சென்னை: உலகப் புகழ்பெற்ற காபி ஷாப் பிராண்டான ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து லக்ஷ்மன் நரசிம்மன் நிக்கப்பட்டு உள்ளார். கடந்த ஆண்டு ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய வர்த்தகத்தின் சிஇஓ-வாக நியமிக்கப்பட்ட லக்ஷ்மன் நரசிம்மன்-க்கு பதிலாக அமெரிக்காவின் பிரபல QSR பிராண்டான சிபோட்லே நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த பிரையன் நிக்கோல் நியமிக்கப்பட்டுள்ளார்.
லக்ஷ்மன் நரசிம்மன் தனது சிஇஓ பதவியில் நீக்கப்படுவது உடனடியாக அமலுக்கு வருகிறது என்று ஸ்டார்பக்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளது.

ஸ்டார்பக்ஸ் நிறுவனம் சமீப காலமாக சவாலான சூழலை எதிர்கொண்டு வருகிறது. இந்நிறுவனத்தின் விற்பனை குறைந்து வருவதால் நிறுவனத்தின் செயல்பாடுகளில் மாற்றம் தேவைப்பட்டுள்ளது. இதற்காகவே தலைமையை மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் வர்த்தக நிலைமை சரியாக இல்லாததால் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு போட்டியாகப் பல நவீன மற்றும் புதுமையான உள்நாட்டு காஃபி பிராண்டுகள் வந்துள்ளதால் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தில் வர்த்தகம் கிட்டத்தட்ட படுத்தேவிட்டது.
இந்த சூழலில் தான் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு புதிய தலைமை வேண்டுமென அதன் நிர்வாகம் முடிவு செய்தது. இதை தொடர்ந்து ஸ்டார்பக்ஸ் நிர்வாகம் லக்ஷ்மன் நரசிம்மன் நிக்கிவிட்டு புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக பிரையன் நிக்கோல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் சிபோட்லே நிறுவனத்தில் பணியாற்றிய போது அதன் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பு செய்துள்ளார்.
லக்ஷ்மன் நரசிம்மன் தனது பதவிக்காலத்தில் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் சப்ளை செய்னில் புதுமையை ஏற்படுத்தியுள்ளார். மேலும் கடையின் செயல்பாடுகளை மேம்படுத்தியுள்ளார் என்றும் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த மாற்றம் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்பதால், இது குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பெப்சி கோ மற்றும் பிற நுகர்வோர் பிராண்டுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்ட லக்ஷ்மன் நரசிம்மன், 2023 ஆம் ஆண்டு ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகப் பொறுப்பேற்றார். நீண்ட காலமாக ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் தலைவராக இருந்த ஹோவர்ட் ஷுல்ட்சுக்குப் பிறகு இந்த பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது.


Click it and Unblock the Notifications