பணி புரியும் பலர் கூடுதலாக சம்பாதிக்க வேண்டும் என்று எண்ணுகின்றனர். ஏனெனில் ஒருவர் வாங்கும் சம்பளம் குடும்பச் செலவுக்கே போதாமல் உள்ளது. அந்த அளவுக்கு விலைவாசி உயர்வு மக்களை வாட்டி வதைக்கிறது. அப்படி இருக்கையில் ஏதாவது தொழில் தொடங்கி கூடுதல் வருமானம் ஈட்ட வேண்டும் என்று நினைப்பவர்களுக்காக தான் இந்தப் பதிவு.
பணி புரியும் போது கூட பரவாயில்லை கடன் வாங்கி மறு மாத சம்பளத்தை வைத்து அந்த கடனை கொடுத்து ஓட்டிவிடலாம். ஆனால் ஓய்வு பெற்ற பிறகு என்ன செய்வது? என்பது தான் இங்கு பலரின் கேள்வியாக இருக்கிறது. இன்றைய பதிவில் நீங்கள் ஓய்வுக்கு பின்னரும் வீட்டில் உட்கார்ந்து மாத வருமானம் பார்க்கக்கூடிய ஒரு பிசினஸ் ஐடியாவை தான் பார்க்கப் போகிறோம். இதன் மூலம் ஒவ்வொரு நாளும் கணிசமான வருமானம் ஈட்ட முடியும்.

ஃபுட் ட்ரக் பிசினஸ்: சமீப காலமாகவே பெரு நகரங்கள் தொடங்கி சிறுநகரங்கள் வரை இந்த ஃபுட் ட்ரக் பிசினஸ் வேகமாக பரவி வருகிறது. இந்த உணவு வண்டி வணிகத்தில் பாரம்பரிய உணவகங்களுக்கு மாற்றாக நான்கு சக்கர வாகனங்களில் சமையலறை அமைத்து புதுமையான உணவுகளை சமைத்து விற்பனை செய்யலாம். இதற்கு வண்டி மற்றும் இதர சாமான்கள் வாங்குவதற்கு முதலில் முதலீடு செய்ய வேண்டி வரலாம்.
உங்களுக்கு நன்கு சமைக்க தெரிந்திருந்தால் போதும்.. உங்களுக்கென ஒரு வாடிக்கையாளர் தளத்தை உருவாக்க முடியும். அதுவும் வீட்டு முறையில் செய்யப்படும் உணவுகளை நீங்கள் விற்பனை செய்யத் தொடங்கினால் உங்களைத் தேடி வாடிக்கையாளர்கள் வரத் தொடங்குவார்கள்.
பொதுவாக உணவு தயாரிக்கவும், பரிமாறவும் தேவையான சமையலறை உபகரணங்களுடன் கூடிய ஒரு வாகனம் தான் ஃபுட் ட்ரக். இது பெரிய ட்ரக்குகள் அல்லது பெரிய வேன்களில் அமைக்கப்படும். இந்த வகை வண்டிகளை வெவ்வேறு இடங்களுக்கு நகர்த்தி சென்று மக்களுக்கு சுவையான உணவுகளை வழங்க முடியும். உணவகத்தை அமைப்பதற்கு வாடகை, உட்புற வடிவமைப்பு, பெரிய செலவுகள், அதிக அளவிலான ஊழியர்கள் போன்றவை தேவைப்படும்.
ஆனால் உணவு வண்டிக்கு இவை எதுவும் தேவையில்லை. ஒரு வாகனம் அதில் சமையல் உபகரணங்கள் மற்றும் அதற்கு தேவையான அனுமதிகள் இருந்தால் போதும் தொழில் முனைவோருக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. அதோடு உணவு வண்டியின் மற்றொரு முக்கிய அம்சம் என்னவென்றால் நீங்கள் தேவைக்கேற்ப கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களுக்கு நகர்த்திச் சென்று விற்பனை செய்யலாம். உதாரணமாக கல்லூரி வளாகங்கள், அலுவலக பகுதிகள், பூங்காக்கள், திருவிழாக்கள் போன்ற பல பகுதிகளுக்கு நகர்த்திச் சென்று விற்பனை செய்ய முடியும்.
வாடகை, மின்சாரக் கட்டணம், பராமரிப்பு போன்ற உணவகத்தின் நிலையான செலவுகளைக் குறைத்து, லாப வரம்பை அதிகரிக்க உதவுகிறது. உணவு வண்டிகளில் விற்பனை செய்பவர்கள் ஒரு குறிப்பிட்ட வகை உணவில் அதிக கவனம் செலுத்துகின்றனர். உதாரணமாக பர்கர், தோசை வகைகள், தந்தூரி, ப்ரைட் சிக்கன் போன்ற உணவுகளை தனித்துவமாக தேர்ந்தெடுத்து அந்த உணவை மட்டும் விற்பனை செய்கின்றனர்.
இதனால் இது போன்ற உணவுகளைப் பிடிக்கும் வாடிக்கையாளர்கள் அந்த ஒரு கடையை மட்டும் தேர்ந்தெடுத்து செல்கின்றனர். கல்லூரிகளில் படிக்கும் நபர்களும் வீட்டிற்கு வந்த பிறகு உணவு வண்டியில் விற்பனை செய்வதை பார்க்க முடிகிறது. உங்களுக்கு வாடிக்கையாளர் அதிகரித்து விற்பனையும் அதிகரித்தால் இதன் மூலம் நாளொன்றுக்கு ரூ.500 முதல் ரூ.5,000 வரையில் வருமானம் பெறலாம்.
More From GoodReturns

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!



Click it and Unblock the Notifications