IT வேலை போனா என்ன.. கிராமத்தில் சூப்பர் மார்க்கெட் தொடங்கி நாளொன்றுக்கு ரூ.50,000 கல்லாகட்டும் இன்ஜினியர்!

எப்போதும் வாழ்க்கை நாம் நினைத்தபடியே நகராது. ஒரு சில நேரங்களில் எதிர்பாராத பிரச்சனைகள் ஏற்படும். அவற்றை பார்த்து மனம் தளராமல் இருப்பவர்களே பிற்காலத்தில் பெரிய சாதனையாளர்கள் ஆகின்றனர். அப்படித்தான் திடீரென வேலையை இழந்து என்ன செய்யப் போகிறோம்? என்று தவித்துக் கொண்டிருந்த ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியர் இன்று சொந்தத் தொழில் தொடங்கி நாளொன்றுக்கு ரூ.50,000 வருமானம் பார்த்து வருகிறார். அவர் அப்படி என்ன தொழில் செய்கிறார்? என்ற விவரங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.

இலங்கையைச் சேர்ந்த ஒரு இளம் சாப்ட்வேர் இன்ஜினியர், தனது நிறுவனத்தில் நடந்த மிகப்பெரிய லே-ஆஃப் நடவடிக்கையில் பாதிக்கப்பட்டார். இன்றைய சாப்ட்வேர் இன்ஜினியர்களின் கனவு என்ன தெரியுமா? ஏதாவது ஒரு சாப்ட்வேர் வேலையில் சேர வேண்டும், பிறகு படிப்படியாக தங்களுடைய சம்பளத்தை அதிகரிக்க வேண்டும் என்பதுதான். அதே கனவோடு ஐடி துறையில் நுழைந்தவர் தான் பணிநீக்கம் செய்யப்பட்ட இந்த நபர்.

அவருக்கு சாப்ட்வேர் இன்ஜினியரிங் விருப்பமான வேலையாக இருந்தது. எப்போதும் அந்த வேலையிலேயே இருக்க வேண்டும் என்று எண்ணிய அவருக்கு நிறுவனம் வேலையை விட்டு தூக்கி அதிர்ச்சியை தந்தது. இருப்பினும் இந்த இக்கட்டான சூழ்நிலையை கண்டு அவர் மனம் தளரவில்லை. வேறொரு வேலைவாய்ப்பு வரும் வரை காத்திருக்காமல் சொந்த தொழில் தொடங்க முடிவு செய்தார். தனது சொந்த கிராமத்திற்கு வந்து.. அங்கு ஒரு மினி சூப்பர் மார்க்கெட் கூட இல்லை என்பதை தெரிந்து கொண்டு, ஒரு கடையைத் திறந்தார்.

IT வேலை போனா என்ன.. கிராமத்தில் சூப்பர் மார்க்கெட் தொடங்கி நாளொன்றுக்கு ரூ.50,000 கல்லாகட்டும் இன்ஜினியர்!

கிராமங்களில் இருக்கும் பிற கடைகளைப் போலன்றி தொடர்ந்து மக்களுக்கு சிறந்த சேவை வழங்க தொடங்கினார். அதன் முதல் படியாக கேஷ் ஆன் டெலிவரி வசதியை அறிமுகம் செய்தார். ஆன்லைனிலேயே எளிய முறையில் வீட்டில் இருந்து மக்கள் ஆர்டர் செய்யும் வகையில் டிஜிட்டல் வசதிகளை அறிமுகப்படுத்தினார். ஏற்கனவே இவர் தொழில்நுட்ப பின்னணியை கொண்டவர் என்பதால் இந்த விஷயம் அவருக்கு மிகவும் ஈஸியாக இருந்தது.

கடை தொடங்கி 3 மாதங்களுக்குப் பிறகு நடந்தது தான் ஆச்சரியம். விரைவில் அவருடைய வணிகம் ஒவ்வொரு நாளும் 50,000 வருமானம் ஈட்டும் அளவிற்கு வளர்ந்தது. இந்த அனைத்திற்கும் மேலாக தினசரி அடிப்படையில் அவர் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுடன் பழகி என்னென்ன தேவைகள் இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள முயற்சி செய்தார். இதனால் அவருடைய வணிகம் மட்டுமின்றி வருமானமும் அதிகரித்தது.

தான் சாதித்து காட்டிய விஷயங்களை அவரே தனது லிங்க்டின் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். அவருடைய பதிவுக்கு தொடர்ந்து பயனர்கள் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

வேலை போய்விட்டது என்று சோர்ந்து விடாமல் புதிய வாய்ப்புகளை யோசித்து இன்று அதில் வெற்றியும் கண்டுள்ளார். இவரைப் போன்றோர் உண்மையிலேயே இளம் தலைமுறைக்கு சிறந்த உதாரணம். அதுவும் தற்போதைய பணிநீக்கச் சூழலில் தொடர்ந்து கற்றுக்கொண்டு பிரச்சனைகளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி செல்ல நாம் தயாராகிவிட்டால்.. எந்த ஒரு விஷயத்தையும் சமாளித்து அதில் வெற்றியடைய முடியும் இந்தச் சம்பவம் சிறந்த எடுத்துக்காட்டு.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+