வாகன இறக்குமதி மீதான தடையை அடுத்த ஆண்டு பிப்ரவரிக்குள் படிப்படியாக நீக்கும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை இலங்கை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக எடுக்கப்பட்டுள்ளது. இந்த தடை அக்டோபர் 1 முதல் மூன்று கட்டங்களாக நீக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது வாகன இறக்குமதி தடையை முழுமையாக நீக்க 3 கட்டங்கள் உள்ளன. ஒவ்வொரு கட்டத்திலும், சில வகையான வாகனங்களின் இறக்குமதி அனுமதிக்கப்பட உள்ளது.
2020-ஆம் ஆண்டில் COVID-19 ஏற்பட்ட தாக்கத்தினால், இலங்கை வெளிநாட்டுச் செலாவணி இருப்புக்களை பாதுகாக்க இறக்குமதி கட்டுப்பாடுகளை விதித்தது. அப்போது எந்தெந்த பொருட்களுக்கு தேவை ஏற்பட்டதோ அந்த பொருட்களுக்கு பயன்படுத்தியது. உதாரணமாக மருந்து, எரிபொருள் மற்றும் உணவு போன்ற அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு பயன்படுத்தப்பட்டது.

வெளிநாட்டுச் செலாவணி இருப்புக்களில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இருப்பதால், அமைச்சரவை அனைத்து வாகன இறக்குமதி தடை மற்றும் கட்டுப்பாடுகளையும் 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் நீக்க முடிவு செய்துள்ளது. இந்த முடிவு எங்கள் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், எங்கள் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யவும் மேற்கொள்ளும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதி" என்று வெளியுறவு துறை அமைச்சர் அலி சப்ரி X பதிவில் கூறியுள்ளார்.
முதல் கட்டமாக, பொது போக்குவரத்து வாகனங்களின் இறக்குமதி அக்டோபர் 1 முதல் அனுமதிக்கப்படும். இரண்டாம் கட்டமாக வணிக வாகனங்களின் இறக்குமதிக்கு டிசம்பர் 1 முதல் அனுமதி வழங்கப்படவுள்ளது. மூன்றாம் கட்டமாக 2025-ஆம் ஆண்டு பிப்ரவரி 1 முதல், தனியார் பயன்பாட்டிற்கான மோட்டார் கார்களை இறக்குமதி செய்ய அனுமதிக்க உள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.
புதிய வாகனங்களின் இறக்குமதியிலிருந்து அரசு வருவாயை அதிகரிக்க உள்ளது. இதன் மூலம் பொருளாதாரம் சீராகும் என்று அரசு எதிர்பார்க்கிறது. இது வரலாற்று ரீதியாக நாட்டிற்கு குறிப்பிடத்தக்க வருவாய் ஆதாரமாக இருந்து வருகிறது. இறக்குமதியை மீண்டும் அறிமுகப்படுத்துவது வெளிநாட்டுச் செலாவணி இருப்புக்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்தும் என்பதால், அதன் தாக்கத்தை குறைக்க கூடுதல் இறக்குமதி வரிகள் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளிநாட்டுச் செலாவணி இருப்புகள் தீர்ந்து போனது, இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடிக்கு வழிவகுத்தது. இலங்கை, படிப்படியாக வாகன இறக்குமதி தடையை நீக்க முடிவு செய்துள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்தை சாதாரண நிலைக்கு மீட்டெடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகும். வாகன இறக்குமதி தடை நீக்கப்படுவதால், நாட்டின் பொருளாதார நடவடிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications