Zoho நிறுவனத்தின் சிஇஓ பெங்களூருவில் உள்ள கலிபோர்னியா புரிட்டோ என்ற உணவகத்தில் சாப்பிட்ட அனுபவம் குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
மேலும் அந்த உணவகத்தின் நிறுவனருடன் எடுத்த புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார்.
மேலும் மெக்சிகோ நாட்டில் தான் வாழ்ந்த போது சாப்பிட்ட சாப்பாடு ஆகியவற்றையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
Zoho நிறுவனம்
இந்தியாவின் முக்கிய தொழில் நிறுவனங்களில் ஒன்று Zoho என்பதும் இந்நிறுவனத்தின் சி.இ.ஓ ஸ்ரீதர் வேம்பு தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிந்ததே. இந்நிறுவனம் தற்போது மிகப் பெரிய அளவில் வளர்ந்து உள்ளது என்பதும் மிகப்பெரிய அளவில் லாபத்தை சம்பாதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கலிபோர்னியா புரிட்டோ
இந்த நிலையில் நேற்று ஸ்ரீதர் வேம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் கலிபோர்னியா புரிட்டோ என்ற உணவு நிறுவனத்தில் சாப்பிட்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் அந்த உணவகத்தின் நிறுவனர் பெர்ட் முல்லருடன் இணைந்து இணைந்து எடுத்து கொண்ட புகைப்படத்தையும் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
பெர்ட் முல்லர்
பெங்களூரில் கலிஃபோர்னியா புரிட்டோ என்ற உணவகம் மிகவும் பிரபலமானது என்பதும் இந்த நிறுவனத்தை பெர்ட் முல்லர் என்பவர் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு ஒரு மாணவராக வந்த இவர் படிப்பை முடித்தவுடன் இந்த உணவகத்தை தொடங்கி உள்ளார் என்பதும் இன்று பல கிளைகளுடன் இந்த உணவகம் மிகப்பெரிய அளவில் இந்தியாவில் வளர்ந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
50 கிளைகள்
பெங்களூரு, ஹைதராபாத், புதுடெல்லி உள்பட 50க்கும் மேற்பட்ட இடங்களில் தற்போது கலிபோர்னியா புரிட்டோ என்ற உணவகம் இயங்கி வருகிறது என்பதும் சிறந்த உணவு மற்றும் அருமையான ருசி என்று ஸ்ரீதர் வேம்பு தனது டுவிட்டர் பக்கத்தில் இந்த உணவகம் குறித்து தனது விமர்சனத்தை வைத்துள்ளார்.
மலரும் நினைவுகள்
இதனையடுத்து 54 வயதான ஸ்ரீதர் வேம்பு மெக்சிகோவில் தான் சிறுவயதில் இருந்தபோது, தனது இருப்பிடம் அருகே உள்ள ஒரு சிறிய குடும்பம் நடத்தும் உணவகத்தில் சாப்பிட்டதாகவும் 5 டாலருக்கு ஒரு நாள் முழுவதும் சாப்பிடலாம் என்றும் நான் மதிய உணவை பாதி சாப்பிட்டுவிட்டு அதையே இரவுக்கும் வைத்துக் கொள்வேன் என்றும் தனது மலரும் நினைவுகளை தெரிவித்துள்ளார்.
12 ஆண்டுகால வளர்ச்சி
இந்த நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு இந்தியா வந்த பெற்றுள்ள பெர்ட் முல்லர், கலிஃபோர்னியா புரிட்டோ என்ற உணவகத்தைத் தொடங்கினார் என்றும், இந்தியாவில் ஒரு மாணவராக வந்து அதன்பின் தற்போது தொழில் அதிபராக உயர்ந்து உள்ளார் என்றும் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் ஏராளமான வாடிக்கையாளர்களை நாடு முழுவதும் இந்த உணவகம் கொண்டுள்ளதாகவும் அவர் பெருமையுடன் கூறியுள்ளார்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!



Click it and Unblock the Notifications