மும்பை: பாலிவுட் நடிகர்கள் ஷாருக்கான் மற்றும் அமிதா பச்சன் ஆகியோர் முதலீடு செய்திருக்கும் ரியல் எஸ்டேட் நிறுவனம் கூடிய விரைவில் ஐபிஓ வெளியீடு செய்ய இருக்கிறது.
ஸ்ரீ லோட்டஸ் டெவலப்பர்ஸ் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் 792 கோடி மதிப்பீட்டில் ஐபிஓ வெளியிட முடிவு செய்துள்ளது. இந்த ஐபிஓ வெளியீட்டுக்கான தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை.

பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியிடம் இந்த நிறுவனம் அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. ஸ்ரீ லோட்டஸ் டெவலப்பர்ஸ் நிறுவனத்தில் தான் ஹாருக்கான், அமிதாப்பச்சன், ரித்திக் ரோஷன் உள்ளிட்ட பலரும் கணிசமான பங்குகளை வைத்திருக்கின்றனர்.
இந்த நிறுவனத்தின் கீழ் ரிச்ஃபீல் ரியல் எஸ்டேட், தியான் ப்ராஜெக்ட் என பல்வேறு துணை நிறுவனங்கள் செயல்படுகின்றன. இந்த துணை நிறுவனங்களின் மேம்பாட்டுக்காக ஐபிஓ வெளியீடு செய்து 792 கோடி திரட்டுவதற்கு இந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. ஸ்ரீ லோட்டஸ் டெவலப்பர்ஸ் நிறுவனத்தை பொருத்தவரை மகாராஷ்டிரா மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் குறிப்பாக மும்பையில் பல்வேறு ரியல் எஸ்டேட் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.
குறிப்பாக ஆடம்பர குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்வதில் இந்த நிறுவனம் புகழ்பெற்றதாக இருக்கிறது. செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் இந்த நிறுவனத்தின் நிகர லாபம் 90 கோடி ரூபாயாகவும் வருமானம் 243 கோடி ரூபாயாக இருக்கிறது
இந்த நிறுவனத்தில் 91% பங்குகள் புரோமோட்டர்கள் வசம் மீதமுள்ள 8 சதவீத பங்குகள் பல்வேறு பாலிவுட் நட்சத்திரங்கள் வசம் இருக்கின்றன.
கடந்த செப்டம்பர் மாதம் இந்த நிறுவனம் ஏற்கனவே பிரைவேட் பிளேஸ்மெண்ட் வாயிலாக 139 கோடி ரூபாயை நிதியாக திரட்டியது. பிரபல முதலீட்டாளர் ஆசிஸ் கச்சோலியா இந்த நிறுவனத்தில் 50 கோடி ரூபாயை முதலீடு செய்து 33 லட்சம் பங்குகளை தனக்கு சொந்தமாக வைத்திருக்கிறார்.
இந்த நிறுவனம் நடப்பு ஆண்டில் மூன்று ப்ராஜெக்ட்களை முடித்து கொடுத்துள்ளது தற்போது ஆறு இடங்களில் கட்டிடங்களை கட்டி வருகிறது. 7 புதிய ப்ராஜெக்ட்களை கையில் வைத்திருக்கிறது.
மும்பையில் தற்போது ஆடம்பர குடியிருப்புகளின் விற்பனை களைகட்டி இருக்கிறது. எனவே இந்த நிறுவனம் கணிசமான வளர்ச்சியை பெறும் என நிபுணர்கள் கணிக்கின்றனர். இந்நிறுவன ஐபிஓ சந்தையில் பட்டியலிடப்படும் போது நல்ல விலைக்கு பங்குகள் வர்த்தகமாகும் என்கின்றனர்.
இந்த ஐபிஓ வெளியீட்டின் மூலம் இதில் பங்கு வைத்திருக்கும் பாலிவுட் நட்சத்திரங்களும் பெரும் லாபத்தை காண இருக்கின்றனர். 2025ஆம் ஆண்டில் முக்கியமான ஐபிஓ-வாக இது இருக்கும்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications