முதலீட்டாளர்களே ரெடியா..? SME பிரிவில் இன்று வெளியாகும் பேக்கேஜிங் நிறுவனத்தின் ஐபிஓ..!

சமீபகாலமாக ஐபிஓ சந்தைகளில் ஏராளமான நிறுவனங்களின் ஐபிஓக்கள் வரிசைகட்டி வந்து கொண்டிருக்கும் நிலையில், இன்று SME பிரிவில் எஸ்பிபி பாலிமர்ஸ் (SPP Polymer)நிறுவனத்தின் IPOசந்தாவிற்காக திறக்கப்படுகிறது. இந்த புதிய பங்கு வெளியீட்டின் மூலம் அந்த நிறுவனம் ரூ.24 கோடியை திரட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் பல்வேறு தொழில்களுக்கு பேக்கேஜிங் தீர்வுகளை வழங்குகிறது. இந்த நிறுவனம் தேசிய பங்குச் சந்தையின் SME தளத்தில் பங்குகளை பட்டியலிட திட்டமிட்டுள்ளது. இன்று தொடங்கும் ஐபிஓ ஆனது வரும் செப்டம்பர் 12 உடன் முடிவடைகிறது. பங்குகளின் விலை ஒவ்வொன்றும் ரூ.59 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஐபிஓ வெளியீட்டில் முதலீட்டாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான சில விஷயங்களை இங்கே காணலாம்.

SPP பாலிமர் ஐபிஓ முழுவதுமாக 41.5 லட்சம் பங்குகளின் புதிய பங்கு வெளியீட்டிற்காகவும் இந்த வெளியீட்டின் மூலம், நிறுவனம் ரூ.45 கோடி திரட்டவும் திட்டமிட்டுள்ளது. இதன் ஐபிஓ விலையை பொருத்தவரை நிறுவனம் அதன் பங்குகளை ஒவ்வொன்றும் 59 ரூபாய்க்கு வழங்குகிறது. இதில் முதலீட்டாளர்கள் 1 லாட்டில் 2000 பங்குகளுக்கு ஏலம் எடுக்கலாம். பட்டியலிடப்படாத சந்தையில், நிறுவனத்தின் பங்குகள் ரூ.25 ஜிஎம்பியுடன் வர்த்தகம் செய்யப்படுகின்றன. இது வெளியீட்டு விலையை விட 42% பிரீமியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஐபிஓவில் சுமார் 50% சில்லறை முதலீட்டாளர்களுக்கும், மீதமுள்ள 50% மற்ற முதலீட்டாளர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.

முதலீட்டாளர்களே ரெடியா..? SME பிரிவில் இன்று வெளியாகும் பேக்கேஜிங் நிறுவனத்தின் ஐபிஓ..!

இந்த நிறுவனத்தை பொருத்தவரை சிமென்ட்கள், இரசாயனங்கள், உணவு தானியங்கள், சர்க்கரைகள், பாலிமர்கள், விவசாயம் மற்றும் பெரிய அளவில் பொருட்களை பேக்கேஜிங் செய்வதற்கு பல்வேறு தொழில்களுக்கு சேவை செய்யும் பிசினஸ் டு பிசினஸ் (B2B) உற்பத்தியாளர்களுக்கு நிறுவனம் பேக்கேஜிங் தீர்வுகளை வழங்குகிறது. நிறுவனம் இந்தியாவில் காகிதம் மற்றும் பேக்கேஜிங் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. எதிர்கால விரிவாக்கத்திற்கான குறிப்பிடத்தக்க சாத்தியக்கூறுகளை கொண்டுள்ளது. இந்தத் தொழில் 2019 இல் 50.5 பில்லியன் டாலர்களாக மதிப்பிடப்பட்டது மற்றும் 2025 இல் இது 204.81 பில்லியன் டாலர்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது 2020 முதல் 2025 வரை 26.7% CAGR ஐப் பதிவு செய்கிறது. நிதி செயல்திறன் அடிப்படையில், நிறுவனம் மார்ச் 2024 இல் முடிவடைந்த ஆண்டில், நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ 91.75 கோடி மற்றும் நிகர லாபம் ரூ 99 லட்சம் ஆக உள்ளது.

இந்த பொதுச் சலுகையிலிருந்து கிடைக்கும் நிகர வருமானம், கடன்களைத் திருப்பிச் செலுத்துதல், செயல்பாட்டு மூலதனத் தேவைகள் மற்றும் பொது நிறுவன நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இதில் இண்டராக்டிவ் ஃபைனான்சியல் சர்வீசஸ் மேனேஜராகவும், Kfin டெக்னாலஜிஸ் பதிவாளராகவும் உள்ளது. ஐபிஓ செப்டம்பர் 10 ஆம் தேதி திறக்கப்பட்டு செப்டம்பர் 12 ஆம் தேதி முடிவடையும். ஐபிஓ இறுதி ஒதுக்கீடு செப்டம்பர் 13 ஆம் தேதி செய்யப்படும். நிறுவனத்தின் பங்குகள் செப்டம்பர் 17 ஆம் தேதி பட்டியலிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Disclaimer: The recommendations made above are by market analysts and are not advised by either the author, nor Greynium Information Technologies or GoodReturns. The author, nor the brokerage firm nor GoodReturns would be liable for any losses caused as a result of decisions based on this write-up. https://tamil.goodreturns.in/ advises viewers to consult with certified experts before making any investment decision.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+