தமிழ்நாடு மற்றும் கர்நாடக மாநிலத்திற்கு மத்தியில் எப்போதும் புதிய முதலீடுகளை ஈர்ப்பதிலும், அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் அதிகப்படியான போட்டியை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையில் இலங்கையில் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன் பெரும் தொகையைக் கர்நாடகாவில் முதலீடு செய்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் லார்ஜ் மற்றும் மீடியம் தொழிற்துறை அமைச்சரான எம்.பி.பாட்டில் அவர்கள், இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் கர்நாடகாவில் ரூ.1400 கோடி முதலீட்டில் பானங்கள் மற்றும் இனிப்பு வகை பொருட்களை உற்பத்தி தொழிற்சாலை அமைக்கத் திட்டமிட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார்.

முத்தையா முரளிதரனைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. கர்நாடக மாநில அமைச்சர் எம்.பி.பாடடில் தனது டுவிட்டர் பக்கத்தில், "இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரன் ஓய்வு பெற்ற பின்னர் தொழிலதிபராக மாறிவிட்டார். அவர் தனது சொந்த நாட்டில் பானங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையை நிறுவியிருக்கிறார். தற்போது விரிவாக்கம் செய்ய கர்நாடகாவை தேர்ந்தெடுத்துள்ளார்" என்று குறிப்பிட்டுள்ளார்.
சாமராஜநகர் மாவட்டத்தில் ரூ.1000 கோடி மதிப்பிலான உற்பத்தி தொழிற்சாலை தற்போது கட்டப்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலைக்கும் அதன் வர்த்தகத்திற்கும் சுமார் ரூ.1400 கோடி வரையிலான முதலீட்டைச் செய்யத் திட்டமும் கொண்டுள்ளார் முத்தையா முரளிதரன். மேலும், தார்வாட் நகரிலும் தொடர்ந்து இயங்க திட்டமிட்டுள்ளார்.
"முத்தையா பானங்கள் மற்றும் இனிப்பு வகைகள்" என்ற பெயரில் இந்த பானங்கள் மற்றும் இனிப்பு வகைகள் தயாரிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
முத்தையா முரளிதரன் தொழிற்சாலைக்காக 46 ஏக்கர் நிலம் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2025 முதல் உற்பத்தி பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முத்தையா முரளிதரன், டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகள் எடுத்தவர் என்ற சாதனையைக் கொண்டுள்ளார். ஓய்வு பெற்ற பின்னர் தொழிலதிபராக மாறி தனது சொந்த நாட்டிலும், தற்போது கர்நாடகாவிலும் தொழிற்சாலைகளை நிறுவுவதன் மூலம் இந்தியத் தொழில் துறையில் அடியெடுத்து வைத்துள்ளார். இதன் மூலம் கர்நாடகாவில் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!



Click it and Unblock the Notifications