இந்தியாவின் அண்டை நாடான பூட்டான் தனது இண்டர்நெட் இணைப்பை மேம்படுத்துவதில் மாபெரும் முன்னேற்றத்தை எட்டியுள்ளது. உலகின் மிகப்பெரிய பணக்காரராக இருக்கும் எலான் மஸ்கின் வெளிநாட்டு நிறுவனமான ஸ்டார்லிங்க் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட்டுக்கு பூட்டான் அரசு டிசம்பர் 2024 இல் சேவை வழங்க ஒப்புதல் வழங்கிய நிலையில் இன்று முதல் பூட்டான் நாட்டில் செயற்கைகோள் மூலம் இயங்கும் அதிகவேக இண்டர்நெட் சேவையை துவங்கியுள்ளது.
இன்று முதல், பூட்டான் நாட்டில் இருக்கும் அனைத்து வீடுகளும், வணிக நிறுவனங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் மொபைல் வாடிக்கையாளர்களுக்கும் ஸ்டார்லிங்கின் அதிவேக இணைய சேவையைப் பெற முடியும்.

இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையை அறிமுகம் செய்ய பல வருடங்களாக எலான் மஸ்க் நிறுவனம் முயற்சி செய்து வரும் வேளையில், இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களாக ஏர்டெல், ஜியோ ஆகியவை தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வருகிறது. இதனால் ஸ்டார்லிங்க் சேவையை துவங்க முடியாமல் உள்ளது.
இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டால் விலை அதிகமாக இருக்கும் என கூறப்பட்ட நிலையில் இந்தியாவின் அண்டை நாடான பூட்டானில் எந்த கட்டணத்திற்கு ஸ்டார்லிங்க் சேவை வழங்கப்படுகிறது என்பதை இப்போது பார்ப்போம்.
பூட்டான் தகவல் மற்றும் ஊடக ஆணையம் சமீபத்தில் ஸ்டார்லிங்கின் கட்டண பட்டியலை வெளியிட்டது. ஸ்டார்லிங்க் சேவை பல்வேறு தேவைகள் மற்றும் பட்ஜெட்களைப் பூர்த்தி செய்யும் வகையில் பல திட்டங்களை வழங்குகிறது. ஒவ்வொரு திட்டத்திற்கு அதன் மாத கட்டணம் வேறுபடுகின்றன.
வீடுகளுக்கு அளிக்கப்படும் அடிப்படை சேவைக்கு Nu 3,000 முதல் அதிக திறன் கொண்ட நிறுவன சேவைகளுக்கு Nu 21 லட்சம் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
குடியிருப்பு வாடிக்கையாளர்களுக்கு, ஸ்டார்லிங்க் பல விருப்பங்களை வழங்குகிறது. "ரெசிடென்ஷியல் லைட்" திட்டம், மாதம் Nu 3,000க்கு அதாவது 2,976.33 இந்திய ரூபாய். ஒரு பூட்டான் நூ நாணயத்திற்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 0.99 ரூபாய். இதனால் 1000 நூ என்றால் 992.08 ரூபாய்.
இந்த "ரெசிடென்ஷியல் லைட்" திட்டத்தின் கீழ் ஸ்டார்லிங்க்-ன் வரம்பற்ற டேட்டாவுடன் 23 முதல் 100 Mbps டவுன்லோடு வேகத்தை வழங்குகிறது.
சற்று அதிக விலை கொண்ட "ஸ்டாண்டர்ட் ரெசிடென்ஷியல்" திட்டம், மாதம் Nu 4,200க்கு, 25 முதல் 110 Mbps வரையிலான வேகத்தில் இண்டநெட் சேவையை வழங்குகிறது.
இந்த விலை பூட்டான் நாட்டின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களின் சேவை கட்டணத்திற்கு இணையாக வழங்கியுள்ளது. பூட்டான் டெலிகாம் (BT) வழங்கும் 23 Mbps இணைப்புக்கு சுமார் Nu 12,650 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் 25 Mbps இணைப்புக்கு சுமார் Nu 13,750 ஆகும்.
பூட்டானில் உள்ள மற்றொரு இணைய சேவை வழங்குநரான தாஷிசெல், 2 முதல் 99 Mbps வரையிலான வேகத்திற்கு Nu 675 இல் தொடங்கும் நிலையான பிராட்பேண்ட் சேவையை வழங்குகிறது, மேலும் Nu 1,000 இல் பிரீமியம் பேக்கேஜ்-ஐ வழங்குகிறது.
ஸ்டார்லிங்க் இந்தியா வந்தாலும், இந்தியாவில் இருக்கும் டெலிகாம் நிறுவனங்களுக்கு இணையான சேவையை தான் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications