ஸ்டார்பக்ஸ் போன்ற காபி செயின்கள் சிறிய நகரங்களில் போணியாகாது என்று நெகட்டிவ்வாக கூறியவர்கள் ஆன்லைனில் வைரலாகும் இந்த விடியோவை கட்டாயம் பார்க்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் கூறியதற்கு மாறாக ஸ்டார்பக்ஸ் நிறுவனத்துக்கு மக்கள் வரவேற்பு மிக அதிகமாக உள்ளதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் ஸ்டார்பக்ஸ் தனது முதல் கிளையைத் தொடங்கிய சில நாட்களில் இந்த விடியோ சமூகத் தளங்களில் வைரலாகி வருகிறது. விடியோவில் அந்த காபிக் கடையின் வெளியே ஏராளமான பேர் காத்திருந்து உள்ளே செல்வதற்காக நிற்கின்றனர்.

எக்ஸ் தளத்தில் வெளியான இந்த வீடியோவுக்கு இடப்பட்ட தலைப்பில், மக்கள் முன்னர்: ஸ்டார்பக்ஸ் சிறிய நகரங்களில் வெற்றி பெற முடியாது. ஏனென்றால் யாரும் ரூ.300 தந்து காபி வாங்க மாட்டார்கள். இதனிடையே வாரணாசியில், என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த வீடியோவில், கடையில் உள்ள அனைத்து இருக்கைகளிலும் வாடிக்கையாளர்கள் அமர்ந்துள்ளது தெரிகிறது. வெளியிலும் பெரிய வரிசையில் மக்கள் காத்திருப்பதை பார்க்கலாம். வாகன நிறுத்துமிடத்தில் ஏராளமான பைக்குகள் நிறுத்தப்பட்டுள்ளன.
வாரணாசியின் முதல் ஸ்டார்பக்ஸ் கடை பற்றிய இந்த காட்சிகள் சமூக தளங்களில் வைரலாகியுள்ளன. நுணுக்கமாக செதுக்கப்பட்ட அதன் கடைக் கதவு புதிய ஸ்டார்பக்ஸின் பழமையான பெருமையைக் கொண்டுள்ளது. இதைப் பார்த்து பலரும் ஆச்சரியப்படுகின்றனர்.
வாரணாசி கிளை மார்ச் 22 ஆம் தேதி திறக்கப்பட்டது. அறிமுகச் சலுகையாக ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம என்ற சலுகை மார்ச் 22 முதல் மார்ச் 26 வரை வழங்கப்பட்டது.
உங்கள் சொந்தக் கப் என்ற திட்டத்தை ஸ்டார்பக்ஸ் இங்கு விரிவுபடுத்தியுள்ளது.
இந்தியாவில் ஸ்டார்பக்ஸும் டாடா கன்ஸ்யூமர் புராடக்ட்ஸ் நிறுவனமும் இணைந்து ஸ்டார்பக்ஸை நடத்துகின்றன.
இந்நிலையில் ஸ்டார்பக்ஸை அடுக்கு 2, அடுக்கு 3 நகரங்களில் கொண்டு செல்வதற்கு இந்த காபி செயின் திட்டமிட்டுள்ளது. விமான நிலையங்கள், 24 மணிநேரக் கடைகள் போன்று பல்வேறு வழிகளில் புதிய கிளைகளை திறக்க ஸ்டார்பக்ஸ் முடிவு எடுத்துள்ளது. 2028 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 1000 கபேக்களை திறக்கவும் அந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
Story written by: I.jayachandran
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

PPF-ல் ஒரு சின்ன மேஜிக்! லட்சக்கணக்கில் லாபம் பார்க்க இந்த ஒரு டிப்ஸ் போதும்!

பெட்ரோல் விலை லிட்டர் ரூ.119, டீசல் விலை லிட்டர் ரூ.192: உண்மையை போட்டுடைத்த அரசு..!!



Click it and Unblock the Notifications