காபி என்றால் யாருக்கு தான் பிடிக்காது. நம்மூரில் தெருக்கு தெரு இப்போது காபி கடைகள் இருப்பது தான் ஏராளம். அந்த காபி/டீ கடையில் எப்போதும் மக்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும்.
இந்நிலையில் உலகம் முழுவதும் காபி நிறுவனங்கள் ஏராளமாக தொடங்கப்பட்டது. அதிலும் அமெரிக்காவின் நிறுவனமான ஸ்டார் பக்ஸ் எனும் காபி நிறுவனம் உலகம் முழுவதும் ஏராளமான கிளைகளை கொண்டுள்ளது.
1971-ம் ஆண்டு ஜெர்ரி பால்ட்வின் செவ் சிகிள், கார்டன் போவ்கர் ஆகிய சான் பிரான்சிசுகோ பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேர் கூட்டாகச் சேர்ந்து இந்த நிறுவனத்தை தொடங்கினார்கள்.

உலகம் முழுவதும் இந்த நிறுவனம் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிளைகளை கொண்டுள்ளது. இந்தியாவில் டாடா குழுமத்துடன் இணைந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் தமிழகத்தில் சென்னை, மற்றும் இந்தியாவின் பிற மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் உள்ளது. மேலும் அமெரிக்கக் காபி பிராண்டான ஸ்டார்பக்ஸ் கோயம்புத்தூரில் புதிய மற்றும் முதல் கடையைத் திறந்துள்ளது.
இந்தியாவில் இது 400வது கடை என்பது முக்கியமான விஷயம். கோவையில் தற்போது முக்கியமான இடமாக மாறியுள்ள லட்சுமி மில்ஸ் அர்பன் சென்டரில் தான் இந்தப் புதிய ஸ்டார்பக்ஸ் கடை திறக்கப்பட்டுள்ளது.இப்புதிய ஸ்டார்பக்ஸ் கடை, கோவை இளைஞர்கள் மத்தியில் புதிய ஹேங்க்அவுட் ஸ்பாட் ஆக அமைந்துள்ளது. இதேபோல் டாடா - ஸ்டார்பக்ஸ் நிர்வாகம் உலகத் தரத்தில் தனது கடையை அமைத்து அசத்தியுள்ளது.
இந்த ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தில் காபி விலை ஒன்று சுமார் 300 ரூபாய்க்கும் மேல் இருக்கும். இதனை பலரும் ஒருமுறையாவது குடித்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவது உண்டு.
அது தற்போது நம்ம திருப்பூரில் wedding stall ல் வந்திருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இங்கு வரும் மக்கள் ஸ்டார்பக்ஸ் முன்னிலையில் செல்பி எடுத்துக்கொண்டனர்.மேலும் தனக்கு பிடித்த சுவையில் மிக குறைந்த விலையில் வாங்கி ருசித்தும் வருகின்றனர்.
இதன் காரணமாக இன்ஸ்டாகிராமில் இளைஞர் ஒருவர் (letsvibecoimbatore)என்னும் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றன.


Click it and Unblock the Notifications