அம்மா-னா யாருக்கு தான் பிடிக்காது.. ஸ்டார்பக்ஸ் சிஇஓ-வின் கண்ணீர் பதிவு!

சென்னை: இந்த ஆண்டு மே 12ஆம் தேதி அன்று வந்த அன்னையர் தினத்தில் ஸ்டார்பக்ஸ் தலைமை நிர்வாக அதிகாரி லக்ஷ்மன் நரசிம்மன், தன் தாயார் பாமா நரசிம்மனை நினைவு கூறும் வகையில் ஒரு பிளாக் போஸ்ட்டை பதிவிட்டுள்ளார். அதில் தனது வாழ்க்கையில், தன் தாயார் தனக்கு வெற்றிடத்தை விட்டுச் சென்றதாகவும், ஒவ்வொரு நாளும் அவருடைய வார்த்தைகள் தொடர்ந்து தன்னை ஊக்குவிக்கும் என்றும் கூறியுள்ளார்.

தன் பிளாக் போஸ்டில், ஸ்டார் பாக்ஸ் CEO தனது தாயாரை, குடும்பத்தின் முதுகெலும்பு என்றும், அவர் நகைச்சுவை உணர்வு கொண்டவர் என்றும், பிறருக்கு வழங்கும் குணம் கொண்ட ஒருவர் என்றும் கூறியுள்ளார். எல்லா வகையான உடல்நலப் பிரச்சனைகள் இருந்தாலும், தன் தாய் வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்ததாகவும், தங்களுக்கு பிரகாசமான வாழ்க்கையின் பக்கத்தை காட்டியதாகவும் லக்ஷ்மன் நரசிம்மன் தனது போஸ்டில் குறிப்பிட்டுள்ளார்.

 அம்மா-னா யாருக்கு தான் பிடிக்காது.. ஸ்டார்பக்ஸ் சிஇஓ-வின் கண்ணீர் பதிவு!

மேலும் லக்ஷ்மன் நரசிம்மன்,அவர் இப்படி இருக்கக் காரணம் அவரது தாயார் மற்றும் குடும்பத்தினரால் மட்டும் தான் என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். நரசிம்மன், தனது தாயார் ஆன்மீக என்று வரும்போது இந்துவாக இருந்தாலும், தனது குழந்தைகளுக்கு அனைத்து மதங்களையும் சமமாக மதிக்கக் கற்றுக் கொடுத்தவர். அனைத்து கடவுள்களின் மீதும் நம்பிக்கையை ஏற்படுத்தியவர். கிறிஸ்துமஸ் என்றால் பெத்லகேம்க்கு செல்வார் மற்றும் அவர் கற்பித்த மழலையர் பள்ளி குழந்தைகளுடன் இயேசு பாடல்களைப் பாடுவார். டெல்லியில் ஜமா மஸ்ஜித் மற்றும் மெக்சிகோ சிட்டி பசிலிகா ஆகிய இடங்களுக்கும் தன் தாயார் சென்று வந்ததாகக் கூறியுள்ளார்.

நரசிம்மன், தன் தாயாருடன் அமெரிக்காவில் வசித்த போது, அவர் ரெட்மண்டில் உள்ள கோவிலுக்கும், ரெண்டனில் உள்ள புனித அந்தோணி தேவாலயத்திற்கும் வீகென்ட்-இல் செல்வதுண்டு என்றும், பைபிள் படிப்பு குழுவில் இருந்த ஒரே இந்துவாக தன் தாயார் இருந்ததாகவும், அவர் கிறிஸ்துவ கதைகளையும் அதன் அர்த்தத்தையும் விரும்பி படிப்பவர் என்றும் கூறியுள்ளார்.

பொறுப்பான வாழ்க்கையின் அர்த்தத்தை எனக்கு கற்றுக் கொடுத்தவர். 1997 ஆம் ஆண்டுகளில் எங்களுடன் சேர்ந்து வாழ தொடங்கினார். புனேவில் பிறந்த நரசிம்மன், தான் பிலடெல்பியாவில் படித்தபோது, தனது தாயார் பல்வேறு வீடுகளுக்கு சென்று உதவித்தொகை பெற்றதையும் நினைவு கூர்ந்துள்ளார். ஆனால் அவை எதுவும் தன்னுடைய படிப்பை நிறுத்தவில்லை.

கோவிட் தாக்கிய காலத்தில், தானும் தன் தாயும் எவ்வாறு தனியாக வாழ்ந்தனர் என்பது பற்றியும் எழுதியுள்ளார். அப்போது அவர் ஒரு நிறுவனத்தை நடத்தி வந்ததாகவும், அவருக்கு அவருடைய தாயார் உணவு சமைத்து தந்ததாகவும், இருவரும் சேர்ந்து இந்திய தொலைக்காட்சி தொடர்களைப் பார்த்ததாகவும் மற்றும் ரம்மிக்யூப் விளையாட்டுகளை விளையாடி பொழுதைக் கழித்ததாகவும் கூறியுள்ளார்.

48 வயதிற்குள் இரண்டு குழந்தைகளையும் கணவனையும் இழந்தாலும், அவர் நம்பிக்கையை இழக்கவில்லை. தன் இரண்டு குழந்தைகளையோ அல்லது கணவரையோ மறந்ததும் இல்லை. அதையும் மீறி நம்பிக்கையுடன் வாழ்ந்தார். கடைசியாக தன் தாயார், அவர் வெளியூரில் இருந்து வரும் வரை உடல் நலம் முடியாமலும் காத்திருந்ததாகவும், அதன் பிறகு மார்ச் 24ஆம் தேதி 2024 ஆம் ஆண்டு இறந்ததாகவும் உணர்ச்சிப் பொங்க எழுதியுள்ளார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+