இலங்கை தனது சுதந்திரத்திற்குப் பின்பு மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது, நாளுக்கு நாள் அதிகரித்து வரும் விலைவாசி, வாழ்வாதாரத்தை இழந்த மக்கள், பொறுமையை இழந்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திடீர் பெட்ரோல் விலை உயர்வைக் கண்டித்து மக்கள் நெடுஞ்சாலையை மறித்தும், ரம்புக்கன பகுதியில் ரயில் தண்டவாளத்தில் போராட்டம் நடத்தியதில், காவல்துறையின் நடவடிக்கையில் போலிசார் துப்பாக்கி சூடு மூலம் ஒருவர் கொல்லப்பட்டு 13 பேர் காயமுற்றனர். இதன் பின்பு மக்கள் போராட்டம் மிகப்பெரியதாக வெடித்துள்ளது.
இலங்கைக்கு இந்தியா, சீனா, ஐஎம்எப் உதவி செய்கிறது.
இந்தியாவின் வளர்ச்சிக்கு இது தான் சரியான வழி.. ஐஎம்எஃப் கூறியது என்ன?

இந்தியா
இலங்கைக்குத் தற்போது மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில் இந்தியா உதவ முன் வந்துள்ளது. இலங்கையிடம் போதுமான அன்னிய செலாவணி இல்லாத காரணத்தால் வெளிநாட்டில் இருந்து நேரடியாகக் கச்சா எண்ணெய் எரிபொருளை வாங்க முடியாது.

500 மில்லியன் டாலர்
இந்த நிலையில் இலங்கையின் முக்கியமான பிரச்சனையைத் தீர்க்கும் வகையில் பல முறை டீசல் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ள நிலையில், எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு இந்தியா கூடுதலாக 500 மில்லியன் டாலர் நிதியுதவியை வழங்கியுள்ளதாக இலங்கையின் வெளி விவகார அமைச்சர் தெரிவித்தார்.

பங்களாதேஷ்
இந்தியாவைத் தொடர்ந்து பங்களாதேஷ் அரசும், பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்குச் சுமார் 450 மில்லியன் டாலர் அளவிலான ஸ்வாப் பணப் பரிமாற்றத்தை ஒத்திவைத்து உதவுவதாக அறிவித்துள்ளது. இந்த நிதியுதவி இலங்கைக்குத் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய எளிதாக உதவும்.

சீனா
நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை சீனாவிடம் உதவி கோரிய நிலையில் பல வாரத்திற்குப் பின்பு தற்போது பதில் அளித்துள்ளது.
இலங்கை சீனாவிடம் வாங்கிய பெரிய கடன்கள் மற்றும் முதலீடுகள் கடன் தான் பொருளாதாரச் சரிவுக்கு மிக முக்கியமான காரணமாக இருக்கிறது எனக் கூறப்பட்டு வந்த நிலையில், சீன முதலீட்டுக்கு போதுமான லாபம் கிடைக்காத காரணத்தால் உதவி செய்ய மறுத்து வந்த நிலையில், தற்போது அவசரக்கால அடிப்படையில் மனிதாபிமான உதவி வழங்குவதாகக் கூறியதுள்ளது. மேலும் இலங்கையில் கடன் மறுசீரமைப்புக்கான கோரிக்கைக்குச் சீனா எவ்விதமான பதிலும் அளிக்கவில்லை.

சர்வதேச நாணய நிதியம்
கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாது என் அறிவித்த நிலையில் இலங்கை தற்போது IMF அமைப்பிடம் கடன் உதவிகளைப் பெறப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில் சர்வதேச நாணய நிதியத்தின் உதவி வருவதற்குச் சுமார் ஆறு மாதங்கள் ஆகும், மேலும் அந்த உதவிகளும் தவணையாகவே வரும் என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸ் கூறினார்.

அத்தியாவசிய பொருட்கள்
இந்த இடைப்பட்ட காலத்தில், எங்கள் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு நாங்கள் நிதியைக் பிற நாடுகளிடம் இருந்து கடனாகப் பெற்று வரும் முயற்சியில் உள்ளம் எனவும் ஜி.எல். பீரிஸ் கூறியுள்ளார்.