சென்னை: இந்தியாவின் 4வது பெரிய ஐடி சேவை நிறுவனமான விப்ரோ ஜூன் 30 உடன் முடிவடைந்த காலாண்டு முடிவுகளை வெளியிட்டு உள்ளது. புதிய சிஇஓ-வாக பதவியேற்றியுள்ள ஸ்ரீனிவாஸ் பல்லியா தலைமையில் வெளியிடும் முதல் காலாண்டு முடிவு என்பதால் இது கொஞ்சம் ஸ்பெஷல். ஸ்ரீனிவாஸ் பல்லியா பதவிக்கு வந்த நாளில் இருந்து உயர்மட்ட நிர்வாகத்தில் பல மாற்றங்கள் நடந்துள்ளது, இதன் மூலம் விப்ரோ வர்த்தகம் வளர்ச்சிப் பாதைக்கு வேகமாகத் திரும்பியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஜூன் காலாண்டில் விப்ரோ நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் ரூ.3,003 கோடி என இக்காலாண்டு முடிவில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இது கடந்த ஆண்டு இதே காலாண்டில் அறிவிக்கப்பட்ட ரூ.2,870 கோடியுடன் ஒப்பிடும்போது 4.6% அதிகமாகும்.

ஆனால், வருவாயில் சரிவு காணப்படுவது முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயமாகும். கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.22,831 கோடியாக இருந்த வருவாய், இந்த காலாண்டில் ரூ.21,964 கோடியாகக் குறைந்துள்ளது. இதன் மூலம் விப்ரோ வருவாயில் 4% சரிவைப் பதிவு செய்துள்ளது. விப்ரோ காலாண்டு முடிவுகள் முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகளைக் காட்டிலும் அதிகமாக இருந்தாலும், கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
இந்த ஜூன் காலாண்டில் வரிக்கு பிந்தைய நிறுவனத்தின் லாபம் (PAT) சந்தை மதிப்பீடுகளான ரூ.2,993 கோடியை விட அதிகமாக இருந்தாலும், வருவாய் எதிர்பார்க்கப்பட்ட ரூ.22,258 கோடியை விடக் குறைவாக உள்ளதே இந்த கலவையான விமர்சனங்களுக்கு முக்கிய காரணமாகும்.
மேலும் அடுத்த காலாண்டு அதாவது செப்டம்பர் 30 உடன் முடிவடையும் காலாண்டிற்கான வழிகாட்டுதலை விப்ரோ நிறுவனம் இன்று வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டுதலின் படி விப்ரோ நிறுவனத்தின் சேவைப் பிரிவின் வருவாய் 2,600 மில்லியன் டாலர் முதல் 2,652 மில்லியன் டாலர் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இது நிலையான நாணய மதிப்பில் இது -1.0% முதல் +1.0% வரையிலான வளர்ச்சியைக் குறிக்கிறது.
விப்ரோ நிறுவனம் ஜூன் காலாண்டில் மொத்தமாக 3,284 மில்லியன் டாலர் மதிப்பிலான புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டு உள்ளன. இதில் பெரிய ஒப்பந்தங்களின் மதிப்பு 1,154 மில்லியன் டாலராகும். கடந்த காலாண்டை விட 3.1% மற்றும் கடந்த ஆண்டின் ஜூன் காலாண்டைக் காட்டிலும் 3.6% குறைவான ஆர்டர்களை பெற்றுள்ளது விப்ரோ.
இறுதியாக விப்ரோ நிறுவனத்தின் இந்த காலாண்டு முடிவுகள் லாபம் சிறிது உயர்ந்திருந்தாலும், வருவாய் குறைந்துள்ளது கவலை அளிக்கிறது. எதிர்கால வழிகாட்டுதல்களும் வருவாயில் கட்டாயம் பெரிய அளவிலான வளர்ச்சியை பதிவு செய்யும் என்பதற்கான சிக்னல் இல்லை. இதனால் ஸ்ரீனிவாஸ் பல்லியா நிர்வாகத்திற்கு கூடுதல் கால அவகாசம் தேவை என சந்தை வல்லுனர்கள் கூறுகின்றனர்.
மேலும் ஐரோப்பாவில் ஏற்கனவே வட்டி விகிதத்தை குறைத்திருக்கும் வேளையில் அமெரிக்க மத்திய வங்கியும் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இருந்து 2024 இறுதி வரையில் 2 முறை வட்டியை குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விப்ரோ-வுக்கு புதிய வர்த்தகத்தைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதேவேளையில் போட்டியும் அதிகமாக உள்ளது.
More From GoodReturns

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications