அதானி குழுமத்திற்கு அடுத்த அடி.. ஸ்டாண்டர்டு சார்ட்டர்டின் கவலையளிக்கும் அறிவிப்பு!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிரபல பிரிட்டிஷ் வங்கியான ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் அதானி குழுமப் பத்திரங்களை கடனுக்கு பிணையமாக ஏற்று கொள்ள முடியாது என அறிவித்துள்ளது.

சிட்டி குழுமம் மற்றும் கிரெடிட் சூசி நிறுவனங்கள் ஏற்கனவே கடனுக்கு -பிணையமாக ஏற்றுக் கொள்ளாது. அவற்றின் மதிப்பு ஜீரோவாகிவிட்டது என கூறியிருந்தது.

இந்த நிலையில் தற்போது ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் நிறுவனம் இனி பிணையமாக ஏற்றுக் கொள்ள முடியாது என அறிவித்துள்ளது.

500 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. அதானி குழும பங்குகள் 10% வரை சரிவு..!500 புள்ளிகள் சரிவில் சென்செக்ஸ்.. அதானி குழும பங்குகள் 10% வரை சரிவு..!

மோசடி

மோசடி

அதானி குழும நிறுவனங்களும் பற்பல மோசடிகளில் ஈடுபட்டன. குறிப்பாக முதலீடுகளை அதிகரிக்கும் விதமாக, மதிப்பீடுகள் அதிகரிக்கப்பட்டதாகவும், போலியான வரவு செலவு கணக்கு, வரி ஏய்ப்பு என பல மோசடிகளில் ஈடுபட்டதாகவும் ஹிண்டர்ன்பர்க் குற்றசாட்டினை முன் வைத்தது.

 முதலீட்டாளர்களின் பாதுகாப்பு முக்கியம்

முதலீட்டாளர்களின் பாதுகாப்பு முக்கியம்

இந்த குற்றசாட்டின் மத்தியில் அதானி குழும பங்குகள் பலத்த சரிவினைக் கண்டன. இந்த சரிவின் மத்தியில் பல்வேறு நிதி நிறுவனங்களும் அதானி குழுமத்திற்கு கடன் கொடுப்பதை நிறுத்தியுள்ளன.

இதற்கிடையில் ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் நலன் கருதி, இந்த பாதுகாப்பு நடவடிக்கையை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

பத்திரங்களுக்கு மதிப்பு இல்லை
 

பத்திரங்களுக்கு மதிப்பு இல்லை

எனினும் இந்த முடிவு தற்காலிகமானது என்பது சற்றே ஆறுதல் அளிக்கும் ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.

முதன் முதலாக கிரெடிட் சூசி, இதனை பிணையமாக ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறிய நிலையில், அதன் மதிப்பினையும் ஜீரோ என கூறியது. அதானி போர்ட்ஸ் & செஸ், அதானி கிரீன் எனர்ஜி மற்றும் அதானி எலக்ட்ரிசிட்டி மும்பை உள்ளிட்ட நிறுவனங்களின் பத்திரங்களுக்கு மதிப்பு இல்லை என தெரிவித்துள்ளது.

கடும் வீழ்ச்சி

கடும் வீழ்ச்சி

முன்னதாக அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் கடன் பத்திரங்களின் மதிப்பில், 75% வங்கிகள் கடன் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

ஆனால் தற்போது பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் அதானி குழும பங்குகள் கடும் சரிவினைக் கண்டு வருகின்றன. இதனால் அதானி குழுமத்தின் சந்தை மதிப்பும் கடும் சரிவினைக் கண்டுள்ளன. இதற்கிடையில் அதானியின் நிகர மதிப்பும் கடும் சரிவினைக் கண்டுள்ளது. இதனால் நிறுவனங்கள் கடன் கொடுப்பதையும் நிறுத்திவிட்டன.

எஃப் பி ஓ ரத்து?

எஃப் பி ஓ ரத்து?

அதானி குழுமம் இத்தகைய அதன் சர்ச்சைகளுக்கு மத்தியில் அதன் மிகப்பெரிய உரிமை பங்கு வெளியீட்டினையும் ரத்து செய்துள்ளது. இதுவும் மேற்கொண்டு அதானி குழுமத்திற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. மொத்தத்தில் அதானி குழும பங்குகள் தொடர்ந்து இன்று வரையில் சரிவினைக் கண்டு வருவது, இன்னும் முதலீட்டாளர்கள் மத்தியில் உள்ள அச்சத்தினையே காட்டுகின்றது.

 பிரச்சனை தான்

பிரச்சனை தான்

குறிப்பாக இந்தியாவில் தற்போது அரசியல் பிரச்சனையாகவே உருவெடுத்து வருகின்றது எனலாம்.

செபியும் சந்தையில் எந்தக்குழப்பமும் அனுமதிக்கப்படமாட்டாது. இந்த விஷயத்தில் தேவையான எல்லா நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது. ஆக இந்த சரிவானது இனியும் தொடரலாம் என்ற அச்சமே எழுந்துள்ளது. இது மேற்கோண்டு அதானி குழுமத்திற்கு சிக்கலாக அமையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

அதானிக்கே அடி

அதானிக்கே அடி

மொத்தத்தில் விழும் ஒவ்வொரு அடியும் அதானி குழுமத்திற்குன் பலமாய் விழுந்து கொண்டுள்ளது எனலாம். இதன் காரணமாக அதானி குழும பங்குகளும் சேர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றன. இது முதலீட்டாளர்களுக்கும் சிக்கலாம் அமைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

standard chartered temporary halt accepting Adani dollar bonds after Citigroup, Credit Suisse

standard chartered temporary halt accepting Adani dollar bonds after Citigroup, Credit Suisse
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X