ZOHO ஸ்ரீதர் வேம்பு மீது மனைவி பிரமிளா சீனிவாசன் கொடுத்த புகார்? கலிபோர்னியாவில் விவாகரத்து வழக்கு

இந்திய ஸ்டார்ட்அப் சந்தையில் ஸ்டார் நிறுவனமாக இருக்கும் ZOHO-வின் நிறுவனர் மற்றும் சிஇஓ-வாக இருக்கும் ஸ்ரீதர் வேம்பு அமெரிக்காவில் 25 வருடம் பணியாற்றிவிட்டு சென்னையில் மாபெரும் வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி தமிழ்நாட்டில் ஸ்டார்ட்அப் கலாச்சார வெற்றிக்கு வித்திட்டவர் என்றால் மிகையில்லை.

ஸ்ரீதர் வேம்பு பெரு நிறுவனங்கள், மெட்ரோ நகரங்களை விடுத்து கிராமங்களில் அலுவலகத்தை அமைத்து வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என கூறியது மூலம் இளைஞர்கள் மத்தியில் பெரும் மதிப்பை பெற்றார். இதற்கு முன்னுதாரணமாக ஸ்ரீதர் வேம்பு தற்போது சென்னை தலைமை அலுவலகத்தை விடுத்து தான் இளம் காலத்தில் வளர்ந்த மத்தளம்பாறை பகுதிக்கு குடிபெயர்ந்துள்ளார்.

இந்த நிலையில் ஸ்ரீதர் வேம்பு மீது அவருடைய மனைவி பிரமிளா சீனிவாசன் விவாகரத்து வழக்கின் விசாரணையில் முக்கியமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஸ்ரீதர் வேம்பு மற்றும் பிரமிளா சீனிவாசன்

ஸ்ரீதர் வேம்பு மற்றும் பிரமிளா சீனிவாசன்

ஸ்ரீதர் வேம்பு மற்றும் பிரமிளா சீனிவாசன் இருவருக்கும் திருமணமாகி கிட்டத்தட்ட 30 வருடம் ஆன நிலையில், ஸ்ரீதர் வேம்பு 2020 ஆம் ஆண்டு துவக்கத்தில் இந்தியா சென்றதாகவும், அதன் பின்பு அமெரிக்காவுக்கு திரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். மேலும் நவம்பர் 2020ல் பிரமிளா சீனிவாசன் வாட்ஸ்அப்-ல் தொடர்பு கொண்டு விவாகரத்து கேட்டுள்ளார்.

கலிப்போர்னியா நீதிமன்றம்

கலிப்போர்னியா நீதிமன்றம்

இதற்காக ஆகஸ்ட் 2021ல் விவாகரத்து பெற அமெரிக்காவில் கலிப்போர்னியா நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது பிரமிளா சீனிவாசன் தன் பெயரில் இருந்து ZOHO பங்குகளை ஸ்ரீதர் வேம்பு வேண்டுமென்றே பரித்து தனது சகோதரி மற்றும் அவருடைய கணவர் பெயரில் மாற்றியுள்ளார். அதை தன்னிடமும் எதுவும் சொல்லாமல் செய்துள்ளார் என்பதையும் பிரமிளா சீனிவாசன் கூறியதாக போர்ப்ஸ் வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது.

 கம்யூனிட்டி சொத்துக்கள்

கம்யூனிட்டி சொத்துக்கள்

மேலும் பிரமிளா சீனிவாசன், என்னுடைய கணவர் 29 வருடத்திற்கு பின்பு என்னையும் எங்களுடைய மகனையும் 2020ல் விட்டு சென்றார் என ஜனவரி மாத வழக்கு விசாரணையின் போது தெரிவித்துள்ளார். இதோடு என்னையோ, என் குடும்பத்திடமோ எவ்விதமான அனுமதியுமின்றி எங்கள் பெயரில் இருந்த கம்யூனிட்டி சொத்துக்களையும் அவருடைய குடும்ப உறுப்பினர்கள் பெயருக்கு மாற்றியுள்ளார் என பிரமிளா சீனிவாசன் தெரிவித்துள்ளதாக போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

 பிரமிளா சீனிவாசன் வழக்கறிஞர்

பிரமிளா சீனிவாசன் வழக்கறிஞர்

இதுக்குறித்து உண்மையை தெரிந்துக்கொள்ள போர்ப்ஸ் பிரமிளா சீனிவாசன்-ஐ அணுகிய போது அவர் பேச மறுத்துவிட்டதாகவும், ஆனால் பிரமிளா-வின் வழக்கறிஞர் John Farley பேசியுள்ளார். திருமணத்தில் இருக்கும் போது கம்யூனிட்டி சொத்துக்களை ஒருவர் அனுமதி இல்லாமல் மற்றவர் விற்கவோ அல்லது பெயர் மாற்றமோ செய்யக்கூடாது என தெரிவித்தார். கம்யூனிட்டி சொத்துக்கள் என்பது கணவன் மற்றும் மனைவிக்கு மத்தியிலான சொத்துக்கள், இதில் இருவருக்கும் 50:50 பங்கீடு உள்ளது.

ஸ்ரீதர் வேம்பு பதில்

ஸ்ரீதர் வேம்பு பதில்

இந்த நிலையில் போர்ப்ஸ்-க்கு ஈமெயில் மூலம் பதில் அளித்துள்ள ZOHO நிறுவனர் மற்றும் சிஇஓ-வான ஸ்ரீதர் வேம்பு, தான் எந்த பங்குகளையும், யாருடைய பெயருக்கும் மாற்றவில்லை, இதனால் இந்த கேள்விக்கே இடமில்லை. இந்தியாவுக்கு வந்தது என்னுடைய கனவு திட்டமான தொழில்நுட்பத்தின் வாயிலாக ஊரக வளர்ச்சி மற்றும் மீட்கும் முயற்சியை நினைவாக்க தான்.

இந்தியாவுக்கு அழைப்பு

இந்தியாவுக்கு அழைப்பு

பிரமிளா மற்றும் என்னுடைய மகன் சித்து-வை இந்தியாவுக்கு அழைக்க முயற்சித்தேன், ஆனால் மறுத்திவிட்டார், கொரோனா தொற்று இதை மேலும் மோசமாக்கியது. பிரமிளா-வுக்கும் என்னுடைய மகனுக்கும் எவ்விதமான நிதியியல் கவலைகளையும் அளிக்கவில்லை என விளக்கம் கொடுத்துள்ளர் என போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

ZOHO நிறுவனம்

ZOHO நிறுவனம்

ZOHO நிறுவனத்தை ஸ்ரீதர் வேம்பு தலைமையிலான குழு நிர்வாகம் செய்து வந்தாலும், இந்த நிறுவனத்தில் ஸ்ரீதர் வேம்பு, ஸ்ரீதர் வேம்பு-வின் சகோதரி ராதா வேம்பு, சகோதரன் சேகர் வேம்பு ஆகியோர் அதிகப்படியான பங்குகளை வைத்துள்ளனர். போர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலின் படி ராதா வேம்பு சொத்து மதிப்பு 2.2 பில்லியன் டாலர், சேகர் வேம்பு சொத்து மதிப்பு 1.6 பில்லியன் டாலர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+