உலக பணக்காரர் எலான் மஸ்க்கின் SpaceX நிறுவனம் நடத்தும் செயற்கைக்கோளை அடிப்படையாகக் கொண்ட இணைய சேவை நிறுவனமான ஸ்டார்லிங்க் (Starlink), தற்போது இலங்கையில் அதிகாரப்பூர்வமாக தனது சேவையை தொடங்கியுள்ளது. இதன் மூலம், பூட்டான் மற்றும் வங்கதேசத்துக்கு பிறகு தென் ஆசியாவிலும், இந்தியாவின் அண்டை நாடுகளிலும், ஸ்டார்லிங் சேவையை பெறும் மூன்றாவது நாடாக இலங்கை ஆனது.
ஸ்டார்லிங்கின் முக்கியத்துவம் என்ன..?: இது பூமியின் சுற்றுவட்டத்தில் உள்ள நூற்றுக்கணக்கான சிறிய செயற்கைக்கோள்களை பயன்படுத்தி, தொலைதூர பகுதிகளுக்கும் கூட இணைய இணைப்பை வழங்குகிறது. பொதுவாக நகரங்களில் இருந்து தொலைவில் உள்ள மலைப்பகுதிகள், கிராமப்புறங்கள் அல்லது புறநகரப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் இந்த சேவையால் அதிகமாகப் பயனடைகிறார்கள். அதிவேக இணைய சேவை என்பதே ஸ்டார்லிங்கின் தனிச்சிறப்பு.

ஸ்டார்லிங் இணையம் கிடைக்கும் ஆசிய நாடுகள் : மங்கோலியா, ஜப்பான், பிலிப்பைன்ஸ், மலேசியா, இந்தோனேசியா, ஜோர்டான், ஏமன், அசர்பைஜான், இலங்கையில் ஸ்டார்லிங் இணைய சேவை கிடைக்கிறது. இலங்கையிலும் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை தொடங்கியுள்ளதால், அந்த நாடும் உலகத் தரம் வாய்ந்த இணைய வசதியில் இணைந்துள்ளது.
இந்தியாவில் ஸ்டார்லிங் இணைய சேவை : இதற்கிடையே, எலான் மஸ்க்கின் நிறுவனமான ஸ்டார்லிங்க், இந்தியாவில் தனது சேட்டிலைட் அடிப்படையிலான அன்லிமிடெட் இன்டர்நெட் சேவையை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை பெற விரும்பும் வாடிக்கையாளர்கள், முதலில் ரூ.33,000 செலுத்தி ஸ்டார்லிங்க் டிவைஸ் வாங்க வேண்டும். பிறகு, அவர்கள் மாதந்தோறும் ரூ.3,000 செலுத்தி அன்லிமிடெட் டேட்டா சேவையை பயன்படுத்த முடியும். இந்த சேவை இந்தியாவில் தொடங்கும்போது, மலை கிராமங்கள், புறநகர மற்றும் இணைய வசதிகள் குறைவான பகுதிகளுக்கு, உயர் தர இணையம் கிடைக்கும் என்பதால், இது ஒரு முக்கிய முன்னேற்றமாகும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
இதுதொடர்பாக ஸ்டார்லிங்க் நிறுவனம், இந்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்திடம் அனுமதிகளை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இந்தியாவில் அதன் செயற்பாடுகளை துவக்க திட்டமிட்டுள்ளதுடன், இந்திய சந்தைக்கான சேவை விலை நிர்ணயமும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ஸ்டார்லிங்க் தற்போது 25 Mbps முதல் 220 Mbps வரை வேகத்தில் இன்டர்நெட் சேவையை வழங்கி வருகிறது. பெரும்பாலான பயனர்கள் 100 Mbpsக்கு மேற்பட்ட வேகத்தில் இணைய இணைப்பைப் பயன்படுத்திக் கொண்டு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த இன்டர்நெட் கனெக்ஷன் ஃபைபர் கேபிள் அல்லது மொபைல் நெட்வொர்க்குகளை சார்ந்தது அல்ல. மாறாக, லோ எர்த் ஆர்பிட் (Low Earth Orbit - LEO) எனப்படும் பூமிக்கு மிகவும் அருகில் உள்ள செயற்கைக்கோள்களின் தொகுப்பு மூலம் இணையம் வழங்கப்படுகிறது. இதன் மூலம் அதிவேகமான மற்றும் குறைந்த நேரம் தாமதமுள்ள (Low Latency) இணைய சேவையை பயனர்களுக்கு கிடைக்கும்.
எத்தனை நாடுகளில் ஸ்டார்லிங் இணைய சேவை..?: எலான் மஸ்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் தற்போது உலகின் 130-க்கும் மேற்பட்ட நாடுகளில் சேவைகளை வழங்கி வருகிறது. பாகிஸ்தானை தவிர அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜப்பான், ஜெர்மனி, பிரான்ஸ், வங்கதேசம், இலங்கையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், சிரியா, லெபனான், மொரோக்கோ, துருக்கி, மார்ஷல் தீவுகள், குவினி-பிசாவ், லெசோத்தோ போன்ற நாடுகளிலும் ஸ்டார்லிங்கின் சேவைகள் கிடைக்கின்றன.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!

தங்கம் விலை ஏற்ற இறக்கம் குறித்து கவலையே வேண்டாம்: இப்படி முதலீடு செஞ்சா லாபம் கொட்டும்!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications