இந்தியாவின் அண்டை நாடான இலங்கை கடந்த மார்ச் மாதம் முதல் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை நம்பித்தான் இலங்கை உள்ளது. அந்நியச் செலாவணி பிரச்சனை காரணமாக கோழித் தீவனத்தை இறக்குமதி செய்ய முடியாத நிலையில் தவிக்கும் இலங்கையில் முட்டைகளுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுகிறது.
இதனால் இந்தியாவிலிருந்து 92.1 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்ய இலங்கை முடிவு செய்துள்ளது. இதன் மூலம் உள்ளூர் சந்தையில் நிலவும் முட்டையின் கடும் விலை உயர்வை குறைத்து மக்களுக்கு மலிவு விலையில் கிடைக்க வழி செய்யப்படும் என்று அரசு செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவிலிருந்து முட்டை இறக்குமதி செய்வதற்கான முடிவு இந்த வார திங்கள்கிழமையன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக செய்தித்துறை அமைச்சர் பண்டுலா குணவர்த்தனா தெரிவித்தார்.
முன்னதாக, முட்டை தட்டுப்பாடு மற்றும் அதிக விலையேற்றம் காரணமாக இந்தியாவிலிருந்து முட்டையை இறக்குமதி செய்வதற்கு அனுமதி தருமாறு அரசிடம் ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேஷன் கோரிக்கை விடுத்தது.
இதனால் முட்டைகளை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்ய இலங்கை அரசு அனுமதி வழங்கியுள்ளது. அரசின் இந்த முடிவு உள்ளூர் முட்டை விலையை கட்டுப்படுத்துவதற்கும், மக்களுக்கு கட்டுப்படியாகக்கூடிய நியாயமான விலையில் கிடைக்கச் செய்வதற்குமான முக்கிய நடவடிக்கை என்று அமைச்சர் கூறியுள்ளார்.
இந்தியாவிலுள்ள மூன்று நிறுவனங்களிடம் இருந்து விலை பட்டியலை தருமாறு இலங்கை கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. இந்த ஆர்டர்கள் அடுத்த மூன்று மாதங்களுக்குள் தருவிக்கப்படும். மார்ச் மாதத்தில் இருந்தே இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளைத் தான் இலங்கை நம்பியுள்ளது. இதற்குக் காரணம் அதன் அந்நியச் செலாவணியில் ஏற்பட்டுள்ள சிக்கலால் கோழிகளுக்குத் தேவையான உணவை இறக்குமதி செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் இந்தியாவில் இருந்து மேலும் முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது. மார்ச் மாதத்தில் இந்தியாவில் இருந்து 2 மில்லியன் முட்டைகளை இலங்கை இறக்குமதி செய்தது. இலங்கையில் இப்போது கடும் உணவுத் தட்டுப்பாடும் நிலவுகிறது. இந்த நிலையில் முட்டை விலை அதிகரித்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இந்தியா தற்போது அளித்து வரும் கடனுதவியால் இலங்கைக்குத் தேவையான உணவுப் பொருட்களும், எரிபொருள் இறக்குமதியும் அந்த நாடு சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடியை குறைக்கும் விதமாக உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் முட்டை தட்டுப்பாடு ஏற்பட்டால் இந்தியாவில் விலை உயரும் நிலை உருவாக வாய்ப்பு உள்ளது.


Click it and Unblock the Notifications