பணத்தை அச்சடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இலங்கை அரசு.. புதிய பிரதமர் வேதனை!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் பொதுத்துறை விமான நிறுவனமாக இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தினை அரசு, பல நெருக்கடியான நிதி பிரச்சனை காரணமாக சமீபத்தில் தனியார்மயமாக்கியது. இது குறித்து அந்த சமயத்தில் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பினாலும், இதனால் பல ஆயிரம் ஊழியர்களை பாதிக்கப்படலாம் என்பதை கருத்தில் கொண்டு விற்பனை செய்யப்பட்டது.

 

தற்போது இலங்கையிலும் இதே நெருக்கடியான நிலையே இருந்து வருகின்றது. ஏற்கனவே நாட்டில் மிகப்பெரிய மாற்றங்கள் எல்லாம் நடந்து வருகின்றன.

அரசுக்கு காத்துக் கொண்டுள்ள பணிகள்

அரசுக்கு காத்துக் கொண்டுள்ள பணிகள்


குறிப்பாக சில தினங்களுக்கு முன்பு தான் இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் இலங்கை அரசுக்கு நிலவி வரும் மிக நெருக்கடியான முக்கிய பிரச்சனையே விலைவாசி ஏற்றம் தான். குறிப்பாக உணவு பொருட்கள் உள்பட பல அத்தியாவசிய பொருட்கள், எரிபொருட்கள் விலை என பலவும் உச்சம் எட்டியுள்ளன. இதனையும் உடனடியாக குறைக்க வேண்டிய கட்டாயத்தில் புதிய அரசு களமிறங்கியுள்ளது.

சவால்கள்

சவால்கள்

இப்படி பல நெருக்கடியான பிரச்சனைகளுக்கும் மத்தியில் இலங்கை அரசுக்கு இன்னும் பல சவால்கள் காத்துக் கொண்டுள்ளன. குறிப்பாக வேலையின்மை, சிறு தொழில்கள் பாதிப்பு, நஷ்டத்தில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனங்கள் என பலவும் கருத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களாக உள்ளன. இதற்கிடையில் இலங்கை தேசிய விமான நிறுவனத்தினை தனியார்மயமாக்குதல் குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு பட்ஜெட்
 

சிறப்பு பட்ஜெட்

இது சரிந்து போன இலங்கையின் பொருளாதாரத்தினை சரி செய்வது குறித்த சீர்திருத்தங்களில் இதுவும் அடங்கும். மேலும் புதிய பிரதமரான ரணில், சிறப்பு பட்ஜெட் திட்டம் ஒன்றை திட்டமிள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது நாட்டின் வளர்ச்சியினை மேம்படுத்தும் விதமாக இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மக்களுக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட நல திட்ட உதவிகளும் வழங்கப்படும் என கூறியுள்ளார்.

பணம் அச்சடிக்கும் நிலை

பணம் அச்சடிக்கும் நிலை

இலங்கையின் நிதி நிலை மிக மோசமாக உள்ளதால், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கவும், பிற சேவைகளுக்காகவும் அரசாங்கம் பணத்தை அச்சடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தொடர்ந்து பல மாதங்களாக அன்னிய செலவாணி கையிருப்பானது சரிவில் உள்ளது. இதன் காரணமாக மருந்துகள், எரிபொருட்கள், சமையல் எரிவாயு, உனவு பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்கள் மக்கள் மணிக்கணக்கில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நெருக்கடியான சூழலில் அரசின் வருவாயும் சரிவினைக் கண்டுள்ளது.

நஷ்டம்

நஷ்டம்

கடந்த மார்ச் மாதத்தில் முடிவடைந்த 2020 - 21ம் நிதியாண்டில் இலங்கையில் தேசிய விமான நிலையத்திற்கு சுமார் 123 மில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டது. மார்ச் 2021 நிலவரப் படி, அதன் மொத்த நஷ்டம் 1 பில்லியன் டாலர்களை தாண்டியுள்ளதாகவும் ரணில் தெரிவித்துள்ளார். தேசிய விமான நிலையத்தினை தனியார்மயமாக்கினாலும், அதன் நஷ்டத்தினை நாம் தான் ஏற்க வேண்டும்.

 ஏறக்குறைய திவால் நிலை

ஏறக்குறைய திவால் நிலை

ஏறக்குறைய திவால் நிலையை எட்டியுள்ள இந்த நிறுவனம், 2026ம் ஆண்டுக்குள் 25 பில்லியன் டாலர்களை திரும்ப செலுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. நாட்டின் மொத்த வெளி நாட்டுக் கடன் 81 பில்லியன் டாலராகும். ஆனால் தற்போது 25 மில்லியன் டாலர் மட்டுமே பயன்படுத்தக் கூடிய அன்னிய இருப்பாக உள்ளது என இலங்கை நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: sri lanka இலங்கை
English summary

Sri Lanka has been forced to print money to pay salaries and expenses;Ranil Wickremesinghe

Sri Lanka's financial situation is so bad that the govt has been forced to print money to pay government employees and other important services.
Story first published: Monday, May 16, 2022, 23:11 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X