இந்தியா அண்டை நாடான ஸ்ரீலங்கா நீண்ட காலமாகப் பல்வேறு பிரச்சனைகளில் அடுத்தடுத்து சிக்கி வரும் நிலையில், புத்தாண்டை மிகவும் பயத்துடன் துவங்கியுள்ளது. ஸ்ரீலங்கா அதிகப்படியான நிதி சிக்கல்களில் மாடிக் கொண்டு இருக்கும் வேளையில், இந்நாட்டின் பணவீக்கம் வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது.
இதனால் உணவுப் பொருட்களின் விலை அதிகளவில் உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பில் இருந்து மீள முடியாக ஸ்ரீலங்கா கஜானா காலியாக உள்ளது.
தலைக்கு மீறிய கடன்
இலங்கை அரசு அடுத்த 12 மாதங்களில் சுமார் 7.3 பில்லியன் டாலர் அளவிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுக் கடன்களைத் திருப்பிச் செலுத்த வேண்டும். இதில் மிகவும் முக்கியமான ஜனவரி 500 மில்லியன் டாலர் சர்வதேச சவ்ரின் பத்திரத்திற்கான தொகையைத் திருப்பிச் செலுத்த வேண்டும்.
நாணய கையிருப்பு
நவம்பர் மாத நிலவரப்படி, இலங்கையின் மொத்த வெளிநாட்டு நாணய கையிருப்பு வெறும் 1.6 பில்லியன் டாலர் மட்டுமே, இப்படியிருக்கையில் ஜனவரி மாதத்திற்குள் 500 மில்லியன் டாலர், அதன் பின்பு 6.7 பில்லியன் டாலர் அளவிலான கடனை திருப்பித் செலுத்த வேண்டும்.
இலங்கை பொருளாதாரம்
இலங்கை பொருளாதாரம் கொரோனா தொற்றில் இருந்து இன்னும் மீண்டு வர முடியாத நிலையில், இந்நாட்டிற்கு அதிக வருவாய் கொடுக்கும் சுற்றுலா துறையும் தொடர்ந்து நஷ்டத்தில் உள்ளது. இதற்கிடையில் இலங்கை அரசின் அதிகப்படியான செலவுகள், வரிக் குறைப்பு ஆகியவற்றின் மூலம் இந்நாட்டின் வருவாய் மற்றும் பண இருப்பு பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளது.
சீனாவிடம் கடன்
மேலும் இலங்கை அரசு சீனாவிடம் பெற்றுள்ள அதிகப்படியான கடன் இந்நாட்டின் பொருளாதாரத்தைப் பெரிய அளவில் பாதிக்கிறது. மேலும் மிகவும் குறைவான அன்னிய செலாவணி இருப்பு மிகவும் மோசமாக இருக்கும் காரணத்தால் கோட்டாபய ராஜபக்சே தலைமையிலான இலங்கை எப்போது வேண்டுமானாலும் திவாலாகும் நிலையில் உள்ளது.
உலக வங்கி
இலங்கையின் பணவீக்கம் 9.9 சதவீதத்தில் இருந்து டிசம்பர் ம்தம் 12.1 சதவீதமாக உயர்ந்துள்ளது, இதேபோல் உணவு பணவீக்கம் 17.5 சதவீதத்தில் இருந்து 22.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. உலக வங்கியின் கணிப்பின் படி இலங்கையில் 5,00,000 பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் தள்ளப்பட்டு உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications