முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு தந்த ஸ்டாலின்: ஆரத்தழுவி உதயநிதி தந்த பரிசு..!!

தமிழ்நாட்டில் 234 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 23ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களில் வென்றது. விஜய் தான் போட்டியிட்ட பெரம்பூர், திருச்சி கிழக்கு என இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றார்.

திமுக தலைவர் ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலேயே தோற்கடிக்கப்பட்டார். திமுக ஆட்சியை இழந்து எதிர்க்கட்சியானது. உதயநிதி ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருக்கிறார். தமிழக வெற்றிக் கழகம், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்துள்ளது. தமிழக முதலமைச்சராக விஜய் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு தந்த ஸ்டாலின்: ஆரத்தழுவி உதயநிதி தந்த பரிசு..!!

விஜய் முதலமைச்சராக பதவியேற்று கொண்ட நிலையில் , தமிழகத்தின் 17ஆவது சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது. இதில் புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள எம்எல்ஏக்களுக்கு தற்காலிக சபாநாயகர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதல் நபராக முதலமைச்சர் விஜய் பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக பொறுப்பேற்றுக்கொண்டார். முதலமைச்சர் விஜய் முதல் முறையாக சட்டமன்றத்திற்கு வருகை தந்திருந்தார் கோட் சூட் அணிந்திருந்தார்.

Also Read

முதலமைச்சர் விஜய் பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாக பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில் அமைச்சர்கள் ஒவ்வொருவராக எம்எல்ஏவாக பதவியேற்றனர். பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட புதிய எம்எல்ஏக்கள் பொறுப்பேற்று உறுதிமொழி எடுத்தனர்.

உதயநிதி ஸ்டாலின் பதவியேற்ற போது விஜய் மற்றும் உதயநிதி ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ள கூட இல்லை. சட்டமன்ற தேர்தலில் விஜய் அதிகமாக விமர்சனம் செய்தது திமுக மற்றும் அதன் தலைவர் ஸ்டாலினை தான். இந்நிலையில் சட்டசபை கூட்டம் முடிந்ததும் தலைமை செயலகத்தில் இருந்து நேரடியாக ஆழ்வார்பேட்டைக்கு முதலமைச்சர் விஜய் சென்றார்.

அங்கே திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை விஜய் சந்தித்தார். முதலமைச்சர் விஜய்யை ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின் சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். மரியாதை நிமித்தமான இந்த சந்திப்பு தமிழக அரசியலில் ஆரோக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

முதலமைச்சர் விஜய்க்கு உற்சாக வரவேற்பு தந்த ஸ்டாலின்: ஆரத்தழுவி உதயநிதி தந்த பரிசு..!!

முன்னதாக, மு.க.ஸ்டாலின் வீட்டிற்கு சென்றபோது முதலமைச்சர் விஜயை, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின், கொறடா எ.வ.வேலு, முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் வரவேற்றனர். சிறிது நேரம் விஜய் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்துரையாடினர். இதன்பின்னர் உதயநிதி ஸ்டாலின் விஜய்க்கு புத்தகம் ஒன்றை பரிசாக தந்தார்.

Recommended For You

"காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு" திமுக 75 என்ற புத்தகத்தை முதலமைச்சர் விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் பரிசாக வழங்கினார். கடந்த ஆண்டு நடைபெற்ற அறிவு திருவிழாவில் திமுக கழக இளைஞரணி சார்பில் முத்தமிழ் அறிஞர் பதிப்பகம் இந்த புத்தகத்தை வெளியிட்டது. ஃபரூக் அப்துல்லா, சரத் பவார் , பினராயி விஜயன், டி ராஜா , தேஜஸ்வி யாதன் என பல்வேறு தலைவர்கள் மற்றும் அரசியல் கருத்தாளர்கள் திராவிட இயக்கம் குறித்து முன் வைத்திருக்கும் ஆழமான பார்வைகள் இந்த புத்தகத்தில் இடம் பெற்று இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+