ஃபௌஜி என்ற தூர்தர்ஷன் சீரியல் மூலம் அறிமுகமான நடிகர் ஷாரூக் கான் இன்றைக்கு பாலிவுட் மெகா ஸ்டாராக விளங்குகிறார். கடந்த 30 ஆண்டுகளாக ரசிகர்களை தனது நடிப்பால் மகிழ்வித்து வரும் ஷாரூக் கானின் நிகர சொத்து மதிப்பு தற்போது ரூ.6,300 கோடி ஆகும். நடிப்பு தவிர பல்வேறு தொழில்களில் ஷாரூக் கான் முதலீடு செய்து வருமானத்தைப் பெறுகிறார்.
ஷாரூக் கானைப் போலவே அவரது பக்கத்துவீட்டுக்காரரான ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சுபாஷ் ரன்வாலும் தனது வாழ்க்கைப் பயணத்தை எளிமையாகவே தொடங்கினார்.

1964இல் மகாராஷ்டிர மாநிலம் துலியா என்ற சிறிய கிராமத்தில் இருந்து தனது பாக்கெட்டில் வெறும் 100 ரூபாயுடன் மும்பைக்கு வந்து குடியேறியவர் சுபாஷ் ரன்வால். நீங்கள் எதையாவது முழு மனதோடு நேசித்தால் அதை ஷாரூக் கானின் ஓம் சாந்தி ஓம் படத்தில் வரும் இந்தப் பிரபஞ்சம் உங்கள் வசம் கொண்டு வந்து சேர்க்கும் என்ற வசனத்துக்கு ஏற்ப ரன்வாலின் வாழ்க்கையும் அமைந்தது.
ரியல் எஸ்டேட் பிசினஸில் ஈடுபட்ட ரன்வாலின் நிகர சொத்து மதிப்பு இப்போது ரூ.11,560 கோடி என போர்ப்ஸ் கணித்துள்ளது. ரன்வால் குரூப்பின் தலைவரான சுபாஷ் ரன்வால் மிகப் பெரிய ரியல் எஸ்டேட் அதிபர் ஆவார். மும்பையின் பாந்த்ராவில் கடற்கரையோரமாக அமைந்துள்ள ஷாரூக் கான் வீட்டின் பக்கத்து வீட்டில் சுபாஷ் ரன்வால் வசித்து வருகிறார்.
தாணேயில் முதன்முதலாக 10,000 சதுர அடியில் தனது முதல் ஹவுசிங் சொசைட்டியை அமைத்தார். அடுத்த சில ஆண்டுகள் கழித்து ரன்வாலின் பிரதான திட்டமான 16 அடுக்கு மாடி வீடுகளைக் கொண்ட ரன்வால் நகர் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது.
நடுத்தர வகுப்பைச் சேர்ந்த மக்களுக்குக் கட்டுபடியாகக் கூடிய வீடுகளை மும்பையில் கட்டித்தரவேண்டும் என்ற நோக்கத்தில் சுபாஷ் ரன்வால் செயல்பட்டு வருகிறார். ரன்வால் குரூப் இப்போது பெரிய மால்களை கட்டி வருகிறது. ரன்வாலின் மகன்களும் தங்களது குடும்பத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.
கட்கோபாரில் நடிகர் அமிதாப் பச்சன் திறந்து வைத்த 12 லட்சம் பரப்பளவிலான ஆர் சிட்டி மால், முலுந்தில் ஆர் மால் போன்றவை குறிப்பிடத்தக்க திட்டங்களாகும்.
More From GoodReturns

ஆனந்த் ஸ்ரீனிவாசன்: படிச்சு படிச்சு சொன்னேன்.. யாரும் கேட்ல 'Big Drop'.. வெள்ளி அதோ கதி..!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!



Click it and Unblock the Notifications