இந்தியாவின் மாபெரும் SAAS நிறுவனங்களில் ஒன்றாகவும், சென்னையை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் வர்த்தகம் செய்யும் ஜோஹோ நிறுவனத்தின் இணை நிறுவனரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஸ்ரீதர் வேம்பு AI உதவியுடன் கோடிங் எழுதும் யுகத்தில் சாஃப்ட்வேர்-ஆஸ்-எ-சர்வீஸ் (SaaS) நிறுவனங்களின் எதிர்காலம் குறித்து கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
AI புரட்சிக்கு முன்பே SaaS துறை ஒருங்கிணைப்புக்கு (consolidation) தயாராக இருப்பதாக ஸ்ரீதர் வேம்பு கூறி வந்தாக தனது டிவீட்டில் தெரிவித்துள்ளார். மேலும் சேல்ஸ் மற்றும் மார்க்கெட்டிங்குக்கு பெரும் தொகை செலவழிக்கும் அதே நேரத்தில் இன்ஜினியரிங் மற்றும் ப்ராடெக்ட் மேம்பாட்டுக்கு குறைவாக செலவிடும் மாடல் எப்போதுமே பலவீனமானது.

இதோடு வென்ச்சர் கேப்பிட்டல் மற்றும் பங்குச் சந்தை குமிழ்கள் இந்த தவறான மாடலை நீண்ட காலம் இயங்க செய்தன. AI இப்போது பூதாகரமாக வளர்ந்துள்ள குமிழலை உடைக்கும் ஊசியாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும் ஏஐ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி காரணமாக பங்குச்சந்தைகள் தற்போது SAAS துறையின் மீது எதிர்மறையான எண்ணத்தை கொண்டு உள்ளது என எச்சரித்தார் ஸ்ரீதர் வேம்பு.
ஸ்ரீதர் வேம்பு-வின் இந்த எச்சரிக்கை டிவீட் மிகவும் சரியான நேரத்தில் வந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்ய. ஏஐ நிறுவனமான அன்த்ரோபிக் நிறுவனம் தனது களாட் AI தேவையில் ஒரு நிறுவனத்தில் சாப்ட்வேர் டெவலப்மெனட் தவிர அனைத்து வேலைகளையும் தானாக செய்யும் AI கருவிகளை அறிமுகப்படுத்தியது மூலம் உலகளவில் டெக் துறை பெரும் பாதிப்பை பங்குச்சந்தையில் எதிர்கொண்டு வருகிறது.
இதனால் இந்திய ஐடி பங்குகள் கடுமையாக சரிந்தன. நிஃப்டி ஐடி குறியீடு 7-8 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தது. ஒரே நாளில் இந்திய ஐடி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.2 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. இதை அடிப்படையாக வைத்து தான் ஸ்ரீதர் வேம்பு இன்று இந்த டிவீட்டை வெளியிட்டு உள்ளார்.
இந்த நிலையில் தற்போது நடக்கும் SaaSpocalypse-யில் இருந்து ஜோஹோ நிறுவனம் AI அலையை எதிர்கொள்ளும் திறன் கொண்டுள்ளதாக என்ற கேள்விக்கும் ஸ்ரீதர் வேம்பு பதில் அளித்துள்ளார்.
ஜோஹோ நிறுவனம் எந்த அளவுக்கு ஏஐ பயன்படுத்தி, அதை ஏற்றுக்கொண்டு இயங்குகிறதோ, அதன் அடிப்படையில் வளரும் என தனது டிவீட்டில் தெரிவித்துள்ளார்.
மேலும் ஸ்ரீதர் வேம்பு தனது ஊழியர்களிடம் "நமது மரணத்தை அமைதியாக சிந்திக்க வேண்டும்" என்று அடிக்கடி கூறுவதாக தெரிவித்துள்ளார். மரணத்தை ஏற்றுக்கொள்ளும் போது அச்சமின்றி செயல்பட முடியும் என்றும், அப்போது தான் சரியான பாதையை தெளிவாக தீர்மானிக்க முடியும் என்று கூறி தனது டிவீட்டை முடித்துள்ளார் ஸ்ரீதர் வேம்பு.
இந்திய ஐடி துறைக்கு இது குறுகிய கால சரிவு மட்டுமல்ல, கட்டமைப்பு மாற்றத்தின் தொடக்கம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
More From GoodReturns

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!



Click it and Unblock the Notifications