தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஒரு முக்கிய நிகழ்வு நாளை நடைபெற உள்ளது. தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நடக்கும் வேளையில் 2026-27 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் அறிக்கை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது.
இந்த பட்ஜெட் தாக்கல், ஏப்ரல் மாதத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கு சில வாரங்கள் முன்பு வருவதால், தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் பெரும் எதிர்பார்ப்பையும், கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இடைக்கால பட்ஜெட்டில் என்னென்ன அறிவிப்புகள் வரும்?
தமிழ்நாடு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, நாளை காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் அறிக்கையைத் தாக்கல் செய்ய உள்ளார். இந்த அறிக்கையில், அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் பல புதிய திட்டங்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பாக, பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள், சிறு வணிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பயனளிக்கும் திட்டங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன. தேர்தல் நேரத்தில் வரும் இந்த பட்ஜெட், தமிழ்நாட்டு மக்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தும் வகையில் இருக்கும் என்பதே அனைவரின் நம்பிக்கையாக உள்ளது.
பட்ஜெட் அறிவிப்புகளுக்கு உடனடி ஒப்புதல்
இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் முக்கிய திட்டங்களை உடனடியாகச் செயல்படுத்தும் வகையில், வரும் 23ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், பட்ஜெட்டில் இடம்பெறும் புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, அவை விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் தேர்தல் நேரச்சில் சாமானிய மக்களின் நம்பிக்கையை பெறும் வகையில் பல்வேறு சாதகமான அறிவிப்பு வரலாம்.
அமைச்சர் ஆய்வு
நாளை சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வி. வேலு, சட்டப்பேரவை அரங்கில் விரிவான ஆய்வு மேற்கொண்டார். இருக்கைகள், மேசைகள், மைக்ரோஃபோன்கள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளையும் அவர் நேரில் பார்வையிட்டார். உயர்கல்வித் துறை அமைச்சர் செழியன் அவர்களும் இந்த ஆய்வில் உடனிருந்தார்.
அனைத்து உறுப்பினர்களும் நாளை கலந்துகொள்ளும் நிலையில், எந்தவித குறையும் இல்லாமல் சட்டபேரவையில் அனைத்தும் தயாராக உள்ளன.
தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பாதையில் இந்த பட்ஜெட் எப்படி முக்கியம்?
இந்த இடைக்கால பட்ஜெட், தமிழ்நாட்டின் தற்போதைய பொருளாதார வலிமையை மேலும் உறுதிப்படுத்தும். தமிழ்நாடு இந்தியாவின் முன்னணி பொருளாதார மற்றும் வளர்ச்சி மாநிலங்களில் ஒன்றாக உயர்ந்துள்ளது. இந்த வளர்ச்சியைத் தொடர்ந்து, புதிய திட்டங்கள் மூலம் மக்களின் வருமானம் அதிகரிக்கும், வேலைவாய்ப்புகள் பெருகும், உள்கட்டமைப்பு மேம்படும்.
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள இந்த நேரத்தில், முக.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு மக்கள் நலனை முன்னிறுத்தி செயல்படும் என எதிர்பார்க்கப்படுவதால் தமிழக மக்களுக்கு இந்த பட்ஜெட் மீது எதிர்பார்ப்பு அதிகமாக இருப்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.


Click it and Unblock the Notifications