கேரளா மாநிலத்தில் உள்ள ஸ்ரீ பத்மநாபசுவாமி திருக்கோவிலுக்கு வருமானவரித்துறை ஜூலை 2017-ஆம் ஆண்டு முதல் மார்ச் 2024-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் செலுத்த வேண்டிய ரூ.1.57 கோடி வரி பாக்கியை செலுத்தக் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 7 ஆண்டுகளாக பல்வேறு சேவைகளின் மூலம் பெறப்பட்ட வருமானத்தை கருத்தில் கொண்டு இந்த வரி பாக்கித் தொகை கணக்கிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியத்தின் கீழ் இயங்கும் ஜிஎஸ்டி இன்டெலிஜென்ஸ் டிபார்ட்மென்ட் ஆகஸ்ட் மாதம் இந்த நோட்டீஸை வெளியிட்டது. 2017-ஆம் ஆண்டின் ஜூலை 1-ஆம் தேதி முதல் 2024-ஆம் ஆண்டின் மார்ச் 31-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் வழங்கப்பட்ட அல்லது பெறப்பட்ட வரிவிதிப்புப் பொருட்களுக்காக ரூ.1,56,92,880 செலுத்தப்படாததற்கான காரணத்தை கோயில் நிர்வாகம் விளக்க வேண்டும் எனவும், வட்டி மற்றும் அபராதத்துடன் இந்த தொகை வசூலிக்கப்படும் என்றும் நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மொத்த தொகையில் மத்திய ஜிஎஸ்டி தொகை ரூ.77,00,203, மாநில ஜிஎஸ்டி ரூ.77,00,203 மற்றும் வெள்ள நிவாரண கட்டணம் ரூ. 2,92,474 ஆகியவை அடங்கும். அதுமட்டுமின்றி கோயிலுக்கு கிடைக்கும் வாடகை வருமானம், தெய்வ உருவப்படங்கள் ஆகியவற்றின் விற்பனை, கோயில் யானைகளுக்கான கட்டணம் ஆகியவற்றின் மீதும் கோயில் நிர்வாகம் வரி செலுத்தவில்லை என்று ஜிஎஸ்டி அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
கோயில் அதிகாரிகள் தங்கள் தரப்பில் ஸ்ரீ பத்மநாபசுவாமி திருக்கோயில் ஒரு மதத்தலமாக இருப்பதாகவும், கோயிலில் வழங்கப்படும் சேவைகள் வணிக நடவடிக்கைக்காக இல்லை என்றும் வாதிட்டனர். எனவே ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கூறினார். தற்போது கோயில் நிர்வாகத்தினர் அனுப்பப்பட்ட நோட்டீசுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள இந்த பத்மநாபசுவாமி கோயில் நாட்டின் இரண்டாவது பணக்கார கோயிலாகும். கோவிலில் உள்ள ஆறு பெட்டகங்களில் சுமார் 20 பில்லியன் டாலர் மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளதாக கூறப்படுகிறது. கோயிலின் கருவறையில் இருக்கும் விஷ்ணுவின் தங்க சிலை 500 கோடி ரூபாய் மதிப்புள்ளதாகவும் ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர கோவில் கருவூலத்தில் சாமிக்கு அணியப்படும் தங்க ஆபரணங்கள், வைர ஆபரணங்கள் மற்றும் விலை உயர்ந்த சிற்பங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications