சென்னை: பொதுவாக தனிப்பட்ட முறையில் தொடங்கப்படும் நிறுவனங்கள், விரிவாக்கம், நிதி திரட்டுதல் உள்ளிட்ட காரணங்களுக்காக ஐபிஓ வெளியீடு செய்து பங்குகளை விற்று பொது நிறுவனமாக மாறும்.
அந்த வகையில் இந்தியாவின் பல்வேறு முன்னணி நிறுவனங்களும் ஐபிஓ மூலம் பங்குச்சந்தைகளில் பட்டியலிடப்பட்டு பெரும் வளர்ச்சியை கண்டுள்ளன. ஆனால் ஸோஹோ நிறுவனம் பொது நிறுவனமாக மாறாது என அதன் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு கூறியுள்ளார்.

இந்தியாவில் வளர்ந்து வரும் தகவல் தொழில்நுட்ப சேவை வழங்குநராக ஸ்ரீதர் வேம்புவின் ஸோஹோ கார்ப்பரேஷன் இருக்கிறது. இந்நிறுவனம் தற்போது வரை தனியார் நிறுவனமாகவே இருக்கிறது.
ஐபிஓ வெளியிடுவது அல்லது ஒரு பொது நிறுவனமாக மாறுவது போன்ற எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லை. இது தொடர்பாக தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் ஸ்ரீதர் வேம்பு, "தனிப்பட்ட முறையில் ஒரு பொது நிறுவனம் அதாவது பங்குச்சந்தையில் பட்டியலிட்ட ஒரு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தால், என்னால் தற்போது போல ஒரு கிராமத்தில் அமர்ந்து கொண்டு என்னுடைய வேலைகளை பார்க்க முடியாது.
ஏனெனில் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டு விட்டாலே நமது நிறுவனத்தின் பங்கு மதிப்பை தக்க வைத்துக்கொள்ள வேண்டிய அழுத்தம் அதிக அளவில் இருக்கும். இந்த அழுத்தம் என்னிடம் இருந்து என்னுடைய ஊழியர்கள் மீது செல்லும். இது நிறுவனத்தின் செயல்பாடுகளை பெருமளவில் பாதிக்கும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. எனவே ஸோஹோ நிறுவனம் ஐபிஓ வெளியிடும் யோசனையில் இல்லை" என தெரிவித்துள்ளார்.
ஸோஹோ நிறுவனம் பெருமளவில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு முதலீடு செய்திருப்பதால் பங்குச்சந்தையில் நுழையும்போது தங்களால் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்த முடியாத நிலை உண்டாகக்கூடும் என்று அவர் கூறியுள்ளார்.
ஸோஹோவில் இருந்து வெளியே வந்து ஃபிரஷ்வொர்க் என்ற நிறுவனத்தை உருவாக்கிய கிரிஷ் மாத்ருபூதம் மற்றும் ஷான் கிருஷ்ணசாமி ஆகியோர் நிதி திரட்டி அதனை வளர்ச்சி அடைய செய்தனர்.
அமெரிக்காவின் பங்குச்சந்தையான நாஸ்டாகில் ஃபிரஷ்வொர்க் பட்டியலிடப்பட்டுள்ளது. தற்போது இந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து கிரிஷ் மாத்ருபூதம் விலகினார். அவர் நிறுவனத்தின் எக்ஸிக்யூட்டிவ் தலைவராக பதவி மாற்றம் பெற்றுள்ளார்.
இந்த அறிவிப்புக்குப் பிறகு ஃபிரஷ்வொர்க் நிறுவனத்தின் பங்கு மதிப்பானது 25 சதவிகிதம் சரிந்தது. இந்த நிலையில் தான் ஸ்ரீதர் வேம்பு தங்களுடைய நிறுவனம் ஐபிஓ வெளியீடு மற்றும் பங்குச் சந்தை பட்டியலில் இடம்பெறுவது என்பன போன்றவற்றை தற்போது யோசித்து கூட பார்க்கவில்லை , நாங்கள் தொடர்ந்து ஒரு தனிப்பட்ட நிறுவனமாகவே செயல்பட போகிறோம். இதுவே எங்கள் நிறுவனத்தின் நீண்ட கால வளர்ச்சிக்கு உதவும் எனக் கூறியுள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications