உலகின் முன்னணி டெக் சேவை நிறுவனங்கள் AI மற்றும் புதிய தொழில்நுட்பங்களின் உதவி காரணமாகப் பல பணிகளை ஆட்டோமேஷன் செய்து வருகிறது. இதுமட்டும் அல்லாமல் பல டெக் நிறுவனங்களின் வர்த்தகம் பெரிய அளவில் குறைந்துள்ளது இதனால் 2022 கடைசிக் காலாண்டில் இருந்து தொடர்ந்து பணிநீக்கம் செய்து வருகிறது.
இந்த நிலையில் இசை உலகில் பெரும் புரட்சியைச் செய்த Spotify நிறுவனம் தற்போது இளைஞர்கள் தினசரி பயன்படுத்தும் முக்கியச் செயலியாக உள்ளது. Spotify கடந்த 5 வருடத்தில் ஐரோப்பா-வை தாண்டி உலகளவில் வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் 2023 ஆம் ஆண்டில் ஏற்கனவே 2 முறை ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ள வேளையில் தற்போது 3வது முறையாக ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது.

Spotify நிர்வாகம் இந்த முறை 17 சதவீத ஊழியர்கள் அதாவது சுமார் 1,500 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளது என்று இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான டேனியல் எக் திங்களன்று மியூசிக் -ஸ்ட்ரீமிங் நிறுவனத்தின் மாற்றங்கள் குறித்த அறிக்கையில் தெரிவித்தார்.
சவாலான பொருளாதாரச் சூழலைக் காரணம் காட்டி, ஜனவரி மாதம் 600 ஊழியர்களை பணிநீக்கம் செய்த நிலையில், ஜூன் மாதம் 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 3வது முறையாகச் சுமார் 1500 பணியாளர்களைப் பணிநீக்கம் செய்துள்ளது Spotify நிர்வாகம்.
இதுமட்டும் அல்லாமல் அக்டோபர் 2022 இல், அதன் கிம்லெட் மீடியா மற்றும் பார்காஸ்ட் போட்காஸ்ட் ஸ்டுடியோக்களில் இருந்து 38 பணியாளர்களைப் பணிநீக்கம் செய்தது குறிப்பிடத்தக்கது.
2023 ஆம் ஆண்டு மார்ச் காலாண்டுக்குப் பின்பு பெரும் டெக் நிறுவனங்களில் பணிநீக்கம் செய்யும் போக்கு கடந்த மூன்று மாதங்களில் அதிகரித்துள்ளது. பல்வேறு பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்ய முடிவு செய்யத் தீவிரமாக உள்ளனர் இதற்கான காரணம் என்ன..?
பொருளாதார மந்தநிலை : உலகளவில் பெரும் வல்லரசு நாடுகள் பொருளாதாரம் மந்தநிலையை எதிர்கொண்டு வருகிறது. இதன் காரணமாக நிறுவனங்கள் தங்கள் செலவுகளைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் தள்ளப்பட்டு, தனது சந்தை மதிப்பு, முதலீட்டாளர்களைக் காக்கும் பொருட்டு ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து செலவுகளைக் குறைத்து வருகிறது.
தொழில்நுட்ப மாற்றம் : இதேபோல் டெக் துறையில் தொழில்நுட்பம் வேகமாக மாறிக்கொண்டே வருகிறது. இதன் காரணமாகப் பழைய தொழில்நுட்பங்களில் திறமை பெற்ற ஊழியர்களுக்கு வேலை இழக்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக ஏஐ, மெஷின் லேர்னிங் ஆகியவை எளிதாக அனைத்துத் தரப்பு நிறுவனத்தாலும் அணுகக்கூடியதாக மாறியிருக்கும் வேளையில் ஊழியர்களின் தேவை பல இடத்தில் குறைந்து வருவதை ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும்.
வேலைவாய்ப்புக் குறைவு : பொருளாதார மந்தநிலை மற்றும் தொழில்நுட்ப மாற்றம் ஆகியவற்றால் தொழில்நுட்ப துறையில் தற்போது பிரஷ்ஷர்களுக்கும், அதிகப்படியான சம்பளத்தில் வேலைவாய்ப்புகள் குறைந்து வருகின்றன.
புதிய தொழில்நுட்பங்கள் உருவாகி வருவதால் பழைய வேலைகள் குறைந்து வருகின்றன. மேலும், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து வேலைகளை வெளிநாடுகளுக்கு மாற்றி வருகின்றன.


Click it and Unblock the Notifications