தூரத்தில் வெளிச்சம் தெரிகிறது.. இலங்கை மக்கள் குஷி..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இலங்கை நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதி நிலைமை மோசமாக இருக்கும் வேளையில் அந்நாட்டு மக்கள் பிழைப்புக்காக வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்ல துவங்கியுள்ளனர்.

 

இலங்கை போர் காலத்தில் அந்நாட்டு நாட்டு ராணுவ தாக்குதல் காரணமாகப் பிறந்த மண்ணை-ஐ விட்டுக் கண்ணீர் உடன் வெளிநாடுகளுக்கு அகதிகளாகச் சென்றதை தொடர்ந்து தற்போது இலங்கை அரசின் மோசமான நிர்வாகம் மற்றும் நிதி நெருக்கடி காரணமாக அந்நாட்டு மக்கள் பசியைப் போக்க நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர்.

இந்த நிலையில் இலங்கையில் புதிதாக அமைந்துள்ள அரசு நீண்ட காலமாக எதிர்பார்த்து இருக்கும் ஒரு விஷயம் நடக்க உள்ளது.

ரூ.63 லட்சம் சம்பளம் அறிவித்த CEO ராஜினாமா.. காரணத்தை கேட்ட அசந்துருவீங்க! ரூ.63 லட்சம் சம்பளம் அறிவித்த CEO ராஜினாமா.. காரணத்தை கேட்ட அசந்துருவீங்க!

இலங்கை

இலங்கை

இலங்கையின் உணவு, எரிபொருள் தட்டுப்பாடுகளைப் போக்க இந்தியா மற்றும் தமிழ்நாட்டு உதவி செய்து வரும் நிலையில் நாட்டை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வர அதிகப்படியான நிதி தேவைகள் இருக்கும் நிலையில், சர்வதேச நாணய நிதியம் அமைப்பிடம் பல மாதங்களாகக் கேட்டு வருகிறது.

இலங்கை மத்திய வங்கி

இலங்கை மத்திய வங்கி

இந்நிலையில் இலங்கையின் மத்திய வங்கியின் தலைவர் வெளியிட்ட தகவலின் படி அந்நாட்டு அரசும், IMF அமைப்பும் இலங்கையின் பொருளாதாரத்தைக் காப்பாற்ற நிதியுதவிக்கான bailout package பெற விரைவில் ஒப்பந்தம் செய்ய உள்ளதாகத் தெரிவித்தார் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க.

பொருளாதாரம் மற்றும் நிதி நிலை
 

பொருளாதாரம் மற்றும் நிதி நிலை

இலங்கை ஏப்ரல் மாதத்தில் தனது பொருளாதாரம் மற்றும் நிதி நிலையைப் பாதுகாக்கும் விதமாக அனைத்து வெளிநாட்டுக் கடன்களையும் நிறுத்தியது. இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் அளவு 51 பில்லியன் டாலராக உள்ளது, இதில் 28 பில்லியன் டாலரை 2027 ஆம் ஆண்டுக்குள் செலுத்த வேண்டும்.

சீனாவின் உளவு கப்பல்

சீனாவின் உளவு கப்பல்

இதற்கிடையில் கடந்த ஒருவாரமாகப் பொருளாதாரம் மற்றும் நிதி நெருக்கடி ஆகியவற்றைத் தாண்டி இலங்கையைச் சுற்றி நடந்த முக்கியமான விஷயம், சீனாவின் உளவு கப்பல் தான். இந்திய அரசின் எதிர்ப்புகளைத் தாண்டியும் சீன உளவு கப்பலை அந்நாட்டிற்குள் அனுமதித்துள்ளது.

யுவான் வாங் 5 கப்பல்

யுவான் வாங் 5 கப்பல்

இந்தியாவின் இராணுவ தளங்களை உளவு பார்க்க முடியும் என்று இந்தியா எழுப்பிய பாதுகாப்பு கவலைகளை மீறி சீனக் கப்பல் ஒன்று செவ்வாய்க்கிழமை காலை இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்து.

உளவு கப்பல்

உளவு கப்பல்

சர்வதேச கப்பல் மற்றும் பகுப்பாய்வு வலைத்தளங்கள் சீனாவின் யுவான் வாங் 5 ஐ ஒரு ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக் கப்பல் என்று விவரிக்கின்றன, ஆனால் இந்திய ஊடக அறிக்கைகள் இதை இரட்டை பயன்பாட்டு உளவு கப்பல் என்று கூறுகின்றன.

ஆகஸ்ட் 22 வரை

ஆகஸ்ட் 22 வரை

இந்தக் கப்பல் முதலில் ஆகஸ்ட் 11 ஆம் தேதி சீனாவால் கட்டப்பட்டுக் குத்தகைக்கு எடுக்கப்பட்ட ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய இருந்தது, ஆனால் இலங்கை சீன கப்பலை அனுமதிக்க மறுத்தது. ஆனால் ஆகஸ்ட் 13 ஆம் தேதி இலங்கை அனுமதி கொடுத்து. ஆகஸ்ட் 16 முதல் ஆகஸ்ட் 22 வரை கப்பலை தீவில் நிறுத்துவதற்கு இலங்கை அனுமதி வழங்கியது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sri Lanka hopes to reach initial agreement with IMF says Nandalal Weerasinghe

Sri Lanka hopes to reach initial agreement with IMF says Nandalal Weerasinghe தூரத்தில் வெளிச்சம் தெரிகிறது.. இலங்கை மக்கள் குஷி..!
Story first published: Friday, August 19, 2022, 13:26 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X