இலங்கையை குறைந்த வருமானம் பெறும் நாடாக தரமிறக்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இந்த தீர்மானத்திற்கு இலங்கை அமைச்சரவையும் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளது.
நடுத்தர வருமானத்தை ஈட்டி வரும் நாடாக இலங்கை இருக்குமானால், இலங்கைக்கு தேவையான நிதியுதவியினை பெற முடியாது. இந்த நிலையில் தான் இலங்கை அரசு இப்படி ஒரு முடிவினை எடுத்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் நிலவி வரும் நெருக்கடி காரணமாக தனி நபர் வருமானமும் வீழ்ச்சி கண்டுள்ளது.
குறைந்த வருமானம் பெறும் நாடு
தற்போது இலங்கை தொடர்ந்து நடுத்தர வருமானம் பெறும் நாடாகவே இருந்து வருகின்றது. முன்னதாக இலங்கையின் கடன் தரமதிப்பீடு குறைக்கப்பட்டதன் காரணமாக, புனரமைப்பு மற்றும் அபிவிருத்திருக்காக IBRDயிடம் இருந்து கடன் பெறுவதற்கு இலங்கைக்கு சந்தர்ப்பமே கிடையாது என அரசாங்கம் சுட்டிக் காட்டியது. இப்படி ஒரு நிலையில் தான் அரசு குறைந்த வருமானம் பெறும் நாடாக தரமிறக்குவதற்கு திட்டமிட்டுள்ளது.
வறுமை
இதற்கிடையில் இலங்கை மக்கள் சுதந்திரத்திற்கு பின்னர் மிக மோசமான பொருளாதார வளர்ச்சியினை எதிர்கொண்டுள்ள நிலையில், கடந்த வருடத்தில் இலங்கையின் வறுமை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இது 5%ல் இருந்து 15% ஆக அதிகரித்துள்ளது என்று சமீபத்திய அறிக்கையில் உலக வங்கி அறிக்கை தெரிவித்துள்ளது.
நகர்புறங்களில் 3 மடங்கு வறுமை
இலங்கை 2009-க்கு பிறகு மிக உயர்ந்த வறுமை விகிதத்தினை எதிர்கொண்டு வருகின்றது. இலங்கையின் 80% ஏழைகள் இன்னும் கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். அதே வேளையில், நகர்புறங்களில் வறுமை விகிதம் 2021ல் மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. மொத்தத்தில் மக்கள் தொகையில் பாதிபேர் வறுமை கேட்டிற்கு கீழ் வாழ்ந்து வருகின்றனர். இலங்கையின் பெரும்பாலான மாகாணங்கள் 2022ல் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றன.
அன்னிய செலவாணி கையிருப்பு சரிவு
நடப்பு ஆண்டில் இலங்கை அரசு கடன்களை திரும்ப செலுத்த முடியாமல், புதியதாக கடன் பெறவும் முடியாமல் போராடி வருகின்றது. இலங்கையின் அன்னிய செலவாணி கையிருப்பானது வரலாறு காணாத அளவு சரிவினை எட்டியுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருளை கூட இறக்குமதி செய்ய முடியாமல் தவித்து வருகின்றது.
விலைவாசி உச்சம்
இதற்கிடையில் இலங்கையில் விலைவாசியானது வரலாறு காணாத அளவு உச்சத்தினை எட்டியது. உணவு பொருட்கள், எரிபொருட்கள், மருந்துகள் உள்பட அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுபாடு நிலவி வருகின்றது. அத்தியாவசியமான எரிவாயு பொருட்களை வாங்க மணிகணக்கில் காத்திருக்க வேண்டிய அவசியம் உள்ளது. இப்படி பல காரணிகளுக்கும் மத்தியில் இலங்கை இன்னும் நெருக்கடியில் தான் சிக்கித் தவித்து வருகின்றது. மக்கள் அன்றாட தேவைகளுக்கே அல்லாடும் சூழல் தான் இருந்து வருகின்றது.
பசி, பட்டினி பிரச்சனை
இதற்கிடையில் பொருளாதார வீழ்ச்சி மிகப்பெரிய அரசியல் பிரச்சனையாகவும் உருவெடுத்தது. இதற்கிடையில் கடந்த செப்டம்பரில் மொத்த பணவீக்கம் 69.8% ஆகவும், உணவு பணவீக்கம் 94.9% ஆகவும் இருந்தது. இன்றும் இலங்கை ஊடங்களில் பிரதான செய்தியாக இருப்பது பசி, பட்டினியாகும். தற்போது பள்ளி இடை நிற்றலும் அதிகரித்துள்ளது. 22 மில்லியன் மக்கள் தொகையில், மூன்றில் ஒரு பகுதியினர் வறுமையில் தள்ளாடி வருகின்றனர். பலரும் உணவுக்கே வழியில்லாமல் சிக்கித் தவித்து வருவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றது.
More From GoodReturns

சிலிண்டர் தட்டுப்பாட்ட விடுங்க!! ஈரான் போரால் நாட்டின் முதுகெலும்புக்கே பிரச்சினை வரப்போகுது!!

ஈரான் போர்: கதிகலங்கி நிற்கும் தைவான்.. 11 நாட்கள் கெடு..!!

எல்பிஜி தட்டுப்பாட்டுக்கு முடிவு: இந்தியாவுக்கு வரும் 92,700 மெட்ரிக் டன் கேஸ்.. மத்திய அரசு அறிவிப்பு!!

என்னப்பா புது புது பிரச்சனையா கிளம்புது.. ஈரான் போரால் 'இந்த' பொருட்கள் விலை தாறுமாற உயரபோகுது..!!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

இந்தியர்கள் உடனே வெளியேறலாம்; நாங்களே டிக்கெட் போட்டு தரோம்: அமெரிக்க அரசின் அட்டூழியம்

ஈரான் போரில் டிரம்ப் போடும் கணக்கே வேற..! குறி வச்சது கமேனிக்கு இல்ல..! வெளிவரும் உண்மை..!

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!

இந்திய மக்களை துரத்தும் புதிய பிரச்சனை.. ஈரான் போர் மூலம் உங்க பர்ஸ்-க்கு வேட்டு..!!

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

சென்செக்ஸ், நிஃப்டியை புரட்டிப்போட்ட 90 நிமிடம்.. என்ன நடந்தது..? முழுக்க முழுக்க மேஜிக்



Click it and Unblock the Notifications