அமெரிக்கா: ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பொறுப்பேற்க இருக்கும் பிரைன் நிக்கோல் தன்னுடைய வீட்டிலிருந்து நிறுவன தலைமையகத்திற்கு பயணிக்க பிரைவேட் ஜெட் வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
50 வயதாக கூடிய பிரைன் நிக்கோல் கூடிய விரைவில் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக பதவி ஏற்க இருக்கிறார். இவருக்கு ஸ்டார்பாக்ஸ் நிறுவனம் மிகப்பெரிய தொகையை ஊதியமாகவும் பல்வேறு சலுகைகளையும் வழங்கியுள்ளது.

குறிப்பாக இவர் தன்னுடைய வீட்டில் இருந்தே ரிமோட் முறையிலேயே வேலை பார்க்கலாம் என்ற சலுகையை ஸ்டார்பக்ஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. அவருக்கு வழங்கப்பட்டுள்ள ஆஃபர் லெட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளதன்படி பிரைன் நிக்கோல் கலிபோர்னியாவிலுள்ள தன்னுடைய வீட்டிலிருந்து நிறுவனப் பணிகளை மேற்கொள்ளலாம் என்றும் அவர் இதற்காக நிறுவன தலைமையகம் அமைந்துள்ள சியட்டிலில் குடியேற வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
அவர் அலுவல் ரீதியாக சியாட்டிலுக்கு வர வேண்டும் என்று பட்சத்தில் நிறுவனம் சார்பாக அவருக்கு ப்ரைவேட் ஜெட் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. தற்போது ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தில் ஹைபிரிட் வேலை நடைமுறை செயல்பாட்டில் இருக்கிறது.
இதன்படி இவர் வாரத்திற்கு மூன்று நாட்கள் சியாட்டிலில் உள்ள தலைமையகத்தில் வந்து பணி செய்ய வேண்டி இருக்கும். எனவே இதற்காக இவருக்கு நிறுவனமே பிரைவேட் ஜெட்டினை வழங்க இருப்பதாக அந்த ஆஃபர் லெட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரைன் நிக்கோலுக்கு ஸ்டார்பக்ஸ் நிறுவனம் 948 கோடி ரூபாயை ஊதிய தொகுப்பாக வழங்கியுள்ளது. ஆண்டு ஊதியம், போனஸ் தொகை, ஈக்விட்டி பங்குகள் ஆகியவை இதில் அடங்கும். பிரைன் நிக்கோல் இதற்கு முன்பு பணியாற்றிய நிறுவனங்களில் கூட தன்னுடைய இருப்பிடத்திலிருந்துதான் பணியாற்றி இருக்கிறார்.
அவர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் எனில் அந்தந்த நிறுவனங்கள் சார்பில் போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இவர் 2008 ஆம் ஆண்டு சிப்போட்டிலே என்ற நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக பணியாற்றிய போது அவருக்கு இதேபோல போக்குவரத்து வசதிகள் செய்து தரப்பட்டன.
ஸ்டார்பக்ஸின் தலைமை செயல் அதிகாரியாக இந்தியாவை சேர்ந்த லட்சுமனன் நரசிம்மன் தான் பணியாற்றி வந்தார். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் வருமானம் கணிசமான அளவு குறைந்துவிட்டது.
குறிப்பாக அமெரிக்கா மற்றும் சீனாவில் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் வருவாய் குறைந்ததை அடுத்து நரசிம்மன் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டு தற்போது பிரைன் நிக்கோலுக்கு அந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஸ்டார்பக்ஸ் நிறுவனம் சிக்கலான நிலையில் இருக்கும் காலகட்டத்தில் பிரைன் நிக்கோல் பதவி ஏற்றிருக்கிறார். இதற்கு முன்பு அவர் சிப்போட்டில் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தபோது அந்த நிறுவனத்தின் வருமானம் 773 சதவீதம் உயர்ந்தது.
More From GoodReturns

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications