Zoho-வை சுற்றும் சர்ச்சை.. இந்தியாவில் வரி செலுத்துவது உண்மையா? ஸ்ரீதர் வேம்பு பரபரப்பு விளக்கம்..!

ஐடி துறையில் புகழ்பெற்ற நிறுவனமான ஜோஹோ (Zoho) குறித்து சமூக ஊடகங்களில் பரவிய பல்வேறு தவறான தகவல்களுக்கு, ஸ்ரீதர் வேம்பு விரிவான விளக்கம் அளித்துள்ளார். ஜோஹோ நிறுவனத்தின் தயாரிப்புகள் எங்கு உருவாக்கப்படுகின்றன, வாடிக்கையாளர் தரவுகள் எங்கு சேமிக்கப்படுகின்றன மற்றும் உலகளவில் நிறுவனம் எவ்வாறு செயல்படுகிறது என்பது குறித்த சந்தேகங்களுக்கு அவர் பதிலளித்துள்ளார்.

இதுதொடர்பாக ஸ்ரீதர் வேம்பு தனது சமூக வலைதள பக்கத்தில், ஜோஹோ நிறுவனத்தின் அனைத்துப் பொருட்களும் இந்தியாவிலேயே உருவாக்கப்படுவதாகவும், நிறுவனத்தின் உலகளாவிய வருமானத்திற்கான வரிகளை இந்தியாவிலேயே செலுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவை தலைமையிடமாக கொண்ட ஒரு உலகளாவிய நிறுவனமாக, அமெரிக்கா உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் எங்களுக்கு அலுவலகங்கள் உள்ளன. அமெரிக்கா எங்களுக்கு ஒரு பெரிய சந்தையாகும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Zoho-வை சுற்றும் சர்ச்சை.. இந்தியாவில் வரி செலுத்துவது உண்மையா? ஸ்ரீதர் வேம்பு பரபரப்பு விளக்கம்..!

அதேபோல், வாடிக்கையாளர் தரவு பாதுகாப்பு குறித்த கவலைகளுக்கு பதிலளித்த அவர், இந்திய பயனர்களின் தகவல்கள் மும்பை, டெல்லி மற்றும் சென்னையில் உள்ள இந்திய சர்வர்களிலேயே ஹோஸ்ட் செய்யப்படுவதாகவும், விரைவில் ஒடிசாவுக்கும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

18-க்கும் மேற்பட்ட தரவு மையங்கள் : ஜோஹோ உலகம் முழுவதும் 18-க்கும் மேற்பட்ட தரவு மையங்களை இயக்கி வருகிறது. ஒவ்வொரு மையமும் அந்தந்த நாட்டின் அல்லது பிராந்தியத்தின் தரவுகளை அங்கே சேமிக்கிறது. ஒவ்வொரு நாட்டின் தரவுகளையும் அவற்றின் சொந்த அதிகார எல்லைக்குள் ஹோஸ்ட் செய்ய நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என்று ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.

சொந்த சாஃப்ட்வேர் : ஜோஹோ நிறுவனம் AWS, அஸூர் அல்லது கூகுள் கிளவுட் போன்ற பெரிய கிளவுட் சேவை வழங்குநர்களை நம்பியில்லை. அதற்கு பதிலாக, அதன் அனைத்து சேவைகளையும் நிறுவனத்துக்கு சொந்தமான ஹார்வேர் மற்றும் லினக்ஸ், போஸ்ட்கிரஸ் போன்ற ஓபன் சாஃப்ட்வேர் பயன்படுத்தி இயங்குவதாகவும் வேம்பு தெளிவுபடுத்தினார்.

அரட்டை செயலி சர்ச்சை: ஜோஹோவின் மெசேஜிங் தளமான அரட்டை (Arattai) கூட நிறுவனத்துக்கு சொந்தமான சர்வர்களிலேயே இயங்கி வருகிறது. வேகம் மற்றும் செயல்திறனை அதிகரிக்க, சில நாடுகளின் சுவிட்ச்சிங் சேவைகள் மட்டுமே வெளிப்படையாக கையாளப்படுகின்றன என்றும், ஆனால் எந்த தரவும் ஜோஹோவின் சர்வர்களுக்கு வெளியே சேமிக்கப்படுவதில்லை என்றும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

மேலும், ஆப்பிள் மற்றும் கூகுள் ஆப் ஸ்டோர்களில் ஜோஹோவின் டெவலப்பர் கணக்குகள் அமெரிக்க முகவரியை காட்டுவது குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர், அவை ஆரம்பத்தில் அமெரிக்காவை சேர்ந்த ஊழியரால் சோதனை நோக்கங்களுக்காக பதிவு செய்யப்பட்டதாகவும், பின்னர் புதுப்பிக்கப்படவில்லை என்றும் விளக்கமளித்தார். இறுதியாக தனது பதிவில், "இந்தியாவில் உருவாக்கப்பட்டது, உலகத்திற்காக உருவாக்கப்பட்டது" (Made in India, Made for the World) என்ற ஜோஹோவின் தொலைநோக்குப் பார்வையுடன் முடித்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+