய்துள்ளது. இதன் மூலம் சுமார் 600 ஊழியர்கள் தங்கள் வேலை வாய்ப்பை இழந்து நிறுவனத்தை விட்டு வெளியேற உள்ளனர்.

உலகின் முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் பொருளாதார மந்தநிலைக்குத் தயாராகும் வேளையில் டெக் துறையில் இருக்கும் பிரபலமான நிறுவனங்கள் அனைத்தும் பணிநீக்க அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

ஏற்கனவே FAANG நிறுவனங்கள் பெரும் பணிநீக்க அறிவிப்புகளை வெளியிட்டு உள்ள நிலையில், தற்போது எண்டர்டெயின்மென்ட் துறையில், குறிப்பாக இளம் தலைமுறையினரை அதிகம் ஈர்த்து வைத்திருக்கும் Spotify பணிநீக்க அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

Spotify நிறுவனம்

Spotify நிறுவனம்

Spotify நிறுவனத்தில் அனைத்து மட்டத்திலும் நிர்வாகம் மறுசீரமைப்பு நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில் இதன் ஒரு பகுதியாக 600 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டது மட்டும் அல்லாமல் அதன் தலைமை கண்டென்ட் மற்றும் விளம்பர வணிக அதிகாரியான Dawn Ostroff நிறுவனத்தை விட்டு வெளியேறியுள்ளார்.

9800 மொத்த ஊழியர்கள்

9800 மொத்த ஊழியர்கள்

செப்டம்பர் 30 வரையிலான காலகட்டத்தில் Spotify நிறுவனத்தில் சுமார் 9800 பேர் முழுநேர ஊழியர்களாக இருந்தனர். தற்போது அறிவிக்கப்பட்ட பணிநீக்கம் மூலம் severance pay தொடர்பாகச் சுமார் 35 மில்லியன் யூரோக்கள் ($38.06 மில்லியன்) முதல் 45 மில்லியன் யூரோக்கள் வரையிலான தொகை செலவாகும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.

உயர் அதிகாரி

உயர் அதிகாரி

Spotify நிறுவனத்தில் 600 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டது மட்டும் அல்லாமல் அதன் தலைமை கண்டென்ட் மற்றும் விளம்பர வணிக அதிகாரியான Dawn Ostroff நிறுவனத்தை விட்டு வெளியேறிய அறிவிப்பு மூலம் ப்ரீமார்க்கெட் வர்த்தகத்தில் நிறுவனத்தின் பங்குகள் 3.5 சதவீதம் உயர்ந்தன.

தொற்றுநோய் காலம்

தொற்றுநோய் காலம்

இரண்டு வருடம் தொற்றுநோய் காலத்தில் Spotify நிறுவனத்தின் வளர்ச்சிக்கு மிகப்பெரிய அளவில் இருந்தது. இக்காலகட்டத்தில் Spotify நிறுவனம் மட்டும் அல்லாமல் அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களும் அதிகப்படியான ஊழியர்களைப் பணியில் அமர்த்தினர்.

வர்த்தக வளர்ச்சி

வர்த்தக வளர்ச்சி

ஆனால் கொரோனாவுக்குப் பின்பு இந்த வர்த்தக வளர்ச்சி நிலையாக இல்லாமல் இருந்தது மட்டும் அல்லாமல் இது பெரிய அளவில் சரிவை கண்டது. இதனாலே தற்போது Spotify மட்டும் அல்லாமல் மைக்ரோசாப்ட் கார்ப் முதல் மெட்டா பிளாட்பார்ம்ஸ் வரையில் ஊழியர்களை ஆயிரக்கணக்கில் பணிநீக்கம் செய்து வருகிறது.

ஸ்வீடன்

ஸ்வீடன்

ஸ்வீடன் நாட்டைத் தளமாகக் கொண்ட Spotify, விரைவான வட்டி விகித உயர்வுகள் மற்றும் ரஷ்யா-உக்ரைன் போர் எதிரொலியாக உருவான பொருளாதாரப் பாதிப்பால் விளம்பரதாரர்கள் செலவினங்களைக் குறைத்த நிலையில் வருவாயில் ஓட்டை விழுந்த காரணகத்தால் பணிநீக்கம் செய்துள்ளது.

4 பெரிய டெக் நிறுவனங்கள்

4 பெரிய டெக் நிறுவனங்கள்

உலகின் டாப் 4 பெரிய டெக் நிறுவனங்கள் 2023 ஆம் ஆண்டுத் துவங்கி 20 நாள் மட்டுமே ஆன நிலையில் அமேசான் 18000 ஊழியர்கள், மைக்ரோசாப்ட் 10000 ஊழியர்கள், கூகுள் 12000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்துப் பெரும் அதிர்ச்சி கொடுத்தது.

பேஸ்புக்

பேஸ்புக்

2022ல் பேஸ்புக் தாய் நிறுவனமான மெட்டா 11000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்தது, அமேசான் 10000 ஊழியர்களைப் பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+