பெங்களூரு போக்குவரத்து நெரிசலுக்கு சிங்கப்பூர் முறை தான் சிறந்த தீர்வு.. ஸ்ரீதர் வேம்பு அட்வைஸ்..!!

பெங்களூரு, இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நகரமாக திகழ்கிறது. உலகளவில் பெயர் பெற்ற ஐடி நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், ஆய்வுத் தொழில்நுட்ப நிறுவனங்கள் என பலவற்றுக்கும் இது மையமாக இருந்து வருகிறது. ஆனால், இந்த வளர்ச்சி அனைத்தும் நகரத்தின் அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்தாமல் நிகழ்ந்ததால் தான், இன்று பெங்களூரு மிகவும் மோசமான போக்குவரத்து நெரிசலால் அவதிப்படுகிறது. ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கான மக்கள் தங்கள் அலுவலகங்களுக்கு செல்லும்போது, மணிக் கணக்கில் வாகன நெரிசலில் சிக்கிக்கொண்டு நேரத்தையும், எரிபொருளையும் இழந்து வருகின்றனர்.

எனவே வாழ்வதற்கும், பயணிப்பதற்கும் திட்டமிடலுடன் நகரங்களை உருவாக்குவது அவசியமாகிறது என்று சோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "சிங்கப்பூர் உலகில் வாழத்தகுதியுள்ள நகரமாகவும், முன்னேறிய பொருளாதாரங்களில் ஒன்றாகவும் திகழ்கிறது. இருப்பினும், அங்கு தனியார் வாகனங்கள் குறைந்த அளவிலேயே பயன்படுத்தப்படுகின்றன. பொதுப் போக்குவரத்துதான் அங்கு முதன்மையாக இருக்கிறது. அதற்கு முக்கியக் காரணம் 'Certificate of Entitlement' சான்றிதழ். இந்த சான்றிதழ் இல்லாமல், அங்கு ஒருவர் தனியார் கார் வைத்திருக்க முடியாது. அந்த சான்றிதழுக்கே இந்திய மதிப்பில் ரூ.60 லட்சம் செலவாகும் என்று தெரிவித்துள்ளார்.

பெங்களூரு போக்குவரத்து நெரிசலுக்கு சிங்கப்பூர் முறை தான் சிறந்த தீர்வு.. ஸ்ரீதர் வேம்பு அட்வைஸ்..!!

ஸ்ரீதர் வேம்பு இந்தக் கருத்தை, பெங்களூருவில் வடக்கு-தெற்கு பகுதிகளை இணைக்கும் ரூ.17,780 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள 16 கி.மீ சுரங்க சாலை திட்டம் குறித்த பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யாவின் பதிவுக்கான பதிலாக பகிர்ந்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், "நம் சாலை சிங்கப்பூரைப் போல வாழ்வும், போக்குவரத்தும் சமநிலையில் இருக்கும் வகையில் திட்டமிட வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு கருத்து தெரிவித்துள்ள பயனர், "நாம் புதிய நகரங்களையும் கட்டிக்கொள்ளலாம். பெரிய நகரங்களில் பல சிறிய நகரங்களும் உள்ளன. அவற்றை மேம்படுத்தி வளர்க்கலாம். பெரிய நகரங்களில் அதிகமான மக்கள் வசித்து வருவதால், அவர்களை சிறிய நகரங்களுக்கும், பின்னர் கிராமங்களுக்கும் நகர வைத்து வாழ வைக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

மற்றொரு பயனர், "சிங்கப்பூர் போல், தனியார் கார் உரிமை முறையை இந்தியாவில் செயல்படுத்தினால், பொதுமக்களுக்கு அது ஏற்றதாக இருக்குமா? அப்படி என்றால், முதலில் நமது நெறியாளர்கள் இதைப் பற்றி யோசித்துள்ளார்களா..? என்பது கேள்வி" என்று தெரிவித்துள்ளார்.

பெங்களூருவில், ஹெப்பால் ஜங்க்ஷனில் உள்ள எஸ்டீம் மால் பகுதியில் இருந்து சென்ட்ரல் சில்க் போர்டு ஜங்க்ஷன் வரை ஒரு புதிய சுரங்க சாலை அமைக்கும் திட்டம் அமலில் இருக்கிறது. இந்த சுரங்க சாலை செயல்பாட்டுக்கு வரும் பட்சத்தில், தற்போது 60 நிமிடங்கள் வரை எடுக்கும் பயண நேரம் 20 முதல் 25 நிமிடங்கள் வரை மட்டுமே ஆகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுரங்கம், நிலத்தடியில் 30 மீட்டர் ஆழத்தில் அமைக்கப்பட உள்ளது. இதற்கு 8 Tunnel Boring Machines எனப்படும் பெரிய இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம், பெங்களூருவின் இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைந்து, பயணிகள் வேகமாகவும், சிரமமின்றியும் பயணம் செய்யும் வசதி உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மொத்த கட்டுமான வேலைகள் 26 மாதங்கள் எடுத்துக் கொள்ளும் என அதிகாரிகள் கணித்துள்ளனர். அதன் பிறகு, குடிநீர், மின் இணைப்பு, சாலை அமைப்பு உள்ளிட்ட மற்ற சிவில் பணிகள் மேற்கொள்ள 12 மாதங்கள் கூட ஆகும் என்று கூறப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+