இந்தியாவில் அதிவேக இன்டர்நெட் சேவையை வழங்க வேண்டும் என்று பல நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றன. ரிலையன்ஸ் ஜியோ சாட்டிலைட் அடிப்படையான இணைய வசதியை வழங்க ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. இந்த கூட்டு முயற்சியின் மூலம் ஜியோ நிறுவனம் நாடு முழுவதும் உள்ள தங்கள் சில்லறை விற்பனை நிலையங்களில் ஸ்டார்லிங்க் நிறுவனம் தயாரிக்கும் ஹார்டுவேரை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
குறிப்பாக சாட்டிலைட் மூலம் இணைய வசதி பெறுவதற்கு தேவையான கருவிகளை தான் ஜியோ விற்பனை செய்யப் போகிறது. ஸ்டார்லிங்க் நிறுவனம் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமானது. இந்த நிறுவனம் செயற்கைக்கோள் மூலம் இணைய சேவையை வழங்கி வருகிறது. ஆனால் இந்த ஹார்ட்வேர் விற்பனை இன்னும் சிறிது காலம் கழித்து தான் தொடங்கும். ஏனெனில் இந்தியாவில் தங்களுடைய சேவையை வழங்குவதற்கு ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் இந்திய அரசிடமிருந்து போதுமான அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதி கிடைத்தவுடன் ஜியோ ஸ்டோர்கள் மூலம் ஸ்டார்லிங்க் ஹார்டுவேரை மக்கள் வாங்கி பயன்படுத்தத் தொடங்கலாம்.

இதற்காக ஜியோவும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனமும் ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளன. இதன் மூலம் ஸ்டார்லிங்கின் பிராட்பேண்ட் சேவையை ஜியோ இந்திய மக்களுக்கு வழங்க உள்ளது. ஜியோ மட்டுமின்றி பார்தி ஏர்டெல் நிறுவனமும் எலான் மஸ்கிற்க்கு சொந்தமான சாட்காம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுள்ளது.
ஜியோ நிறுவனம், ஸ்டார்லிங்க் ஹார்டுவேர் விற்பனை மட்டுமின்றி, அதை எப்படி இன்ஸ்டால் செய்வது? அதற்கான கஸ்டமர் சப்போர்ட் சேவை போன்ற அனைத்தையும் வழங்கவுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ ப்ளாட்பார்ம் லிமிடெட் மார்ச் காலாண்டு நிதிநிலை அறிக்கை சமீபத்தில் வெளியிட்டது.
அதில் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இந்நிறுவனத்தின் வருவாய் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 17.8 சதவீதம் அதிகரித்து ரூ. 39,853 கோடியாக உள்ளது. ஜியோவின் இந்த புதிய முயற்சியின் மூலம் இணைய வசதியே கிடைக்காத கிராமப்புறங்களில் மற்றும் தொலைதூரப் பகுதிகள் பலனடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு தங்களுடைய வாடிக்கையாளர் நெட்வொர்க்கை இதன் மூலம் ஜியோ அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.
2025-ஆம் ஆண்டின் மார்ச் மாத நிலவரப்படி, ஜியோவின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 488 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளது. இதில் 191 மில்லியன் பயனர்கள் 5ஜி சேவையைப் பயன்படுத்தி வருகின்றனர். ஆக ஜியோ மற்றும் ஸ்டார்லிங் இணைந்து இந்தியாவில் இணைய அணுகலை இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களும் தடையற்ற சேவையை பெறுவது இதனால் சாத்தியமாகும்.
More From GoodReturns

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?



Click it and Unblock the Notifications