உலக நாடுகள் அனைத்தும் தற்போது இலங்கையின் பொருளாதாரச் சூழ்நிலையை உற்று நோக்கி வரும் நிலையில், தற்போது அமெரிக்காவைச் சேர்ந்த ரேட்டிங் அமைப்பு முக்கியமான ஆய்வு முடிவுகளை வெளியிட்டு உள்ளது.
இந்த ஆய்வு இலங்கை அரசை மட்டும் அல்லாமல் இலங்கை மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இலங்கை
மோசமான பொருளாதாரம் மற்றும் வர்த்தக நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் முன்னாள் இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷே பதவி விலக வேண்டும் எனப் பல நாள் மக்கள் போராட்டம் நடத்தி வந்தனர். மஹிந்த ராஜபக்ஷ ராஜினாமா செய்த பின்னர் அவரின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களைத் தாக்கியதால் மக்கள் போராட்டம் வன்முறையாக மாறியது.
அரசு சொத்துக்கள்
இந்த வன்முறையில் அரசு சொத்துக்களில் ஏற்பட்ட சேதம் மற்றும் இதர பாதிப்புகள் மூலம் இலங்கை அரசின் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்குச் சுமார் 1 பில்லியன் இலங்கை ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாக நியூயார்க் நகரைச் சேர்ந்த Fitch அமைப்பு ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
பாதிப்பு
இலங்கையில் ஏற்பட்ட இந்த வன்முறையில் 10 பேர் மரணம் அடைந்தனர், 200க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர், 78 நாடாளுமன்ற உறுப்பினர்களின் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டு தீக்கிரையாகியுள்ளன.
நேஷனல் இன்சூரன்ஸ் டிரஸ்ட் பண்ட்
இலங்கை அரசின் நேஷனல் இன்சூரன்ஸ் டிரஸ்ட் பண்ட் போர்டு (NITFB) இந்த அமைப்பு இலங்கையில் ஏற்படும் வேலைநிறுத்தம், போராட்டம், மக்கள் கலவரம் மற்றும் பயங்கரவாதம் ஆகியவற்றின் மூலம் ஏற்படும் பதிப்புகளுக்குக் காப்பீடு அளிக்கிறது. இதன் மூலம் மே 9ஆம் தேதி கலவரத்தின் மூலம் NITFB அமைப்பிற்கு 100 கோடி ரூபாய் (LKR) பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொருளாதாரக் கொள்கை
ஏற்கனவே உலக வங்கி, ஐஎம்எப் அமைப்புகள் இலங்கை அரசிடம் சரியான பொருளாதாரக் கொள்கை இல்லாத காரணத்தால் கடன் உதவி திட்டங்களைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிலையில் இலங்கை அரசுக்கு ஏற்படும் 100 கோடி ரூபாய் அளவிலான நஷ்டம் அரசுக்கு மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications