தமிழ்நாட்டில் வரும் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. அனைத்து தொகுதிகளிலும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்பட உள்ளது.தேர்தலுக்கான முன்னேற்பாடுகளை தேர்தல் ஆணையம் கவனித்து வருகிறது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் நேற்றுடன் முடிவடைந்துவிட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் என பல்வேறு அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும் போட்டி போட்டுக் கொண்டு தங்களுடைய வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை தற்போது நடைபெற்று வருகிறது. வேட்பாளர்கள் அனைவரும் தங்களுடைய வேட்பு மனுவில் சொத்து மதிப்பு குறித்த விவரங்களை வெளியிட்டு இருக்கின்றனர். இதுதான் தற்போது சமூக வலைதளங்களில் விவாத பொருளாக மாறி இருக்கிறது.

திமுக தலைவராகவும் தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருக்கக்கூடிய முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் தன்னிடம் வாகனங்களை இல்லை எனக் கூறியிருக்கிறார். அதேபோல தங்கம்.வெள்ளி நகைகளும் இல்லை என சுட்டிக்காட்டி இருக்கிறார் . தனக்கு 3.30 கோடி ரூபாய் மதிப்பில் அசையும் சொத்தும், 4.34 கோடி ரூபாய் மதிப்பில் அசையா சொத்தும் இருப்பதாக மு. க. ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
தன்னுடைய மனைவி துர்கா ஸ்டாலின் பெயரில் 1.32 கோடி ரூபாய் மதிப்பிலான அசையும் சொத்துக்களும் 2.11 கோடி ரூபாய் மதிப்பிலான அசையா சொத்துகளும் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். தன்னுடைய பெயரில் பைக் , கார் என எதுவுமே இல்லை என ஸ்டாலின் குறிப்பிட்டு இருப்பது பேசு பொருளாக மாறி இருக்கிறது. தன்னுடைய மனைவியிடம் 90 சவரன் தங்க நகைகள் இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.

அடுத்ததாக அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தன்னுடைய வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அதில் தன்னுடைய பெயரில் எந்தவிதமான விவசாய நிலங்களும் இல்லை எனக் கூறியிருக்கிறார். நான் ஒரு விவசாயி என தொடர்ச்சியாக கூறி வந்தவர் தன்னுடைய பெயரில் விவசாய நிலங்களே இல்லை என கூறிருப்பது விவாத பொருளாக மாறி இருக்கிறது.
தன்னுடைய பெயரில் 50 லட்சம் ரூபாய்க்கு அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும், அசையா சொத்துக்கள் எதுவும் இல்லை என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார். தன் மனைவி ராதாவின் பெயரில் 3.45 கோடி ரூபாய்க்கு அசையா சொத்துக்களும் 2.16 கோடி ரூபாய்க்கு அசையும் சொத்துக்களும் இருப்பதாக எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார்.
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தனக்கு 39 லட்சம் ரூபாய் மதிப்பில் சொத்துக்கள் இருப்பதாகவும் 5 லட்சம் ரூபாய் கடன் இருப்பதாகவும் கூறி இருக்கிறார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டசபை தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருக்கும் சீமான் தன்னிடம் ரொக்க கை இருப்பாக 50000 ரூபாய் இருப்பதாகவும் அசையும் சொத்தாக 39 லட்சம் ரூபாய் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.
தன்னுடைய மனைவியிடம் நகை உட்பட 2.57 ஏழு கோடி ரூபாய்க்கு சொத்துக்கள் இருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார். மூன்று கார்கள் இருப்பதாகவும் 150 கிராம் தங்கம் கையில் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். சீமான் தன்னுடைய பெயரில் அசையா சொத்துக்களை இல்லை என்றும் 5 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருப்பதாகவும், மனைவி பெயரில் 18 லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.

தவெக தலைவர் விஜய் திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் என இரண்டு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுகிறார் அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனக்கு 404.58 கோடி ரூபாய்க்கு அசையும் சொத்து இருப்பதாகவும் அசையா சொத்துக்களின் மதிப்பு 220.15 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டு இருக்கிறார். மனைவி சங்கீதா பெயரில் 15.51 கோடி அசையும் சொத்துகளும், 3132 கிராம் தங்கம் 1 கோடி ரூபாய் மதிப்பில் வைரம் ஆகியவை இருப்பதாக தெரிவித்துள்ளார். தன்னுடைய மனைவி, தாய் மற்றும் தந்தைக்கு கடன் தந்திருப்பதாகவும் விஜய் குறிப்பிட்டிருந்தது விவாதப் பொருளானது.
தற்போது சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களாக இருப்பவர்களில் அதிக சொத்து மதிப்பு கொண்டவராக விஜய் திகழ்கிறார். அதிக சொத்து மதிப்பு கொண்ட முதலமைச்சர் வேட்பாளர்களின் ஸ்டாலின் இரண்டாம் இடத்தில் உள்ளார்.அடுத்ததாக எடப்பாடி பழனிசாமி, சீமான் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
More From GoodReturns

ரேஷன் கார்டு: தேர்தல் நடத்தை விதிகளுக்கு மத்தியில் வெளியான முக்கிய அறிவிப்பு..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

யாருங்க இவரு விஜய்க்கே டஃப் கொடுக்கிறாரு!! விஜய்க்கு அடுத்து அதிக சொத்து மதிப்பு கொண்ட வேட்பாளர்!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!



Click it and Unblock the Notifications

