ஸ்டார்பக்ஸ் பங்குகள் 25% உயர்வு, சிபோட்லே 7.5% சரிவு.. பிரையன் நிக்கோல் தான் புதிய ஸ்டார் சிஇஓ..!

சென்னை: உலகப் புகழ்பெற்ற காபி ஷாப் பிராண்டான ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் ஒரு நாளில் 25 சதவிகிதம் உயர்ந்துள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் சந்தை மதிப்பில் ரூ.21.4 பில்லியன் அதிகரித்துள்ளது. இந்த அதிரடி உயர்வுக்குக் காரணம், இந்நிறுவனத்தின் சிஇஓ-வை மாற்றியது தான்.

கடந்த ஆண்டு ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் உலகளாவிய வர்த்தகத்தின் சிஇஓ-வாக பெப்சி கோ மற்றும் பிற நுகர்வோர் பிராண்டுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்ட லக்ஷ்மன் நரசிம்மன் பொறுப்பேற்றார். இவருடைய நியமனம் ஒட்டுமொத்த இந்தியாவும் வியந்து பார்த்தது, காரணம் அப்போதைய காலகட்டத்தில் அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்கள் இந்தியர்களை தேடி தேடி உயர் பதவியில் அமர்த்தியது.

ஸ்டார்பக்ஸ் பங்குகள் 25% உயர்வு, சிபோட்லே 7.5% சரிவு..  பிரையன் நிக்கோல் தான் புதிய ஸ்டார் சிஇஓ..!

இந்த நிலையில் முழுசா 2 வருடங்கள் கூட முடியாத நிலையில் லக்ஷ்மன் நரசிம்மன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதோடு ஸ்டார்பக்ஸ் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் லக்ஷ்மன் நரசிம்மன் தனது சிஇஓ பதவியில் நீக்கப்படுவது உடனடியாக அமலுக்கு வருகிறது என்று தெரிவித்துள்ளது.

லக்ஷ்மன் நரசிம்மனுக்கு பதிலாக அமெரிக்காவின் பிரபல QSR பிராண்டான சிபோட்லே நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த பிரையன் நிக்கோல் நியமிக்கப்பட்டுள்ளார். இவருடைய நியமனம் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய லாபத்தைக் கொடுத்துள்ளது.

பிரையன் நிக்கோல் அமெரிக்காவின் சிறந்த உணவக தலைமை நிர்வாக அதிகாரியாகப் பாராட்டப்படுகிறார். அவரது நியமனம் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு ஒரு பெரிய வெற்றி என்று பல நிதி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

சிபோட்லே நிறுவனத்தில் பிரையன் நிக்கோல் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த காலத்தில் நிறுவனத்தின் வருவாய் இரட்டிப்பாகியுள்ளது. இதனால், அவரது திறமை குறித்து எந்த சந்தேகமும் இல்லை. ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் பங்குகள் கடந்த காலத்தில் மிகவும் குறைவாகவே உயர்ந்துள்ளன. ஆனால், பிரையன் நிக்கோலின் நியமனத்திற்குப் பிறகு பங்குகள் அதிரடியாக அதிகரித்துள்ளது. இதன் மூலம் நிறுவனத்தின் எதிர்காலம் குறித்த நம்பிக்கை அதிகரித்துள்ளது.

இந்த நியமனத்தின் மூலம் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 25 சதவீதம் அதிகரித்து அதன் சந்தை மதிப்பில் 21.4 பில்லியன் டாலர் அதிகரித்து, இதேவேளையில் சிபோட்லே நிறுவனத்தின் பங்கு மதிப்பு 7.5 சதவீதம் சரிந்து 5.7 பில்லியன் டாலர் மதிப்பீட்டை இழந்தது.

பிரையன் நிக்கோல் தலைமையில் சிபோட்லே நிறுவனத்தின் பங்கு மதிப்பு 2018 மார்ச் 5ஆம் தேதியில் இருந்து 773 சதவீத உயர்வை பதிவு செய்துள்ளது. ஸ்டார்பக்ஸ் இக்காலக்கட்டத்தில் 35 சதவீதம் மட்டுமே வளர்ச்சி அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஸ்டார்பக்ஸ் நிறுவனம் சமீப காலமாக சவாலான சூழலை எதிர்கொண்டு வருகிறது, குறிப்பாக இந்நிறுவனத்தின் விற்பனை குறைந்து வருவதால் நிறுவனத்தின் செயல்பாடுகளில் மாற்றம் தேவைப்பட்டுள்ளது. இதற்காகவே இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் சந்தை நிலைமை சரியாக இல்லாததால் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் வெளிநாட்டு பிராண்டுகளுக்கு போட்டியாகப் பல நவீன மற்றும் புதுமையான உள்நாட்டு காஃபி பிராண்டுகள் வந்துள்ளதால் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தின் வர்த்தகம் கிட்டத்தட்ட படுத்தேவிட்டது. இந்த சூழலில் தான் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்திற்கு புதிய தலைமை வேண்டுமென அதன் நிர்வாகம் முடிவு செய்தது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+