அமெரிக்க அதிபராக ஜனவரி மாதம் பதவியேற்க உள்ள டொனால்ட் டிரம்ப், அடுத்தடுத்து முக்கிய பதவிகளில் முக்கிய நபர்களை நியமித்து வருகிறார். இவ்வருடைய ஒவ்வொரு நியமன அறிவிப்பும் சமுக வலைத்தளத்திலும், அமெரிக்க மக்கள் மத்தியில் கடுமையான விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.
இதன் வரிசையில் செயற்கை நுண்ணறிவு (AI) தொடர்பான மூத்த வெள்ளை மாளிகை கொள்கை ஆலோசகராக இந்திய-அமெரிக்க தொழிலதிபரும் வென்சர் முதலீட்டாளரான ஸ்ரீராம் கிருஷ்ணன் நியமிக்கப்பட்டு உள்ளார் என டிரம்ப் எனது டிவிட்டர் பதிவில் தெரிவித்தார். ஸ்ரீராம் கிருஷ்ணன் அமெரிக்க அரசின் AI தொடர்பான கொள்கையை வடிவமைத்து ஒருங்கிணைப்பார் என்று டிரம்ப் கூறினார்.

மேலும் ஸ்ரீராம் கிருஷ்ணன் அதிபரின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான ஆலோசகர்கள் குழுவுடன் இணைந்து பணியாற்றுவார். ஸ்ரீராம் கிருஷ்ணன் ஒரு சென்னை பையன், மைக்ரோசாப்டின் விண்டோஸ் அஸூர் குழுவின் நிர்வாக உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இதை தொடர்ந்து பல்வேறு முதலீட்டு நிறுவனத்தில் இணைந்து பணியாற்றினார்.
சமீபத்தில் எலான் மஸ்க் டிவிட்டரை கைப்பற்றிய பின்னர், அதை நிர்வாகம் செய்யும் முக்கிய பணியில் மஸ்க், ஸ்ரீராம் கிருஷ்ணனை நியமித்திருந்தார். ஆனால் சில மாதங்களில் டிவிட்டர் நிர்வாகம் சீரடைந்த உடன் அவர் வெளியேறிவிட்டார்.
ஸ்ரீராம் கிருஷ்ணனும் இந்த நியமனம் குறித்து டிரம்புக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்திருந்தார். மேலும் வெள்ளை மாளிகை மாளிகையில் AI துறையில் பணியாற்றுவதையும், PayPal இன் முன்னாள் COO டேவிட் சாக்ஸ் உடன் ஒத்துழைப்பதாகக் கூறினார்.
சென்னை பிறந்த ஸ்ரீராம் கிருஷ்ணன், கஞ்சிபுரம் மாவட்டம் கட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில்நுட்பத்தில் பி.டெக் பட்டம் பெற்றார். 2005 ஆம் ஆண்டு 21 வயதில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். இவரது தந்தை காப்பீட்டுத் துறையில் பணியாற்றினார், தாய் இல்லத்தரசி.
2005 ஆம் ஆண்டில் மைக்ரோசாஃப்டில் தனது பணியை தொடங்கிய ஸ்ரீராம் கிருஷ்ணனின் தொழில்நுட்ப உலகில் பல முக்கியமான நிறுவனத்தில் பல உயரிய பதவிகளில் பணியாற்றியுள்ளார். ட்விட்டர், யாஹூ, ஃபேஸ்புக் மற்றும் ஸ்னாப் போன்ற நிறுவனங்களில் ப்ராடெக் டீம்-ஐ தலைமை தாங்கி வழிநடத்தியுள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications