தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் வேகமாக வளரும் நகரங்கள் பட்டியலில் முன்னிலையில் இருக்கும் கோயம்புத்தூர் தற்போது நாட்டின் புதிய ஐடி நகரமாக மாறி வருகிறது. பெங்களூர்-க்கு இணையாக ஐடி மற்றும் டெக் நிறுவனங்கள் கோயம்புத்தூரில் தனது அலுவலகத்தை அமைக்கத் திட்டமிட்டு வருகிறது.
இதன் காரணமாக ஐடி துறை மற்றும் ஐடி ஊழியர்களைச் சார்ந்து, விரும்பும் பிராண்டுகள் அடுத்தடுத்துக் கோயம்புத்தூரில் தனது ரீடைல் கடையைத் திறந்து வருகிறது. இதனாலேயே கோயம்புத்தூர் நகரத்தில் வீட்டு மனை விற்பனையைக் காட்டிலும் அலுவலக ரியல் எஸ்டேட், கமர்சியல் ரியல் எஸ்டேட் துறை வர்த்தகம் வளர்ந்து வருகிறது.

இந்த வரிசையில் அமெரிக்கக் காஃபி பிராண்டான ஸ்டார்பக்ஸ் கோயம்புத்தூரில் புதிய மற்றும் முதல் கடையைத் திறந்துள்ளது. இந்தியாவில் இது 400வது கடை என்பது முக்கியமான விஷயம். கோவையில் தற்போது முக்கியமான இடமாக மாறியுள்ள லட்சுமி மில்ஸ் அர்பன் சென்டரில் தான் இந்தப் புதிய ஸ்டார்பக்ஸ் கடை திறக்கப்பட்டு உள்ளது.
இப்புதிய ஸ்டார்பக்ஸ் கடை, கோவை இளைஞர்கள் மத்தியில் புதிய ஹேங்க்அவுட் ஸ்பாட் ஆக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல் டாடா - ஸ்டார்பக்ஸ் நிர்வாகம் உலகத் தரத்தில் தனது கடையை அமைத்து அசத்தியுள்ளது. கடையின் டிசைன், அமைப்பு, இருக்கைகள், லைட்டிங் என அனைத்தும் இளைஞர்களை டார்கெட் செய்யும் வகையிலேயே அமைந்துள்ளது.
இன்றைய இளம் தலைமுறையினர் மத்தியில் காஃபி பிரியர்கள் எண்ணிக்கை சற்று அதிகம் தான், மேற்கத்திய கலாச்சாரத்தை முந்தைய தலைமுறையைக் காட்டிலும் அதிகம் பின்பற்றும் இன்றைய தலைமுறையினரை டார்கெட் ஆக வைத்து அமெரிக்காவின் ஸ்டார்பக்ஸ் இந்தியாவில் இயங்கி வருகிறது.
இந்தியாவில் முதல் நேரடியாகப் பயந்த ஸ்டார்பக்ஸ் டாடா குழுமத்துடன் சேர்ந்து களமிறங்கியது, இதேநேரத்தில் தான் டாடா குழுமம் ரீடைல் வர்த்தகத்தில் அதிகப்படியான கவனத்தைச் செலுத்தத் துவங்கியது. பிற நிறுவனங்களைப் போல் தடாலடியாக ஊருக்கு நாலு கடையைத் திறக்காமல் தனக்கு உரியப் பொறுமை நிதானத்தைக் கடைப்பிடித்தது டாடா குழுமம்.

முதலில் அதிகம் வெளிநாட்டுப் பயணிகள், செலவு செய்யக்கூடிய இளம் தலைமுறையினர் அதிகம் இருக்கும் பெரும் நகரங்களைத் தேர்வு செய்து டாடா குழுமம் ஸ்டார்பக்ஸ் கடைகளைத் திறந்தது. இந்தத் திட்டம் மெல்ல மெல்ல பலன் அளிக்கத் துவங்கியது, கடந்த 2 வருடத்தில் இந்த வெற்றிப்பாதை வேகமாக வளர்ந்து வரும் 2ஆம் தர நகரங்கள் வரையில் விரிவாக்கம் செய்யும் நிலைக்கு ஸ்டார்பக்ஸ் வந்துள்ளது.
இந்தியாவில் ஸ்டார்பக்ஸ் பிராண்டின் மொத்த பிரான்சைஸ்-ஐ டாடா குழுமம் கைப்பற்றி, இந்தப் பிராண்டின் மொத்த வர்த்தகத்தையும் நிர்வாகம் செய்தது வருகிறது. இதேபோல் டாடா குழுமத்திற்கு ஏற்கனவே டீ, காஃபி வர்த்தகத்தில் அனுபவம் இருக்கும் காரணத்தால் ஸ்டார்பக்ஸ் வர்த்தகத்தை எளிதாகத் தூக்கி சாப்பிட்டத்து டாடா குழுமம்.
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி சரிவால் கோயம்புத்தூர் மக்கள் செம குஷி.. நகை வாங்குவோருக்கு பொன்னான வாய்ப்பு..!

கோயம்புத்தூர் ரியல் எஸ்டேட்: 3 வருடத்தில் டபுள் மடங்கு வளர்ச்சி.. இந்த ஏரியா பக்கமே போக முடியாது போலியே..!!

தமிழ்நாட்டு ஐடி ஊழியர்கள் அதிர்ச்சி!! திடீரென ஊழியர்கள் எண்ணிக்கையை குறைத்த Cognizant!!

இன்போசிஸ் தலையெழுத்தை மாற்றப்போகும் புது CEO.. சலில் பாரிக் நிலைமை என்ன..?

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை



Click it and Unblock the Notifications