இலங்கையில் மூன்று சோலார் மற்றும் காற்றாலை ஹைப்ரீடு மின் உற்பத்தி நிலையங்களை அமைக்க சீன நாட்டு நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தை இலங்கை அரசு ரத்து செய்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை இந்தியாவில் பெங்களூருவை சேர்ந்த ஒரு நிறுவனத்துக்கு அளித்துள்ளது.
இந்த மின் உற்பத்தி திட்டத்துக்கு ஏஷியன் டெவலப்மென்ட் பேங்க் நிதியளித்துள்ளது. அத்துடன் இந்திய அரசும் 11 மில்லியன் அமெரிக்க டாலர்களை கடனாக வழங்கியுள்ளது.
தனது அண்டை நாடுகளுடன் சீனா உறவு வைத்துக் கொள்வதை இந்தியா விரும்பவில்லை.

இந்நிலையில் இலங்கையின் இந்த மின் உற்பத்தி திட்டத்துக்கா சீனாவுடன் ஒப்பந்தம் செய்தது குறித்து இந்தியா கவலை தெரிவித்தது. இதைத் தொடர்ந்து இரண்டாண்டுகளுக்கு முன்பாக இந்தத் திட்டம் தாற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இப்போது ரத்து செய்யப்பட்டுவிட்டது.
பெங்களூருவை சேர்ந்த யூ-சோலார் என்ற நிறுவனம் இலங்கையின் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
இலங்கையில் அமையவிருக்கும் இந்த 3 சோலார் ஹைப்ரீடு மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் 2,230 கிலோவாட் புதுப்பிக்கத்தக்க மின் ஆற்றலை தயாரிக்க முடியும்.
யாழ்ப்பாணம், பூனரையான் பகுதியில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதுதவிர இந்தியாவின் நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பொரேஷன் இலங்கையின் கிழக்கு சம்பூர் நகரில் ஒரு சோலார் மின் உற்பத்தி நிலையத்தை அமைத்து வருகிறது.
அத்துடன் அதானி குழுமம் வடக்கில் மன்னார் மற்றும் பூனேரியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களை அமைக்கிறது.
மூன்றாவது எரிசக்தி திட்டம் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மார்ச் 2022 இல், இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெற்காசிய நாட்டுக்கு சென்றபோது இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தானது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், இந்தியா ஆட்சேபனைகளை எழுப்பியதை அடுத்து, இலங்கை தனது பிரத்தியேக பொருளாதார மண்டலத்துக்குள் (EEZ) நுழைவதற்கு சீன "ஆராய்ச்சிக் கப்பல்களுக்கு" ஓராண்டு தடை விதித்திருந்தது.
சீனக் கப்பல்கள் ஆராய்ச்சிப் பணியின் கீழ் இந்தியாவின் முக்கியமான ராணுவ மற்றும் கடற்படை சொத்துக்களை கண்காணிக்கும் என்று ஊகிக்கப்பட்டது. சீனக் கப்பல்களுக்கு விதிக்கப்பட்ட தடை, இந்தியாவுக்கு கிடைத்த பெரிய ராஜதந்திர வெற்றியாகவும், சீனாவுக்கு பெரும் பின்னடைவாகவும் பார்க்கப்படுகிறது.
Story Written By: I. Jayachandran


Click it and Unblock the Notifications