இந்திய பிராட்பேண்ட் சேவை துறை புதிய மாற்றத்தை எதிர்கொள் உள்ளது. எலான் மஸ்க் தலைமையிலான ஸ்டார்லிங்க் நிறுவனம், இந்தியாவில் தனது செயற்கைகோள் அடிப்படையிலான பிராட்பேண்ட் சேவையை நீண்ட காத்திருப்புக்கு பின்பு இந்தியாவில் தொடங்க உள்ளது. ஆனால் தற்போது பிரச்சனையே ஸ்டார்லிங்க் சேவைக்கான கட்டணம் தான்.
இந்தியாவில் ஏற்கனவே மலிவான கட்டணத்தில் கிடைக்கும் பிராட்பேண்ட் சேவைக்கு, எதற்காக அதிகப்படியான கட்டணம் செலுத்த வேண்டும் என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்துள்ளது.

ஸ்டார்லிங்க் இந்தியாவில் ரீடைல் வாடிக்கையாளர்களுக்கு மாதம் ரூ.2,500 முதல் 3,500 வரை வசூலிக்கும் என்று தெரிகிறது. இது கடல், விமானம், ரீடைல் வர்த்தகம், நிறுவனங்கள் போன்று பல்வேறு துறைகளுக்கும் சேவை அளிக்க உள்ளதாக தெரிகிறது.
டிசம்பர் 8 அன்று ஸ்டார்லிங்க்-ன் இந்திய வெப்சைட்டில் ரூ.8,600 என்ற விலை காட்டப்பட்டது, ஆனால் சில மணி நேரத்தில் இந்த விலை நீக்கப்பட்டது. ஸ்டார்லிங்க் நிறுவனம் இதை தொழில்நுட்ப கோளாறு என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை துவங்குவதற்காக இந்நிறுவனத்தின் பிஸ்னஸ் ஆப்ரேஷன்ஸ் பிரிவின் துணை தலைவரான லாரென் தனது உயர்மட்ட அதிகாரிகள் உடன் மத்திய தொலைதொடர்பு அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா-வை சந்தித்தார். இந்த பதிவுக்கு எலான் மஸ்க் இந்தியாவில் சேவையை துவங்குவதில் ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஸ்டார்லிங்க் விலை:
ஸ்டார்லிங்க் இந்தியாவின் ரெசிடென்ஷியல் திட்டம் மாதம் ரூ.8,600 என்று வெளியானது, இதில் அன்லிமிடெட் டேட்டா, 30 நாள் டிரையல் உள்ளது என முன்பு. ஹார்ட்வேர் கிட் (ஆன்டெனா, ரவுட்டர், கேபிள்கள்) ஆகியவற்றை தனியார் ரூ.34,000 கொடுத்து வாங்க வேண்டும் என அறிவித்தது. இதன் மூலம் முதல் மாத செலவு மட்டும் ரூ.42,600.
இந்தியாவில் இணைய வேகம் பெரிய அளவில் மேம்பட்டு உள்ள வேளையில் ஜியோ, ஏர்டெல் போன்ற உள்நாட்டு நிறுவனங்களின் ரூ.500-1,000 தொகைக்கு அதிவேக பிராட்பேண்ட் சேவை திட்டங்களை அளித்து வரும் வேளையில் ஸ்டார்லிங்க் 3-5 மடங்கு அதிக கட்டணத்தில் தனது சேவையை அறிமுகம் செய்கிறது.
ஏற்கனவே ஸ்டார்லிங்க் பிராட்பேண்ட் சேவை மக்கள் அதிகம் கொண்ட பகுதியில் சிறப்பாக செயல்பாடது என்ற கருத்து நிலவும் வேளையில் ரூ.42,600 விலையில் அறிமுகமாகும் இச்சேவையை மக்கள் எப்படி எதிர்கொள்வார்கள் என்ற கேள்வி உள்ளது. இதேபோல் விலை அடிப்படையில் பார்க்கும் போது சந்தை நிபுணர்கள் இது இந்தியாவில் வெற்றி பெறுமா என்று கேள்வி எழுப்புகின்றனர்.
ஸ்டார்லிங்க் பிராட்பேண்ட் சேவை தொழில்நுட்ப அடிப்படையில் பிரம்மிக்க வைக்கும் விஷயம் என்பதில் எவ்விதமான மாற்றுக்கருத்தும் இல்லை, ஆனால் இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட பகுதியிலும், அதிகம் விலை கொண்ட சேவை வெற்றி பெறுமா என்பது தான் தற்போதைய கேள்வி. இதேபோல் அதிவேக இண்டர்நெட் சேவை இல்லாத மலை பகுதிகளில், ராணுவ பகுதிகள், அடர்ந்த காடுகள் பகுதிகளில் ஸ்டார்லிங்க் சேவை முக்கியமானதாக மாற வாய்ப்புள்ளது.

ஜியோ, ஏர்டெல் பிராட்பேண்ட் திட்டங்கள்:
ரிலையன்ஸ் ஜியோ ஃபைபர் ரூ.399 திட்டம் 30 Mbps வேகம், 3.3 TB டேட்டா கொண்டது. ரூ.888 திட்டம் நெட்ஃப்ளிக்ஸ் உட்பட 15 OTT சேவைகளுடன் 30 Mbps வேகத்தில் பிராட்பேண்ட் சேவை அளிக்கிறது.
இதேபோல் ஏர்டெல் Xstream ஃபைபர் ரூ.499 திட்டம் 40 Mbps, அன்லிமிடெட் டேட்டா, Xstream பிளே உட்பட 22 OTT சேவை அளிக்கிறது. ரூ.999 திட்டம் 200 Mbps, அமேசான் பிரைம், நெட்ஃப்ளிக் உட்பட சேவையும் உள்ளது. இவை ரூ.500-1,000 வரை, ஸ்டார்லிங்க்கை விட மிகக் குறைவு. இந்தியாவின் விலை பாதிப்பு உள்ள சந்தையில் ஸ்டார்லிங்க் போட்டியிடுவது கடினம்.
ஸ்டார்லிங்க் இந்தியாவில் கிராமங்கள், தொழில் துறைகளுக்கு உதவும். ஆனால் ஜியோ, ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் விலை குறைந்த திட்டங்கள் தான் மக்கள் மத்தியில் ஆதிக்கம் செலுத்தும். JM ஃபைனான்ஷியல் இதுக்குறித்து கூறுகையில், ஸ்டார்லிங்க் இந்தியாவில் கூடுதல் சேவையாக மட்டுமே இருக்கும். ஸ்டார்லிங்க் விலையை குறைத்தால் வெற்றி பெறலாம்.
இதேவேளையில் ஸ்டார்லிங்க் இந்தியாவில் புதிய விலையை அதன் அறிமுகத்தின் போது வெளியிடலாம் என்ற கருத்தும் உள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?



Click it and Unblock the Notifications