முதல் இடத்தை பிடித்தது 'ஸ்டார்காம் இந்தியா': RECMA பிஸ்னஸ் ரிப்போர்ட் 2021

By Staff
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பப்ளிசிஸ் குரூபே இந்தியாவின் முக்கியப் பிரிவாக விளங்கும் ஸ்டார்காம் இந்தியா, RECMA நியூ பிஸ்னஸ் பேலென்ஸ் ரிப்போர்ட் 2021ல் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

 

RECMA என்பது சர்வதேசச் சந்தை ஆய்வு நிறுவனம், இந்த RECMA நியூ பிஸ்னஸ் பேலென்ஸ் ரிப்போர்ட் 2021 அறிக்கையில் உலக நாடுகளில் இருக்கும் முன்னணி மீடியா ஏஜென்சியை ஆய்வு செய்து பட்டியலிட்டுள்ளது.

முதல் இடத்தை பிடித்தது 'ஸ்டார்காம் இந்தியா': RECMA பிஸ்னஸ் ரிப்போர்ட் 2021

இந்த முக்கிய ஆய்வு பட்டியலில் நுகர்வோர் பொருட்கள், மொபைல் ஆப் வர்த்தகத்தில் புதிய வர்த்தகத்தில், அதிக வர்த்தகத்தை (competitive pitch) பெற்றுள்ள நிறுவனமாக ஸ்டார்காம் தேர்வு செய்யப்பட்டு முதல் இடத்தைப் பெற்றுள்ளது.

இதேபோல் ஹியூமென் எக்ஸ்பீரியன்ஸ் ஏஜென்சி profile classification பிரிவில் முன்னோடியாக உள்ளது, கடந்த ஆண்டை விடவும் சுமார் 14 புள்ளிகள் வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் RECMA அமைப்பு இந்த ஆய்வை வைடலிட்டி மற்றும் ஸ்டக்சர் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தான் ஆய்வு செய்துள்ளது.

முதல் இடத்தை பிடித்தது 'ஸ்டார்காம் இந்தியா': RECMA பிஸ்னஸ் ரிப்போர்ட் 2021

இதுகுறித்து ஸ்டார்காம் இந்தியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ரதி கங்கப்பா கூறுகையில் புதிய வர்த்தகத்தில் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற்றுள்ள நிறுவனங்களில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது பெரும் மகிழ்ச்சி அளிக்கிறது.

ஸ்டார்காம் நிறுவனத்தின் வாடிக்கையாளர் புரிதல் மற்றும் தரவு அடிப்படையிலான நுண்ணறிவு, ஒருங்கிணைந்த திறமை, போட்டி விலை நிர்ணயம் மற்றும் குறைபாடற்ற செயல்படுத்தல் ஆகியவற்றின் ஒருங்கிணைந்த முயற்சியின் வாயிலாகலே முதல் இடத்தை அடைந்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.

முதல் இடத்தை பிடித்தது 'ஸ்டார்காம் இந்தியா': RECMA பிஸ்னஸ் ரிப்போர்ட் 2021

மேலும் இந்த வளர்ச்சியைத் தொடர்வோம் எனவும் ரதி கங்கப்பா நம்பிக்கை தெரிவித்துள்ளார். RECMA அமைப்பு உலகளவிலான மீடியா ஏஜென்சி நிறுவனங்களை ஆய்வு செய்து பல்வேறு சந்தை ஆய்வறிக்கையை வெளியிட்டு வருகிறது.

RECMA அமைப்பு 90 நாடுகளில் இருந்து சுமார் 1400 மீடியா ஏஜென்சி நிறுவனங்களிடம் இருந்து தரவுகளைப் பெற்று இந்த ஆய்வறிக்கையை வெளியிடுகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: starcom india recma
English summary

Starcom India bags top rank in RECMA New Business Balance Report 2021

Starcom India bags top rank in RECMA New Business Balance Report 2021
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X