மாம்பழத்திற்கும், ஸ்டீலுக்கும் பெயர்போன சேலத்தில் பல முக்கியமான கல்லூரிகள், திறமையான இளம் தலைமுறையினர் பட்டாளம் கொண்ட சந்தையில் காபி காதலர்களை ஈர்க்கும் முயற்சியில் ஸ்டார்பக்ஸ் தனது புதிய கிளையைத் திறந்துள்ளது.
சேலத்தில் டி.என்.சி. மினி மாலில் புதிய ஸ்டார்பக்ஸ் கடை திறக்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், சென்னை, கோயம்புத்தூர் மற்றும் சூளகிரி (கிருஷ்ணகிரி மாவட்டம்) ஆகிய நகரங்களுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் ஸ்டார்பக்ஸ் கடை அமைக்கும் நான்காவது நகரமாக சேலம் உருவெடுத்துள்ளது.

இந்தியா மக்கள் அதிகம் விரும்பி குடிக்கும் ஒரு பானம் டீ, ஆனால் கடந்த சில வருடங்களாக GEN Z மக்களின் வருமானம் ஈட்டும் நிலைக்கு வந்துள்ளதால் இந்தியாவில் காஃபி நுகர்வு குறிப்பாக ப்ரீமியம் காஃபி கடைகளின் நுகர்வு அதிகரித்துள்ளது.
இதற்கு முன்பு இந்தியாவில் காஃபி விற்பனையாகவில்லையா என்றால், நிச்சயம் டீ குடிக்கும் மக்களும் மத்தியில் காஃபி விற்பனை குறைவு தான். இதேபோல் ப்ரீமியம் காஃபி குடிப்போர் எண்ணிக்கை மிகவும் குறைவு, இது அனைத்தும் இன்றைய இளைய தலைமுறையினர் மாற்றியுள்ளனர்.
இந்த மாற்றத்தை ஸ்டார்பக்ஸ் போன்ற பல பெரிய மற்றும் சிறிய காஃபி ஷாப் பிராண்டுகள் பணமாக்கிக்கொள்கிறது. சமீபத்தில் இந்தியாவில் திறக்கப்பட்ட ஸ்டார்பக்ஸ் கடைகள் அனைத்திற்கும் மக்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தனர்.
சில வாரங்களுக்கு முன்பு கோயம்புத்தூரில் ஸ்டார்பக்ஸ் கடை திறக்கப்பட்டு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் தற்போது இளைஞர்களுக்கு முக்கிய ஹேங்கஅவுட் மற்றும் சில்லிங் ஸ்பாட் ஆக ஸ்டார்பக்ஸ் மாறி வருகிறது. இதே ஹைப் தான் கபே காஃபி டே-வுக்கும் இருந்தது மறக்க முடியாது. கபே காஃபி டே என்பது 90ஸ் கிட்ஸ்களின் ஸ்டார்பக்ஸ்.
இந்தியாவில் ஸ்டார்பக்ஸ் கடைகளின் எண்ணிக்கை பற்றிப் பார்க்கும்போது, மும்பையில் அதிகபட்சமாக 39 கடைகளும், டெல்லி மற்றும் NCR (நொய்டா & குருகிராம்) ஆகிய இடங்களில் 25 கடைகளும், பெங்களூருவில் 16 கடைகளும், புனேவில் 10 கடைகளும், ஹைதராபாத்தில் 7 கடைகளும், சென்னையில் 5 கடைகளும் உள்ளன. மேலும், கொல்கத்தாவில் 3 ஸ்டார்பக்ஸ் கடைகள் உள்ளன.
தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர் மற்றும் சேலத்தில் இருந்து பெங்களூரு செல்லும் வழியில் உள்ள சூளகிரி (ஓசூர் அருகில்) ஆகிய நகரங்களில் ஏற்கனவே ஸ்டார்பக்ஸ் கடைகள் இருக்கிறது. இந்த புதிய கடையின் வருகை, சேலம் மக்களுக்கு உலகளவில் பிரபலமான ஸ்டார்பக்ஸ் காபியை சுவைக்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது.
ஸ்டார்பக்ஸ் கடைகள் காபி பிரியர்களுக்கு பிடித்தமான பல்வேறு சுவைகளில் காபி வகைகளை வழங்குவது மட்டுமல்லாமல், ஸ்னாக்ஸ் வகைகளையும் வழங்குகின்றன. இது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரத்தைச் சிறப்பான முறையில் செலவழிக்க ஏற்ற இடமாக இருக்கும்.
சமீபத்தில் உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் ஸ்டார்பக்ஸ் தனது முதல் கிளையைத் தொடங்கிய முதல் நாளில் மக்கள் கூட்டம் கூட்டமாக சென்றது மட்டும் அல்லாமல் மக்கள் கடைக்கு வெளியே பல மணிநேரம் காத்திருந்து குடிக்கும் அளவுக்கு ஆர்வம் காட்டினர்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications