பிரபல மென்பொருள் நிறுவனமான ஜோஹோ கார்ப்பரேஷனின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்ரீதர் வேம்பு, தங்கள் நிறுவனத்தின் 'அரட்டை' (Arattai) மெசேஜிங் செயலி, அதிகம் பயன்படுத்தப்படும் டாப் 100 செயலிகள் பட்டியலில் இருந்து சமீபத்தில் வெளியேறியது குறித்து எழுப்பப்பட்ட விமர்சனங்களுக்கு பதில் அளித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், வணிகத்தில் இதுபோன்ற ஏற்ற இறக்கங்கள் இருப்பது மிகவும் சாதாரணமான ஒன்று தான் என்றும், இந்தச் சரிவைப் பெரிதுபடுத்துபவர்கள் தங்கள் நேரத்தை வீணடிக்கிறார்கள் என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்.
ஒரு செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் பேசிய ஸ்ரீதர் வேம்பு, "நடந்ததில் எந்த தவறும் இல்லை. 'ஏதோ தவறு நடந்துவிட்டது' என்று நினைப்பதே தவறான கருத்து. ஒரு வணிகத்தில் இது மிகவும் சாதாரணமான விஷயம். எந்தவொரு விஷயமும் தொடர்ந்து முன்னேறி வானத்தை நோக்கிப் போகாது; நிச்சயமாகச் சில ஏற்றங்களும் இறக்கங்களும் இருக்கத்தான் செய்யும்" என்று கூறியுள்ளார். நீண்ட கால நோக்குடன் செயல்படும் நிறுவனங்களே, இதுபோன்ற சவால்களை சந்தித்து நிலைத்து நிற்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும் அவர் கூறுகையில், "எங்கள் செயலி முதலிடத்திற்கு வந்தபோது கூட, நான் அதைப் பெரிய விஷயமாக நினைக்கவில்லை. இது ஒரு தற்காலிகமான தருணம், அது நீடிக்காது என்று எங்கள் ஊழியர்களிடம் அப்போதே சொல்லிவிட்டேன் என்றார். அதனால், இந்த ஒரு மாத சரிவு குறித்து விமர்சிப்பவர்களைப் பற்றித் தான் கவலைப்படுவதில்லை" என்று தெரிவித்தார்.
மேலும், "நாங்கள் எங்கள் நேரத்தை வீணாக்காமல், அமைதியாக உட்கார்ந்து தொழில்நுட்பத்தை (Code) மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறோம். விமர்சகர்கள் தங்கள் நேரத்தை வீணடிக்கிறார்கள்" என்றும் அவர் கூறினார்.
இது 15 ஆண்டுகால திட்டம் : ஜோஹோ நிறுவனம், 'அரட்டை' செயலியை ஒரு குறுகிய கால வெற்றியாகப் பார்க்காமல், 5 முதல் 15 ஆண்டுகள் வரை நீடிக்கும் ஒரு நீண்ட கால திட்டமாக பார்ப்பதாக ஸ்ரீதர் வேம்பு குறிப்பிட்டுள்ளார். நாங்கள் இந்தப் பிரதான மெசேஜிங் தொழில்நுட்பத்தில் கடந்த 10 ஆண்டுகளாக உழைத்து வருகிறோம். எனவே, இந்த ஒரு மாத தரவரிசை சரிவு எங்களைப் பொறுத்தவரை ஒன்றுமே இல்லை. நாங்கள் தொடர்ந்து பலமான மேம்பாடுகளுடன் இந்த செயலியை வலுப்படுத்துவோம் என்று அவர் உறுதியாக தெரிவித்தார்.
மேலும், மெசேஜிங் செயலி சந்தையில் ஏகபோக உரிமையாளர்கள் (ஒரு நிறுவனம் மட்டுமே ஆதிக்கம் செலுத்துவது) நேர்மையாக இருக்க வேண்டும் என்றால், நிச்சயம் அவர்களுக்குப் போட்டியாளர்கள் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். போட்டி இருந்தால்தான், ஆதிக்கம் செலுத்தும் நிறுவனம் நேர்மையுடன் செயல்படும். ஒரு நிறுவனத்தை கட்டுக்குள் வைத்திருக்கக் கூடிய ஒரே விஷயம் போட்டி மட்டும்தான் என்று தனது பேட்டியில் கூறியிருக்கிறார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications