ஏஐ தொழில்நுட்பம் மூலம் வேலைவாய்ப்பு துறையில் பெரும் பாதிப்பு ஏற்படுவதாக பல கருத்துகள் இருந்தாலும், இதுக்குறித்து முறையான ஆய்வு நடத்தப்பட்டு அறிவிக்கப்படவில்லை. இந்த நிலையில் அமெரிக்காவின் முன்னணி பல்கலைகழகமான ஸ்டான்போர்டு சமீபத்தில் செய்த புதிய ஆய்வில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் பல துறையில் என்டரி லெவல் அதாவது பிரஷ்ஷர்ஸ் பணிகள் காணாமல் போவதாகவும், அவசியமற்றதாகவும் தெரிவித்துள்ளது.
ஆகஸ்ட் மாதம் ஸ்டான்போர்ட் வெளியிட்ட Canaries in the Coal Mine? என்ற அறிக்கையில் ஏஐ மூலம் வேலைவாய்ப்பு துறையில் தற்போது நடக்கும் முக்கியமான மாற்றங்கள் குறித்து 6 விஷயங்களை பட்டியலிட்டு உள்ளது.

இதில் முக்கியமாக ஏஐ தொழில்நுட்பம் அதிகம் பயன்படுத்தும் துறைகள் மற்றும் பயன்படுத்தாத துறைகளில் 22-25 வயது வரையிலான ஊழியர்களுக்கான வாய்ப்பு 19 சதவீதம் குறைவாக உள்ளது. கடந்த ஆண்டு இது 13 சதவீதமாக மட்டுமே இருந்த நிலையில் தற்போது 6 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
பொருளாதார நெருக்கடி, வர்த்தக பாதிப்பு போன்ற இக்கட்டான சூழ்நிலை வந்தால் பிரஷ்ஷர்களுக்கு குறைவான சம்பளத்தில் வேலை கொடுக்கப்படும் ஆனால் தற்போது ஏஐ மூலம் பல வேலைகளை ஆட்டோமேஷன் செய்யப்படும் காரணத்தால் பிரஷ்ஷர்களுக்கு மிகவும் குறைந்த வேலைவாய்ப்புகளே சந்தையில் இருக்கிறது என்ற உண்மையையும் ஸ்டான்போர்டு ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதேவேளையில் இந்த ஏஐ காலக்கட்டத்தில் மூத்த ஊழியர்கள், நிறுவனத்தில் முக்கிய பதவி, சந்தையில் நல்ல கனெக்ஷன் மற்றும் சிறிய அளவிலான ஏஐ தொழில்நுட்பத்தில் திறன் இருந்தால் போதும், இந்த AI apocalypse-ல் இருந்து தப்பித்துக்கொள்ள முடியும் என்றும் இந்த ஆய்வில் கூறப்படுகிறது.
ஸ்டான்போர்டு அமெரிக்க சந்தையின் தாக்கத்தை அடிப்படையாக கொண்டு தனது ஆய்வின் முடிவுகளை வெளியிட்டு உள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் பிரஷ்ஷர்களுக்கான வாய்ப்பு எப்படியுள்ளது.
இந்தியாவில் ஏஐ, கிளவுட் போன்ற முக்கிய மற்றும் புதிய தொழில்நுட்பத்தில் அதிகப்படியான டிமாண்ட் திறன் பற்றாக்குறை இருக்கும் காரணத்தால் திறன்வாய்ந்த பிரஷ்ஷர்களுக்கு வாய்ப்புகள் பிரகாசமாகவே உள்ளது.
ஆனால் 5 வருடத்திற்கு முன்பு இருந்து மாஸ் ஹயரிங், கேம்பஸ் பிளேஸ்மென்ட் அதிகளவில் குறைந்துள்ளது. இதேபோல் மூத்த நிலை ஊழியர்களுக்கு புதிய தொழில்நுட்பத்தை கற்றுக்கொள்வதில் பெரும் சவால்களை எதிர்கொண்டு வருவதும் இந்தியாவில் நடக்கிறது.


Click it and Unblock the Notifications